Search This Blog

Wednesday, August 22, 2012

உடற்பயிற்சி - சில உண்மைகள் - 2



உடற்பயிற்சி குறித்த சில உண்மைகள் பாகம்  ஒன்றைத் தொடர்ந்து பாகம் இரண்டு இதோ: 

கருத்து 1:  உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம்.

ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவர் நீச்சல், நடை, சைக்கிளிங் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவேண்டும். அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான்.

கருத்து 2: அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.

நேரத்தை விட பயிற்சிதான் முக்கியம். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம்.

கருத்து 3: உடம்பின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்தால் அந்த பகுதியில் வலிமை அதிகரிக்கும்.

மனித மனதுக்கு ஓய்வும், சவாலும் தேவை. அதுபோல் உடற்பயிற்சியிலும் ஓய்வும் தேவை. தொடர்ச்சியான செயல்பாடும் தேவை.

கருத்து 4: வயது முதிர்ந்தவர்களும், மிகவும் இள வயதினரும் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.

உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு `ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்' அறிகுறி குறையும். மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும். தவறி விழுந்தால் எலும்பு முறிவைத் தடுக்கும் வகையில் எலும்பு அடர்த்தி பராமரிக்கப்படும்.

மிக இளவயதினருக்கு, உடற்பயிற்சி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கருத்து 5:  உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு, நாம் ரசித்துச் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் துறக்க வேண்டும்.

 சரியான உணவுமுறை என்பது உடலை சிறப்பாக்கும். பிடித்த உணவை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டியதில்லை. உணவில் கட்டுப்பாடும், அளவும்தான் முக்கியம். முறையாகவும், மிதமாகவும் சாப்பிட்டால் எந்த உணவும், யாரையும் குண்டாக்காது. விருப்பமற்ற உணவை கட்டாயமாக சாப்பிட்டால் மன ஆரோக்கியம் குறையும்.

கருத்து 6: கனமான பொருட்களைத் தூக்குவது தசைகளை வலுப்படுத்தும். எனவே ஒரு பெண், பெண்மையுடன் திகழ எடை குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும்.

கனமான பொருட்களைத் தூக்குவது ஒரு பெண்ணை, தசைகள் திரண்ட அழகி ஆக்கிவிடாது. மாறாக ஆரோக்கியமானவர்களாகவும், பலமானவர்களாகவும் மாற்றும்.

கருத்து 7: எல்லா உடற்பயிற்சிக் கருவிகளும் நம் உடம்புக்கு ஏற்றவைதான்.

வீட்டில் வைத்து உபயோகப்படுத்தும் சில உடற்பயிற்சிக் கருவிகள் நன்றாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. அதில் நீங்கள் பயிற்சி செய்தால், உங்களுக்கு ஏற்கனவே உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் அவை மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யும்முன், உடற்பயிற்சி வல்லுநரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...