வாழ்க வளமுடன்!

Wednesday, February 22, 2012

ஒருவருக்கு அறிவாற்றல் எங்கிருந்து வருகிறது?

வளரும் விதமும் கல்வியறிவும் தான் ஒருவரது அறிவாற்றலுக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அறிவுத்திறனில் பாதி பாரம்பரியமாக பெற்றோரிடமிருந்தே வருகின்றது என்று கூறுகிறது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஏறத்தாழ 3500 பேரை இந்த ஆய்வுக்குட்படுத்தி ஒருவரது அறிவுத்திறன் அல்லது அறிவுத்திறனின்மை இரண்டுமே பெற்றோரிடமிருந்தே வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல் கிஸ்டலைஸ்டு இண்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் ஒருவரது தனித்திறன்களுக்கு காரணமாய் அமைவது அவரது ஜீன்களே! ஒரு சிக்கலான சூழ்நிலையில் பகுத்தாயும் திறன் மற்றும் கற்பனைக்கப்பாற்பட்ட விஷயங்களை புரிந்து கொள்ளும் திறன் இவையெல்லாம் ஒருவரது DNA வின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை அறிவுக்கு ஃப்ளூய்ட் டைப் இண்டெல்லிஜென்ஸ் என்று பெயர். இந்த ஆய்வினை மேற்கொண்டது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் ரிஸர்ச் என்ற அமைப்பு.

No comments:

Post a Comment