அதிர்ச்சியானது.. கவலைக்குரியது.. அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டியது.. என்ன விஷயம் தெரியுமா?
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற கொடுமை!
* 53 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
* பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம்.
* பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம்.
* ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.
* 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் இந்த வயதுதான். 30 சதவீதம் பேர் 13-14 வயதினர்.
குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்கிற வர்கள், பீடோபீலியா (Peadophilea) என்ற வக்கிர புத்தி கொண்டவர்கள். இது ஒரு மனநோயாகவும் கருதப்படுகிறது.
சிறுவர்- சிறுமியர்கள் மூலம் இன்பமடையும் வக்கிரவாதிகள் மேலைநாடுகளில் அதிகம். `சைல்டு செக்ஸ் டூரிசம்' என்ற பெயரில் அவர்களை சில சமூக விரோத அமைப்புகள் ஆசிய நாடுகளுக்கு அழைத்து வருகின்றன. முன்பு தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பாதித்த இந்த பாதகர்கள் இப்போது இந்தியாவில் ஒடிசா, கோவா, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு ரகசி யமாக வந்து `ஆசைகளை' தீர்த்துவிட்டு போகி றார்கள்.
இது தொடர்பான சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களில் 15 சதவீதத்தினர் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்கி றார்கள். 25 சதவீதத்தினர் 16 முதல் 18 வயதிற்கு உள்பட்டவர்கள். 2005-ம் ஆண்டு இந்தியாவில் 44,476 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார் கள். அவைகளில் 11,008 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்கள் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
- குழந்தைகளை எளிதாக ஏமாற்ற முடியும்.
- குழந்தைகள் காட்டிக்கொடுக்காது.
- குழந்தைகளுக்கு விளைவுகளை புரியத்தெரியாது. எதிர்ப்பு தெரிவிக்காது.
- தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குழந்தைகளுக்கு விளக்கத் தெரியாது. விளக்கினாலும் பெற்றோர் அதை நம்பமாட்டார்கள்.
- வயதானவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சும் பாவனையில் வக்கிர செயலில் ஈடுபடும் போது, பெற்றோருக்கு சந்தேகம் வராது.
இப்படிப்பட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித் துக்கொண்டே போகிறது. கற்பனைக்கு எட்டாதவிதத்தில்கூட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வேலைக்காரர்கள், அம்மாவின்- அப்பாவின் நண்பர்களாக வந்து போகிறவர்கள்.... போன்றவர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். புதிய நபர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு.
பயணங்கள், திருவிழா, திருமணவிழாக்களில் உருவாகும் மக்கள் நெருக்கடியை பயன் படுத்தி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்கள் உண்டு. குழந்தை தொழி லாளர்கள், தெருவோரக் குழந்தைகள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவது சாதாரண விஷய மாக மாறிக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள், ஒருசில பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலா வதாக அவர்களுக்கு பால்வினை நோய்கள் உண்டாவதை குறிப்பிடலாம். குழந்தைகளின் `உறுப்பு' பகுதியில் புண்களோ, கட்டிகளோ, சீழ் வடிதலோ இருந்தாலும் குழந்தையின் தாய்க்கு அது பால்வினை நோயின் அடையாளம் என்ற சந்தேகம் வருவதில்லை. ஒருசில மருத்துவர்களும் அது பால்வினை நோயின் அறிகுறி என்பதை உணராமல், வேறு விதமான சிகிச்சைகள் கொடுத்துவிடுவதும் உண்டு.
நன்றாக தெரிந்தவர்களால் குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பு ஏற்படும்போது, அவை களின் உடலில் காயங்களோ, சிராய்ப்புகளோ இருப்பதில்லை. அதனால் பெற்றோரோ, மருத் துவர் றகளோ குழந்தை பலாத்காரத்திற்கு உட்பட்டிருக்கிறது என்று முதலில் நினைப்ப தில்லை. அப்படியே நினைத்து விசாரித்தாலும் குழந்தையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறமுடியாது.
வெளிநபர்களால் பாதிப்பு ஏற்படும்போது காயம், சிராய்ப்பு, உறுப்பு பகுதியில் ரத்தம் வடிதல் போன்றவை காணப்படும். அவசரத்திலும், பயத்துடனும் அந்த பாதகர்கள் செயல்படுவதால் குழந்தைகள் காயம் அடைந்துவிடுகின்றன.
பலாத்காரத்திற்கு உள்பட்ட குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றன. பால்வினை நோய் மற்றும் காயங்களை சிகிச்சையால் குணப்படுத்திவிடலாம். ஆனால் மனநிலை பாதிப்பால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். வயதுக்கு மீறிய பாலியல் மாற்றங்கள், மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, எதைக் கண்டாலும்- யாரைக் கண்டாலும் பயம், தனிமை மீது விருப்பம், உணவில் நாட்டமின்மை, போதை மருந்துகளுக்கு அடிமையாகுதல், வீட்டை விட்டு ஓடுதல், படிப்பில் ஆர்வமின்மை, பாலியல் தொழில் ஆர்வம் போன்றவை முக்கியமான எதிர்கால பாதிப்புகளாகும்.
மக்கள் விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே இந்த பாதகத்தை தடுக்கவோ, குறைக்கவோ முடியும். சமூகத்தின் அடிப்படையில் இருந்து இந்த பணியை தொடங்கவேண்டும். பள்ளி கள், கல்லூரிகள், மருத்துவ துறை, தன்னார்வ அமைப்புகள், அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். தங்கள் தம்பி, தங்கை களை காத்து கண்காணிக்க மூத்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகளின் உடலில் எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது நல்ல தொடுதல் என்றும்- எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது தவறான அணுகுமுறை என்றும் சொல்லித்தர வேண்டும். இதை சரியாக சொல்லித்தர அம்மாக்களாலே முடியும்.
மற்றவர்களின் பிரச்சினைக்குரிய செயல்கள் பற்றியோ, பிரச்சினைக்குரிய நபர்கள் பற்றியோ குழந்தைகள் கூறினால் அதை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். யாரையும் நம்பி குழந்தைகளை விட்டுச்செல்லக்கூடாது. பொது இடங்களில் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த பாதகத்தில் ஈடுபடு கிறவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒரு தனிநபர் பிரச்சினையோ, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்து பிரச்சினையோ இல்லை. இது சமூக பிரச்சினை. அதனால் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து இதை தடுக்கவேண்டும்.
நன்றி: டாக்டர் என்.உஸ்மான் M.D., D.V., Ph.D.,
(பாலியல் நோய் நிபுணர் மற்றும்
உலக சுகாதார நிறுவன ஆலோசகர்) சென்னை.
s ellaarum onru kudi thaduppoom...
ReplyDeleteyes we should educate our kids first
Deleteகொஞ்சம் விவரம் புரியும் வயசு வந்தவுடன் குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுக்கணும்.
ReplyDeleteஇவனுங்களை என்ன செய்தால் தகும்:(
தூக்கில் போடவேண்டும்
Deleteசில பெற்றோர்கள், குழந்தைகளுக்கு மார்டன் என்ற பெயரில் மிக சிறிய ஆடைகளை அணிவித்து பொது இடங்களுக்கு அழைத்து வருகிறார்கள்..அவர்கள் கண்ணுக்கு 13 /14 வயது கூட குழந்தையாக தோன்றினாலும், உலகம் அப்படி பார்ப்பதில்லை.
ReplyDeleteநம் பாரம்பரிய இந்திய உடைகள் இயல்பான கூச்சத்தையும், வக்கிர பார்வைகளில் இருந்து தற்காப்பையும் தருகின்றன.
---
எத்தனை வேலைகள் இருந்தாலும் பெற்றோர் குழந்தைகளுக்கென தினம் நேரம் ஒதுக்கினால் பல பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம்.
மிகவும் கரெக்ட் விக்னா... கல்யாணம் ஆகிய வயதானவர்களிடமும், திருமணம் ஆகி மனைவியை / கணவனை பிரிந்து இருப்பவர்களிடமும், ரொம்ப நாள் ஆகியும் கல்யாணம் ஆகமலிருப்பவர்களிடமும் (ஆண் / பெண்) குழந்தைகள் தனியாகப் பழகும் சந்தர்ப்பத்தை அளிக்கக் கூடாது. in fact we can trust youngsters than elders. because youngsters' concentration will be diverted to their aged opposite sex...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபெற்றோர்கள் மட்டுமல்ல, மக்கள் அனைவருமே படித்து, மனதில் பதித்துப் பின்பற்ற வேண்டிய அருமையான விழிப்புணர்வுக் கருத்துகள்.
ReplyDeleteபாராட்டுகள் நண்பரே.
kuzhanthaikalukkumkuta bad touch good touch therinjirukkanum. ithai naam sollitharanum
Deleteஉலகில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் முதன்மையாக இருக்கு .. வெளிப்படையாக எதையும் நாம் பேசுவதில்லை ... குறிப்பாக கௌரவம் என்ற பெட்டிக்குள் அடங்கிவிடுகின்றோம்...
ReplyDeleteமாமா தானே தொட்டார் ? தாத்தா தானே ? என்றுக் கூறுவதை அடிக்கடி கேட்கலாம் .. குழந்தைகள் மீது நடக்கும் கொடுமைகளைக் கண்டு பெற்றோரே பொங்குவதில்லை.. இது குழந்தைகள் மனதில் வடுக்களாக்கி விடும் .. இது பிற்காலத்தில் எவ்வளவு பெரிய மன நோயை அவர்களுக்குக் கொண்டு வரும் என்பதை அறிவதில்லை ...
ஒருக் குழந்தை வீட்டில் இருந்து பள்ளி சென்று வரும் இடைப்பட்ட நிலையில் எவ்வளவு சிரமங்களை சந்திக்குது தெரியுமா ???
எத்தனை முறை கூறினாலும் இந்தியப் பெற்றோர்கள் இந்த விடயத்தில் கமுக்கமாகவே இருக்கின்றார்கள் ...
நல்ல பதிவு .. தொடர்ந்து இதுக் குறித்து எழுத வேண்டுகின்றேன் ...
நன்றிகள் !
நாம் முன்னெச்சரிக்கையாக மேற்சொன்னபடி [கல்யாணம் ஆகிய வயதானவர்களிடமும், திருமணம் ஆகி மனைவியை / கணவனை பிரிந்து இருப்பவர்களிடமும், ரொம்ப நாள் ஆகியும் கல்யாணம் ஆகமலிருப்பவர்களிடமும் (ஆண் / பெண்) குழந்தைகள் தனியாகப் பழகும் சந்தர்ப்பத்தை அளிக்கக் கூடாது] நாம் நம் குழந்தைகளை தற்காத்துக் கொள்ள வேண்டும். மேலும் சமூக அமைப்பிலும் இக்குற்றங்கள் புரிவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
Delete