நம் உடலில் உயிர் ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படி கடல் நீர் காற்றால் அசைவதால் அலை உருவாகிறதோ அதுபோல் உயிரின் ஓட்டத்தால் ஓர் அலை எழுகின்றது. இதையே வேதாத்திரி மகரிஷி சீவ காந்த அலை என்கிறார்.
இச் சீவ காந்தம் ஐம்புலன்களின் (தோல், கண், காது, வாய், மூக்கு) வழியே செல்லும் போது 5 உணர்வுகளாக (அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம்) தன் மாற்றம் அடைகின்றது. இவற்றை உணர மனம் தேவைப் படுகின்றது. இச்சீவகாந்தம் மூளை வழியே செல்லும் போது மனமாக தன் மாற்றம் அடைகின்றது. இம்மனம் இரண்டு செயல்களை செய்கின்றது. அவை:
அ) சுருக்கி வைத்தல்: ஐம்புலன்களின் மூலம் பெற்ற நமது அனுபவங்களை கருமையத்தில் பதிவுகளாக சுருக்கி வைத்தல்
ஆ) விரித்துக் காட்டல்: அவற்றை தேவை, பழக்கம், சூழ் நிலைக்கேற்ப எண்ணங்களாக விரித்துக் காட்டல்.
No comments:
Post a Comment