Search This Blog

Showing posts with label தொப்பை. Show all posts
Showing posts with label தொப்பை. Show all posts

Wednesday, February 04, 2015

இஞ்சி சாறு செய்யும் முறை


இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி கழுவி ஆறிய வெண்ணீர் விட்டு அரைக்கவும் பட்டு போல் வேண்டாம் மிக்சியின் பஸ்ஸில் இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். 


அதை எடுத்து டீ வடிக்கட்டும் ஸ்ட்ரெயினரில் தேங்காய் பால் எடுப்பது போல் பிழியவும். அந்த சக்கையை தூர போட வேண்டாம் ஒரு சின்ன கண்டெயினரில் வைத்தால் இரண்டு முன்று நாட்களுக்கு டீ போட உதவும். மிக்சியில் அரைக்கனும் என்றில்லை கேரட் துருவும் கிரேட்டரிலும் செதுக்கி பிழியலாம். 

பிழிந்த சாறை பத்து நிமிடம் அப்படியே வைக்கவும், பத்து நிமிடம் கழித்து மேலோடு இருக்கும் சாற்றை மட்டும் வேறு டம்ளரில் தெளிந்தார் போல ஊற்றவும் வடிக்கட்டியதும் அடியில் வெள்ளை நிற படிவம் படிந்த்து இருக்கும் அதை பயன் படுத்த கூடாது அது நஞ்சு.  

அவ்வளவுதான் எடுத்து வைத்துள்ள சாற்றில் தேன் கலந்து  கொடுக்கலாம்

Thanks to: http://samaiyalattakaasam.blogspot.in/

Wednesday, August 20, 2014

உடல் எடை, தொந்தி குறைய



ஐடியா - ஒன்று.

சமமான தரையில் கை கால்களை நீட்டி படுத்துக் கொண்டு இரு கைகளையும் எடுத்து தலியின் பின் கோர்த்து வைத்துக் கொள்ளவும்(படுத்துக் கொண்டே தான்) பின்னர் முட்டியை மடக்காமல் அப்படியே எழுந்து தலையால் முட்டியை தொட வேண்டும். கையை தலையில் கட்டிக் கொண்டு செய்ய முடியவில்லை என்றால் கையை தரையில் சமமாக வைத்துக் கொண்டே செய்யலாம். முதன்முதலில் செய்யும் போது 3 அல்லது 5 முறை செய்யவும். பின்னர் அப்படியே படிபடியாக அதிகரித்துக் கொள்ளலாம். ரொம்ப உடலை போட்டு வறுத்திக் கொள்ளாலாமல் செய்யவும்.

ஐடியா -இரண்டு.

இஞ்சியில் தேன் கலந்து முதல் நாள் இரவு வைத்து காலையில் வெறும் வயிற்றில் நாற்பது நாள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் .

ஐடியா -மூன்று .

முதலில் நேராக நிமிர்ந்து நின்று கொண்டு குனிந்து கைகளால் கால் கட்டை விரலை தொட முயற்சி செய்ங்க. ஆனால் முதலில் செய்யும் போது விரலை தொட வராது செய்ய செய்ய தான் வரும். மிக முக்கியம் கால்கள் மடங்க கூடாது. முதலில் 6 லிருந்து 10 வரை செய்ங்க அடுத்து அதையே அதிகப்படுத்திக்கோங்க.அடுத்து கால்களை மடித்து தரையில் உட்கார்ந்துக் கொண்டு கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு குனிந்து தலையால் தரையை தொடவும். இதுவும் முதலில் கஷ்டமாக இருக்கும் போகபோக பழகிவிடும்.

ஐடியா -நான்கு.

தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீசனல் பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

வாழைத்தண்டு, பூசணி, அருகம்புல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு சாற்றினை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்.

ஐடியா -ஐந்து.

உங்களுக்கு எப்பொழுது எல்லாம் தண்ணீர் தாகம் வருகிறதோ , கண்டிப்பாக சுடு தண்ணீர் மட்டும் குடித்தால் போதும், எண்ணெய் உணவுகள் உண்ணும் போதாவது கட்டாயம் சுடு தண்ணீர் பருக வேண்டும். கண்டிப்பாக பலன் உண்டு. நல்ல சூடாக குடிக்க வேண்டும், வெது வெதுப்பாக இருக்க கூடாது,நல்ல சூடாக இருக்க வேண்டும்.

சுடு தண்ணீர் வயிறு மற்றும் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது, சாப்பிட்டவுடன் நீங்களே உணர முடியும், சுடு தண்ணீர் பருகும் போதே உங்கள் வயிறு மந்தமாக இல்லாமல் இருப்பதை நீங்கள் உணர முடியும்.எளிமை ஆக இருக்கிறது என ஏளனமாக நினைக்க வேண்டாம் , கண்டிப்பாக நல்ல பலன் தரும், நீங்களே இன்னும் சில நாட்களில் சொல்வீர்கள் , இதன் நன்மை பற்றி.

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

நன்றி: வேடந்தாங்கல் இணையம்.

Thursday, December 26, 2013

Reduce belly FAT

Few tips on reducing belly fat:
  1. Don't skip breakfast
  2. Eat white part of eggs every morning
  3. Drink minimum 2 litres of water every day
  4. Exercise everyday. 20 minutes cardiac exercise and 20 minute up domain exercise 
  5. Do walking and jogging if you can't exercise as above.
  6. Take wheat, oats and brown rice everyday as breakfast. Eat lesser carbohydrate foods.
  7. Go to bed at least after 3 hours after dinner.
  8. Eat more dry fruits and raw fruits

Monday, December 02, 2013

தொப்பை குறைய எளிய பயிற்சி

ன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இதைக் குறைக்க நேரம் குறைவாக இருப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்.


Tuesday, November 26, 2013

தொப்பையில்லாத வயிறு (Flat Abs)

நம்மை நேர்த்தியாக காண்பிப்பது ஆரோக்கியமான பிளாட் ஆப்ஸ் (Flat Abs) தான். நமது உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைப்பதற்கும், தட்டையான வயிற்றை பெறுவதற்கும் அதிக முயற்சி தேவைப்படும். மேலும் உடல் மொழியை நேர்மாறான முறையில் மாற்றும் தட்டையான வயிற்றை அடைவதற்கு டயட், வாழ்க்கை முறை, உடல்நலப் பொருத்தம் போன்றவற்றில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். கீழ்கண்ட டயட் முறை தட்டையான வயிறைப் பெற உங்களுக்கு உதவும்

பூண்டு
இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் வயிற்றை சுத்தமாகவும் கொழுப்புச்சத்து சேர்ந்து விடாமல் தடுக்கவும், செரிமான மண்டலம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

தக்காளி
உடம்பு எரிச்சல்களை குறைக்கவும், நீர்ச்சத்தை தக்க வைக்கவும் தக்காளி பெரிதும் உதவுகின்றது. லெப்டின் எனப்படும் புரோட்டீன் நிரம்பியுள்ளதால் உங்கள் மெட்டபாலிக் அளவை சரிசெய்து பசியையும் கட்டுப்படுத்த உதவும்.

முட்டையின் வெள்ளைக்கரு
புரோட்டீன் மற்றும் தேவையான அமினோ அமிலங்களின் மூலமாக இருப்பது முட்டையாகும். முட்டையின் வெள்ளை கருவை உங்கள் காலை உணவில் தினமும் சேர்த்து வந்தால், உங்கள் உடலில் புரோட்டீன் அதிகமாவதோடு, நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தும்.

பாதாம்
தசை வளர்ப்பிற்கும் பராமரிப்பிற்கும் தேவையான அதிகமான புரோட்டீன், நார்ச்சத்துடன் கூடிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் பாதாமில் உள்ளது. மேலும் இது பசியை சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

க்ரீன் டீ
நாள் முழுவதும் சர்க்கரை அல்லாத க்ரீன் டீயை பருகவேண்டும். கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் அது உங்கள் மெட்டபாளிசத்தை அதிகரித்து கொழுப்பை குறைக்கச் செய்யும். நீங்கள் எவ்வளவு கொழுப்பை குறைகின்றீர்களோ அவ்வளவு குறைவான உடற்பயிற்சியை செய்தால் போதுமானதாகும்.

கெட்டித்தயிர்
கெட்டித்தயிர் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கான உணவு வகைகளில் சிறந்தது ஆகும். கெட்டித்தயிரில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா உங்கள் செரிப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து வயிற்றில் தங்கும் கொழுப்பையும் குறைக்கும்.

கைக்குத்தல் அரிசி
தொப்பையை குறைக்க நீங்கள் தசை வலுப்படுத்தும் புரோட்டீன் நிறைந்த கார்போஹைட்ரேட்களையும் வைட்டமின்களையும் கொண்ட கைக்குத்தல் அரிசியை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் பி கொழுப்புச்சத்தை குறைக்க உதவும்.

கீரைகள்
தொப்பையை குறைக்க தினமும் உங்கள் உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பசலைக்கீரை, கேல் மற்றும் லெட்யூஸ் வகைகளில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்து உங்கள் பசியை கட்டுப்படுத்தும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு
உடலை வலிமையாக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் தினமும் ஒரு க்ளாஸ் வெந்நீருடன் எலுமிச்சை சாரையும் தேனையும் கலந்து பருக வேண்டும்.


Tuesday, January 22, 2013

பெரு வயிறு குறைய



* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.


Tuesday, December 06, 2011

தொப்பையை குறைக்க


இந்த வீடியோவை பாருங்க இதுல இருக்கற மாதிரி தினமும் செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ரொம்ப நேரம் தேவை இல்ல.ஒரு இருபது நிமிஷம் அல்லது அரைமணி நேரம் இருந்தால் போதும்.

வெளியே எங்கேயும் போக தேவை இல்லை.வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.எந்த செலவும் கிடையாது.






இதில் உள்ள சில பயிற்சிகள் முதல் ஓரிரு நாட்களுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கும்.பிறகு எளிதாகிவிடும்.காலையிலோ மாலையிலோ நேரம் கிடைக்கும் போது வெறும் வயிற்றில் செய்து பாருங்கள் ஓரிரு வாரங்களில் நல்ல மாற்றம் கிடைக்கும்.

சிக்ஸ் பேக் இல்லைனாலும் லஞ்ச் பேக் மாதிரி இருக்குற தொப்பையை குறைக்கலாமே.
Related Posts Plugin for WordPress, Blogger...