Search This Blog

Showing posts with label quit smoking. Show all posts
Showing posts with label quit smoking. Show all posts

Monday, July 09, 2012

புகைப்பழக்கத்தை நிறுத்த, தொடர்ச்சி...

சென்ற பதிவின்  தொடர்ச்சி...

புகைப்பழக்கத்தினை நிறுத்த என்னென்னவெல்லாம் செய்யலாம் என்ற லிஸ்டில் நிக்கோடின் கலக்காத சிகரட்டும் உள்ளது. இதைப் பற்றி விசாரித்துச் சொல்லுங்கள் என்று நண்பர் சொன்னார். சரியென்று இந்தியாவில் உள்ள நிக்கோடின் கலக்காத சிகரட்டை விசாரித்த போது ஈ சிகரட்டைச் சொன்னார்கள். இந்தியாவில் கிடைக்குமா என்று விசாரித்த போது   இந்த இணையத்தளம் கண்ணில் பட்டது. 

எந்தெந்த வகையில் ஈ சிகரட் புகைபிடிப்பதை நிறுத்த(?) உதவுகிறது என்று கீழே வரிசைப்படுத்தி இருக்கிறேன்
  • ஒரே வரியில் சொன்னால் இந்த ஈ சிகரட் பெரிய அளவில் நிக்கோடின் இல்லாதது. ஆனால் புகைக்கும் பழக்கத்தினை நிறுத்தும் கருவியல்ல...
  • பின் எதற்கு என்றால், தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் பெரிய அளவிலான உடல் நலக்குறைவை இது சிறிது குறைக்கும்.
  • இது பேட்டரியில் இயங்கும்; சிறு அளவிலான  நிக்கோடினை  கொண்டிருக்கும்.  ஆகவே இதுவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுதான். 
  • மேலும் ஒரு செய்தி என்னவென்றால்  கனடாவிலும், யு கே விலும் ஈ சிகரட் தடை செய்யப்பட்டுள்ளது
சரி வேறு என்ன சிகரட் உள்ளது இந்தியாவில்? இதோ இன்னொரு வகையான இயற்கை முறையிலான சிகரட்:
  • நிர்டோஷ் ஹெர்பல் சிகரெட் - இது இயற்கை முறையிலானது
    • புகையிலை, நிக்கோடின் மற்றும் தாரில்லாது
  • ஹூக்காவும் உள்ளது
  • பேப்பரில் இல்லாததால் தீங்கு விளைவிக்கக்கூடியதல்ல
  • நல்ல மணம் வருகிறது
  • சுவாசம் நாற்றமடிக்காது
எனக்கு புகைக்கும் பழக்கமில்லை எனவே இந்தத் தகவல்கள் நண்பரிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் போதோ அல்லது இணையத்தில் 
உலாவிக்கொண்டிருக்கும் போதோ கண்டறிந்து பதிப்பிக்கப்பட்டது.

Sunday, July 08, 2012

புகைப்பழக்கத்தை நிறுத்த...



புகைப்பழக்கத்தை நிறுத்த சில டிப்ஸ்...

- சிகரெட்டை நிறுத்த நினைப்பவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிகரெட் என்று ஒன்று உள்ளது. எப்படியென்றால் அந்த சிகரெட்டில் புகையிலை அல்லது நிக்கோட்டினுக்கு பதிலாக, ஒரு சில ஃப்ளேவரான புதினா அல்லது ஆசையைக் கட்டுப்படுத்தும் மெத்தனால் என்பவை இருக்கின்றன. இதனால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, மனநிறைவு அடையும் வகையில் இருக்கும்.

- டார்க் சாக்லேட் மிகவும் சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. எப்போது புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சாக்லேட்டை சாப்பிட்டால் பசியானது அதிகரிப்பதோடு அதன் சுவையால் சிகரெட்டை மறக்கச் செய்துவிடும்.

- சோம்பு, நட்ஸ் போன்றவற்றை வாயில் போட்டு மெல்லுதல் மிகவும் சிறந்த, ஆரோக்கியமான ஒன்று. நட்ஸில் பாதாம் கொட்டையை வாயில் போட்டு மென்றால் உடலுக்கு மிகவும் சிறந்தது.

- எப்போதெல்லாம் புகைபிடிக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறதொ, அப்போதெல்லாம் 2-3 வாழைப்பழங்களை சாப்பிடலாம். இது புகைப்பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி.

இவற்றையெல்லாம் செய்தால் புகைப்பழக்கம் போவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...