Search This Blog

Friday, September 02, 2011

ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டிற்கு சமம்

 ஒருகொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் என புதுடில்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார். புதுடில்லியில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சிமையம் போன்றவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டசெஸ்ட் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர் சந்தீப் சால்வி இதனை தெரிவித்தார். மே<லும் புதுடில்லியை சேர்ந்த பத்ரா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் பகாய் பேசும் போது இந்தியாவில் காற்றினால் ஒலியினால், மாசுவால் மனித உடல் நலத்திற்கு விளையும் கேடு குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றார்.ஒலி மாசுபாட்டால் ஆண்டு தோறும் ஒரு லட்சம் இந்திய குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், மரபியல் குறைபாடு உண்டாவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...