சென்ற பதிவின் தொடர்ச்சி...
புகைப்பழக்கத்தினை நிறுத்த என்னென்னவெல்லாம் செய்யலாம் என்ற லிஸ்டில் நிக்கோடின் கலக்காத சிகரட்டும் உள்ளது. இதைப் பற்றி விசாரித்துச் சொல்லுங்கள் என்று நண்பர் சொன்னார். சரியென்று இந்தியாவில் உள்ள நிக்கோடின் கலக்காத சிகரட்டை விசாரித்த போது ஈ சிகரட்டைச் சொன்னார்கள். இந்தியாவில் கிடைக்குமா என்று விசாரித்த போது இந்த இணையத்தளம் கண்ணில் பட்டது.
எந்தெந்த வகையில் ஈ சிகரட் புகைபிடிப்பதை நிறுத்த(?) உதவுகிறது என்று கீழே வரிசைப்படுத்தி இருக்கிறேன்
- ஒரே வரியில் சொன்னால் இந்த ஈ சிகரட் பெரிய அளவில் நிக்கோடின் இல்லாதது. ஆனால் புகைக்கும் பழக்கத்தினை நிறுத்தும் கருவியல்ல...
- பின் எதற்கு என்றால், தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் பெரிய அளவிலான உடல் நலக்குறைவை இது சிறிது குறைக்கும்.
- இது பேட்டரியில் இயங்கும்; சிறு அளவிலான நிக்கோடினை கொண்டிருக்கும். ஆகவே இதுவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுதான்.
- மேலும் ஒரு செய்தி என்னவென்றால் கனடாவிலும், யு கே விலும் ஈ சிகரட் தடை செய்யப்பட்டுள்ளது
- நிர்டோஷ் ஹெர்பல் சிகரெட் - இது இயற்கை முறையிலானது
- புகையிலை, நிக்கோடின் மற்றும் தாரில்லாது
- ஹூக்காவும் உள்ளது
- பேப்பரில் இல்லாததால் தீங்கு விளைவிக்கக்கூடியதல்ல
- நல்ல மணம் வருகிறது
- சுவாசம் நாற்றமடிக்காது
எனக்கு புகைக்கும் பழக்கமில்லை எனவே இந்தத் தகவல்கள் நண்பரிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் போதோ அல்லது இணையத்தில்
உலாவிக்கொண்டிருக்கும் போதோ கண்டறிந்து பதிப்பிக்கப்பட்டது.
முக்கியமான விஷயம் இந்தப் பதிவு விளம்பர நோக்கில் இடப்பட்டதல்ல...தளத்தின் தலைப்பில் சொல்லப்பட்டது போல அறிவை பகிர்ந்தளிக்கவே
ReplyDelete//எனக்கு புகைக்கும் பழக்கமில்லை...//
ReplyDeleteஇந்த மெசேஜ் யாருக்கு பாஸ்? :p
யாரவது உனக்கு பழக்கமிருக்கா அப்டினு கேட்கக்கூடாதுன்னுதான். ஏன்னா இந்த மாதிரி எதாவது விஷயம் ஷேர் பண்ணா என்னவோ எல்லாம் நாம் எக்ஸ்பிரியன்சாகின பின்னாடிதான் எழுதறாங்கன்னு நெனச்சிடறாங்க... அதுமட்டுமில்லாம இதை யூஸ் பண்ணி நீ ப்லாக்கில் சொன்ன மாதிரியெல்லாம் இல்லையே அப்டின்னு சொல்லிடக் கூடாதில்லையா. அதனால்தான் ஒரு முன்னெச்சரிக்கையாக முதல்லயே சொல்லிடறது...
Delete