வாழ்க வளமுடன்!

Tuesday, November 26, 2013

தொப்பையில்லாத வயிறு (Flat Abs)

நம்மை நேர்த்தியாக காண்பிப்பது ஆரோக்கியமான பிளாட் ஆப்ஸ் (Flat Abs) தான். நமது உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைப்பதற்கும், தட்டையான வயிற்றை பெறுவதற்கும் அதிக முயற்சி தேவைப்படும். மேலும் உடல் மொழியை நேர்மாறான முறையில் மாற்றும் தட்டையான வயிற்றை அடைவதற்கு டயட், வாழ்க்கை முறை, உடல்நலப் பொருத்தம் போன்றவற்றில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். கீழ்கண்ட டயட் முறை தட்டையான வயிறைப் பெற உங்களுக்கு உதவும்

பூண்டு
இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் வயிற்றை சுத்தமாகவும் கொழுப்புச்சத்து சேர்ந்து விடாமல் தடுக்கவும், செரிமான மண்டலம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

தக்காளி
உடம்பு எரிச்சல்களை குறைக்கவும், நீர்ச்சத்தை தக்க வைக்கவும் தக்காளி பெரிதும் உதவுகின்றது. லெப்டின் எனப்படும் புரோட்டீன் நிரம்பியுள்ளதால் உங்கள் மெட்டபாலிக் அளவை சரிசெய்து பசியையும் கட்டுப்படுத்த உதவும்.

முட்டையின் வெள்ளைக்கரு
புரோட்டீன் மற்றும் தேவையான அமினோ அமிலங்களின் மூலமாக இருப்பது முட்டையாகும். முட்டையின் வெள்ளை கருவை உங்கள் காலை உணவில் தினமும் சேர்த்து வந்தால், உங்கள் உடலில் புரோட்டீன் அதிகமாவதோடு, நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தும்.

பாதாம்
தசை வளர்ப்பிற்கும் பராமரிப்பிற்கும் தேவையான அதிகமான புரோட்டீன், நார்ச்சத்துடன் கூடிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் பாதாமில் உள்ளது. மேலும் இது பசியை சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

க்ரீன் டீ
நாள் முழுவதும் சர்க்கரை அல்லாத க்ரீன் டீயை பருகவேண்டும். கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் அது உங்கள் மெட்டபாளிசத்தை அதிகரித்து கொழுப்பை குறைக்கச் செய்யும். நீங்கள் எவ்வளவு கொழுப்பை குறைகின்றீர்களோ அவ்வளவு குறைவான உடற்பயிற்சியை செய்தால் போதுமானதாகும்.

கெட்டித்தயிர்
கெட்டித்தயிர் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கான உணவு வகைகளில் சிறந்தது ஆகும். கெட்டித்தயிரில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா உங்கள் செரிப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து வயிற்றில் தங்கும் கொழுப்பையும் குறைக்கும்.

கைக்குத்தல் அரிசி
தொப்பையை குறைக்க நீங்கள் தசை வலுப்படுத்தும் புரோட்டீன் நிறைந்த கார்போஹைட்ரேட்களையும் வைட்டமின்களையும் கொண்ட கைக்குத்தல் அரிசியை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் பி கொழுப்புச்சத்தை குறைக்க உதவும்.

கீரைகள்
தொப்பையை குறைக்க தினமும் உங்கள் உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பசலைக்கீரை, கேல் மற்றும் லெட்யூஸ் வகைகளில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்து உங்கள் பசியை கட்டுப்படுத்தும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு
உடலை வலிமையாக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் தினமும் ஒரு க்ளாஸ் வெந்நீருடன் எலுமிச்சை சாரையும் தேனையும் கலந்து பருக வேண்டும்.


No comments:

Post a Comment