வாழ்க வளமுடன்!

Wednesday, January 25, 2012

இளநரையே இல்லாமல் போக...

நம்மில் பலருக்கு 15 வயது முதலே தலைமுடி நரைத்து விடுகிறது. அதற்குக் காரணம் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.


இன்றைய உணவு முறையில் எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால்:
அ) அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரிக்கிறது.
ஆ) பித்த நீரானது தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.
இத்தகைய பிரச்சனையைப் போக்க அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். மேலும் பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் சுத்தமான தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது.
உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இளநரையைப் போக்க மூலிகை எண்ணெய்:
1) தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
2) சீரகம் - 1 ஸ்பூன்
3) சோம்பு - 1/2 ஸ்பூன்
4) சின்ன வெங்காயம் - 3
5) கறிவேப்பிலை - 2 இணுக்கு
6) கொத்தமல்லலி - சிறிதளவு
7) நெல்லி வற்றல் - 10 கிராம்
8) வெட்டிவேர் - 5 கிராம்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும். இவையெல்லாம் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்

2 comments:

  1. Copy paste panninal enkirunthu pannineergal ennru kurippidavum.

    ReplyDelete
    Replies
    1. சில நானே சிந்தித்து எழுதுவது. சில பிறர் சொல்லக்கேட்டு எழுதுவது. சில மெயிலில் வருவது. சில பேப்பரில்/இணையதளத்தில் வருவது. இப்படி எல்லாம் கலந்த கலவைதான் இந்த ப்ளாக்

      Delete