இந்த சமுதாயத்தை மதித்து வாழ வேண்டும் என்ற அற நெறி 3 அம்சங்களைக் கொண்டதாக வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகிறார்.
அ) ஒழுக்கம் - தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ மனதுக்கோ எக்காலத்திலும் எண்ணத்தாலும், சொல்லலும், செயலாலும் துன்பம் தராமல் இருப்பது
ஆ) கடமை - மனிதர்கள் வாழும் காலத்தில் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு கடன்பட்டவர்களேயாவர். விவசாயி பயிர் விளைவிக்கவில்லையெனில் நமக்கு உணவில்லை. நெசவாளியில்லையெனில் நம்மை அழகுபடுத்த ஆடையில்லை; கணணிப் பொறியாளர் இல்லையெனில்
சொகுசான வாழ்க்கைமுறை நமக்கு இல்லை. இவ்வாறாக சமுதாயத்திற்குக் கடன் பட்டுள்ளோம். இக் கடனை நேர்மையான முறையில் தன் உழைப்பு, அறிவு இவற்றால் தீர்க்க வேண்டும். இதுவே கடமை எனப்படுகிறது.
இ) ஈகை - இது என்னவென்றால் பிறர் துன்பத்தினைப் போக்குவது
வணக்கம் ஐயா!
ReplyDeleteநான், கடமைகளைச் செய்வது பற்றி, ஒரு blog எழுதியிருக்கிறேன்! அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
நான் ஒரு எழுத்தாளனும் அல்ல! எழுதுவது எனது பொழுது போக்கும் அல்ல! இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல! இருப்பினும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே!
www.lusappani.blogspot.in