வாழ்க வளமுடன்!

Friday, November 26, 2010

விண்வெளியை சுத்தம் செய்ய 9,000 கோடி

பூமியைச் சுற்றியுள்ள விண்வெளி பகுதியை  சுத்தம் செய்ய ரஷ்யா 9,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. பல்வேறு  ஆராய்ச்சிகளுக்காக, உலக நாடுகள் அவ்வப்போது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு  அனுப்பி வருகின்றன. இவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு செயலிழந்து  விடுகின்றன.





இன்னும் சில செயற்கைக் கோள்கள்  தோல்வியடைகின்றன. இதனால் ஏற்படும் கழிவுப் பொருட்கள் வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, உடைந்த செயற்கைக் கோள்களின்  பாகங்களை அகற்றுவதற்காக ரஷ்ய விண்வெளி கழகம் (எனர்ஜியா) திட்டமிட்டுள்ளது.



இதற்காக, 9 ஆயிரம் கோடி செலவில் ஒரு  அணுசக்தியில் இயங்கும் ஒரு செயற்கைக் கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும். இது  மிதக்கும் கழிவுகளை பூமியை நோக்கி தள்ளிவிடும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள்  சுமார் 600 செயற்கைக் கோள்களின் உடைந்த பாகங்கள் விண்வெளியிலிருந்து  அகற்றப்படும் என எனர்ஜியா தெரிவித்துள்ளது. எனினும் இந்த செயற்கைக்கோள்  2020ல் தான் தயாராகும்.

1 comment: