சிறுவயது குழந்தைகள் அளவுக்கு அதிகமான குளிர்பானங்கள் அருந்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை குளிர்பானங்களை எடுத்து கொள்வது 26 சதவிகிதம் வரை நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைக்கு கொண்டு செல்கிறது.
மேலும் உடல் எடையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இது பற்றி லண்டனை சேர்ந்த மருத்துவரும், பேராசிரியருமான நிக் பைனர் கூறும் போது, குழந்தைகளுக்கு தேவையான சக்தி சர்க்கரை செறிவூட்டப்பட்ட இவ்வகை குளிர்பானம் மற்றும் உணவுப்பொருளில் இருந்து கிடைக்கிறது. எனினும் இது அதிக உடல் எடைக்கும் வழிவகுக்கிறது என்றார்.
மேலும், மருத்துவ ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த ஊட்டசத்து நிபுணர் சூசன் ஜெப் கூறியதாவது, அதிகமான கலோரி நமக்கு தேவையாக இருக்கும் போது அந்த உணவுபொருள்களையும் அதிகமாக எடுத்து கொள்கிறோம். இதனால் உணவில் உள்ள சர்க்கரை அளவானது இன்சுலின் என்ற ஹார்மோனை அதிக அளவில் சுரக்க செய்கிறது. நாளடைவில் இன்சுலின் சுரப்பது குறைய ஆரம்பிக்கும் போது அது நீரிழிவு நோயை உண்டு பண்ண வழிகோலுகிறது என்று தெளிவுபடுத்தினார்.
No comments:
Post a Comment