வாழ்க வளமுடன்!

Sunday, July 08, 2012

புகைப்பழக்கத்தை நிறுத்த...



புகைப்பழக்கத்தை நிறுத்த சில டிப்ஸ்...

- சிகரெட்டை நிறுத்த நினைப்பவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிகரெட் என்று ஒன்று உள்ளது. எப்படியென்றால் அந்த சிகரெட்டில் புகையிலை அல்லது நிக்கோட்டினுக்கு பதிலாக, ஒரு சில ஃப்ளேவரான புதினா அல்லது ஆசையைக் கட்டுப்படுத்தும் மெத்தனால் என்பவை இருக்கின்றன. இதனால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, மனநிறைவு அடையும் வகையில் இருக்கும்.

- டார்க் சாக்லேட் மிகவும் சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. எப்போது புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சாக்லேட்டை சாப்பிட்டால் பசியானது அதிகரிப்பதோடு அதன் சுவையால் சிகரெட்டை மறக்கச் செய்துவிடும்.

- சோம்பு, நட்ஸ் போன்றவற்றை வாயில் போட்டு மெல்லுதல் மிகவும் சிறந்த, ஆரோக்கியமான ஒன்று. நட்ஸில் பாதாம் கொட்டையை வாயில் போட்டு மென்றால் உடலுக்கு மிகவும் சிறந்தது.

- எப்போதெல்லாம் புகைபிடிக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறதொ, அப்போதெல்லாம் 2-3 வாழைப்பழங்களை சாப்பிடலாம். இது புகைப்பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி.

இவற்றையெல்லாம் செய்தால் புகைப்பழக்கம் போவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

4 comments:

  1. என் புகைபிடிக்கும் நண்பரிடம் இந்த பதிவின் சாரத்தை சொன்னேன்.

    அவர் சொன்னது, "நான் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டுமென்று நினைப்பது நீ தான். அதனால் நீ கடைபிடி. நான் நிறுத்துவேனா பார்கலாம்!"

    ஹிஹி..

    ReplyDelete
  2. நன்றி உங்கள் வருகைக்கு

    ReplyDelete