வாழ்க வளமுடன்!

Tuesday, February 28, 2012

என் முதலாளி / மேனேஜர் (Boss) ரொம்ப மோசம் - சர்வே முடிவு

என் முதலாளி / மேனேஜர்தான் இருப்பதிலியே மோசம் என்ற எண்ணம் பொதுவாக எல்லோரிடமும் காணப்படுகிறதாம். நம் நாட்டிலும் கூட முதலாளிகள் 

  • திறமையில்லாமல் இருக்கிறார்கள்
  • புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்
  • தலைமைப்பண்பு இல்லை 
என்ற எண்ணம் உள்ளதாக மேனேஜ்மெண்ட் ஆலோசக நிறுவனம் DDI நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மேனேஜர்களில் 34% திறமையானவர்கள் இல்லையென்றும், 40%  மேனேஜர்கள் மட்டுமே தங்களின் சுய கெளரவத்திற்கு மதிப்பளிப்பதாகவும் ஆய்வில் பங்கு பெற்றவர்கள் கூறுகிறார்கள்

55% நபர்கள் மேனேஜர்களால் வேலையை விட்டு விடலாமா என்று யோசிக்கிறார்கள். 39% நபர்கள் தங்களது மேனேஜர்களால்தான் வேலையை விட்டதாக சொல்கிறார்கள். 

56% நபர்கள் இப்போதிருக்கும் முதலாளி / மேலாளர் தங்களுக்கு உதவி செய்து தங்களின் திறமையை அதிகரிக்க உதவுதாக சொல்கிறார்கள்

பெண்களை (34%) விட ஆண்கள் (53%) தங்கள் பாஸை விட தாங்கள் நல்ல லீடராக இருக்க முடியும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 35% பாஸ் மட்டுமே தங்களின் பணிரீதியான பிரச்சனைகளை காது கொடுத்துக் கேட்பதாக குறைபட்டுக்கொள்கிறார்கள். 60% பாஸ்கள் தங்களின் சுய மரியாதையினை ஏதாவது ஒரு சந்தர்ப்பதிலாவது காயப்படுத்தியாக சொல்கிறார்கள்

இந்த ஆய்வு
  1. அமெரிக்கா
  2. ஐரோப்பா
  3. ஆஸ்திரேலியா
  4. கனடா
  5. சீனா
  6. இந்தியா
  7. ஜெர்மனி
  8. மலேசியா
  9. சிங்கப்பூர்
  10. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் 1250 முழு நேரப் பணியாளர்களிடம் நடத்தப்பட்டது.
Source:Indian Express

2 comments:

  1. பாஸ்-சபார்டினேட் உறவுகள் பல இடங்களில் சொதப்புகின்றன.

    ReplyDelete
    Replies
    1. Atharku kaaranam understanding / attitude illaathathe

      Delete