Search This Blog

Saturday, October 20, 2012

காரை மடித்து வைக்கலாம்


நெருக்கம் மிகுந்த நகரங்களுக்கும் அதன் தொல்லை பிடித்த பார்க்கிங் ஏரியாக்களுக்கும் ஏற்றபடி ஒரு வாகனத்தை வெற்றிகரமாக தயாரித்திருக்கிறது ஹிரிக்கோ என்ற ஸ்பெயின் நாட்டு நிறுவனம்.

இரண்டு பேர் பயணம் செய்யக்கூடிய இந்தக் கார், பேட்டரியில் இயங்குகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை ஓடும்; மணிக்கு 100 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக டிரைவர் ஒரு பட்டனைத் தட்டினால் ஐந்தரை அடி நீளமே உள்ள இந்தக் கார் இரண்டாக மடிந்து, சுருங்கி, ஒரு டூவீலரின் பார்க்கிங் ஏரியாவுக்குள் அடங்கிவிடுகிறது. இன்று நாம் பயன்      படுத்தும் சாதாரண கார் ஒன்றை நிறுத்தும் இடத்தில் இந்தக் கார்கள் மூன்றை நிறுத்த முடியுமாம்.

மேலும் இந்தக் காரை அப்படியே பக்கவாட்டில் 60 டிகிரி கோணத்தில் திருப்பி ஓட்ட முடியும். இதனால் முன்னும் பின்னும் பம்பர் இடிக்கும் அளவுக்கு கச்சிதமாக இடமிருந்தால் கூட, அங்கு சுலபமாக பார்க் செய்ய முடியும். சில இடங்களில் காரை நிறுத்த மட்டும் இடமிருக்கும். ஆனால் நிறுத்திய பின் கதவைத் திறந்து வெளிவர முடியாது. அந்த அளவுக்கு அருகருகே கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட தருணங்களுக்காகவே இந்த கார் ஒரு சிறு கணினியோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் நமது ஸ்மார்ட் போன் மூலமே இந்தக் காரை நகர்த்தலாம். நாம் வெளியே நின்று கொண்டு ஸ்மார்ட் போன் மூலமாக இதை எந்த பொந்துக்குள்ளும் பார்க் செய்து வெளியேவும் எடுத்துவிட முடியும்.

ஹிரிக்கோ நிறுவனம்  இதன் விலையை 16,400 அமெரிக்க டாலர் என நிர்ணயித்துள்ளது.

2 comments:

  1. இந்த கார் ஒரு சிறு கணினியோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் நமது ஸ்மார்ட் போன் மூலமே இந்தக் காரை நகர்த்தலாம். நாம் வெளியே நின்று கொண்டு ஸ்மார்ட் போன் மூலமாக இதை எந்த பொந்துக்குள்ளும் பார்க் செய்து வெளியேவும் எடுத்துவிட முடியும்.//

    இந்தியாவில் பார்க் செய்வது எடுப்பது தான் பெரும் கஷ்டம்.
    ஒது மாதிரி கார் இருந்தால் வசதிதான்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...