பெண்கள் அழகாக இருந்தால் மட்டும் போதுமா? கமகமக்க வேண்டாமா? இதோ எளிய வழிகள்:
வியர்வை வாசம்:
தினம் இரு வேளைகள் குளிப்பது, டியோடரன்ட் உபயோகிப்பது, காட்டன் உடைகளை அணிவது போன்றவை இப்பிரச்னைக்கு தீர்வளிக்கும்.
குறிப்பு: வியர்வை ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. வியர்வையின் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்பும் வெளியேறும். வியர்வைக்குத் தனியே எந்த வாசனையும் கிடையாது. அது, பாக்டீரியாவுடன் சேரும் போதுதான் துர்நாற்றம் வெளிப்படுகிறது.
மாதவிலக்கு:
மாதவிலக்கு நாட்களில் தரமான சானிட்டரி நாப்கின்களை உபயோகிப்பது, அடிக்கடி அவற்றை மாற்றுவது போன்றவை இம்மாதிரி துர்நாற்றங்களை தவிர்க்கும்.
வாய் வாசம்:
கிராம்பை ஊற வைத்த தண்ணீரால் அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தால் நாற்றம் அகலும். அதே மாதிரி ஏலக்காயையும் மெல்லலாம். அல்லது மவுத் வாஷ் உபயோகிக்கலாம்.
உடலை நாள் முழுதும் நறுமணத்துடன் வைத்திருக்க:
அ) குளிக்கும் தண்ணீரில் வேப்பிலை, கற்பூரம் அல்லது எலுமிச்சை பழத்தின் தோல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டுக் குளிக்கவும்
ஆ) சோப்புக்கு பதிலாக பச்சைப்பயறு மாவு அல்லது கடலை மாவுடன், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், வெட்டி வேர், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ் போன்றவற்றை காய வைத்து, அரைத்து, உடம்புக்கு தேய்த்து குளிக்கலாம். இது, சரும அழகையும் அதிகரிக்கும்; உடலையும் இயற்கை நறுமணத்துடன் வைக்கும்.
குறிப்பு: ரொம்பவும் வாசனையான சோப்புகள் சருமத்துக்கு நல்லவையல்ல
No comments:
Post a Comment