வாழ்க வளமுடன்!

Friday, September 16, 2011

EGO






ஈகோ என்றால் என்ன?


ஈகோ என்றால் ஆணவம் அல்லது உயர்வு தாழ்வு மனப்பாங்கு. அதாவது தனக்கு ஒன்றைப்பற்றிய வாழ்வியல் அறிவு அல்லது பொருளாதாரம் தம்மைச் சுற்றிலிமிருப்பவர்களைவிட அதிகமாக் இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பது. இங்கு நாம் கவனிக்கவேண்டியது இவற்றில் அவர்கள் முழுமையடைந்திருக்க மாட்டார்கள். கூர்ந்து நோக்கினால் அவர்கள் உடனிருப்பவர்களைவிட சிறிது அதிகமாக பொருளறிவோ அல்லது பொருளோ கொண்டிருப்பார்கள் அவ்வளவே. இம்முழுமை பெறாத நிலை அவர்களை ஆணவம் கொள்ளச்செய்கிறது.


எனவே ஈகோ இரண்டு வகைப்படும்:
1. பொருளைப்பற்றிய அறிவு
2. செல்வம் கொண்டிருத்தல்


ஆணவம் எப்பொழுது வெளிப்படுகிறது?


உடனிருப்பவர்கள் தம்மைவிட தகுதியில் குறைந்தவர்கள் என எண்ணும்போது அது வெளிப்படுகிறது. ஆணவம் கொள்ளும் மனிதனின் தன்மைக்கேற்ப ஒன்று மற்றவர்களை காயப்படுத்துமாறோ அல்லது அவர்கள் சுய இரக்கம் கொள்ளுமாறோ வெளிப்படும்.


ஆனால் ஆணவம் கொள்ளும் மனிதன் எப்பொழுது  அவனைவிட அவன் ஆணவம் கொள்ளும் விஷயத்தில் பிற ஒரு மனிதன் தகுதி அதிகமாக இருப்பதாக உணரும்பொழுது அவனின் ஆணவம் வாலைச்சுருட்டிக் கொண்டு அமைதி காக்கும்.


ஈகோ தேவையா?


ஈகோ ஆசையை தோற்றுவிக்கும்; ஆசை தேடுதலைத்தூண்டும். பிறகு அந்த ஆசை நிறைவேறும். எனவே மற்றவர்களைப் பாதிக்காதவரை ஈகோ தேவைதான். இல்லையெனில் நாம் இவ்வுலக வாழ்வை மற்றவர்கள் வெற்றி எனும் சொல்லத்தக்க வகையில் நாம் நடத்த முடியாது. ஏனெனில் ஒவ்வருவரும் லௌதீக வாழ்வில் பிறரின் அங்கீகாரத்தை எதிர்பார்கிறோம். 


ஈகோவை விட்டு எப்படி வெளிவருவது?


அனைவரும் சமம் என நினைக்கவும்; அதற்கு என்ன செய்வது?


பொருளைப்பற்றிய அறிவு: நாம் எந்த விஷயத்தில் மிகுந்த அறிவு கொண்டிருக்கிறோமோ அதைவிடுத்து மற்ற விஷயத்தில் மூன்றாமவரைவிட அறிவு குறைந்து காணப்படுவதை உணருவது. அதாவது மற்ற விஷயத்தில் exposure இல்லாததை உணருவது.


செல்வம் கொண்டிருத்தல்: தானம் செய்யவும் அல்லது முடிந்தால் மூன்றாமவரையும் முன்னேற்றவும். இதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வு நீங்கும். ஆணவமும் அழியும்.

1 comment: