என் முதலாளி / மேனேஜர்தான் இருப்பதிலியே மோசம் என்ற எண்ணம் பொதுவாக எல்லோரிடமும் காணப்படுகிறதாம். நம் நாட்டிலும் கூட முதலாளிகள்
- திறமையில்லாமல் இருக்கிறார்கள்
- புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்
- தலைமைப்பண்பு இல்லை
என்ற எண்ணம் உள்ளதாக மேனேஜ்மெண்ட் ஆலோசக நிறுவனம் DDI நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேனேஜர்களில் 34% திறமையானவர்கள் இல்லையென்றும், 40% மேனேஜர்கள் மட்டுமே தங்களின் சுய கெளரவத்திற்கு மதிப்பளிப்பதாகவும் ஆய்வில் பங்கு பெற்றவர்கள் கூறுகிறார்கள்
55% நபர்கள் மேனேஜர்களால் வேலையை விட்டு விடலாமா என்று யோசிக்கிறார்கள். 39% நபர்கள் தங்களது மேனேஜர்களால்தான் வேலையை விட்டதாக சொல்கிறார்கள்.
56% நபர்கள் இப்போதிருக்கும் முதலாளி / மேலாளர் தங்களுக்கு உதவி செய்து தங்களின் திறமையை அதிகரிக்க உதவுதாக சொல்கிறார்கள்
பெண்களை (34%) விட ஆண்கள் (53%) தங்கள் பாஸை விட தாங்கள் நல்ல லீடராக இருக்க முடியும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 35% பாஸ் மட்டுமே தங்களின் பணிரீதியான பிரச்சனைகளை காது கொடுத்துக் கேட்பதாக குறைபட்டுக்கொள்கிறார்கள். 60% பாஸ்கள் தங்களின் சுய மரியாதையினை ஏதாவது ஒரு சந்தர்ப்பதிலாவது காயப்படுத்தியாக சொல்கிறார்கள்
இந்த ஆய்வு
பாஸ்-சபார்டினேட் உறவுகள் பல இடங்களில் சொதப்புகின்றன.
ReplyDeleteAtharku kaaranam understanding / attitude illaathathe
Delete