நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய 15 காரணிகள்.
இந்தக் கட்டுரை சில நாட்களுக்கு முன் ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தேன். To read it in English click http://entryexit.blogspot.com/2012/02/why-invest-in-gold.html தமிழில் வேண்டுமென்று பலர் கேட்டதால் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தொடர்கிறது.
இதைப்படிக்கும் முன் கவனிக்க: இக்கட்டுரை அமெரிக்க நிதிச்சந்தையில் ஈடுபட்டுள்ளோரால் எழுதப்பட்டது. எனக்கு ஆங்கிலத்தில் ஈமெயிலில் அனுப்பியிருந்தார்கள். பொதுவாக மேற்கத்திய நாடுகளின் முதலீட்டு வல்லுனர்கள் அவர்கள் சம்பாரிக்க புரிந்து கொள்ள மிகவும் சிக்கலான திட்டங்களைச் சொல்வார்கள். அதில் மிகவும் வருமானம் வரும் என நம்ப வைப்பார்கள். ஆனால் நாம் அதை நம்பி முதலீடு செய்தால் நாம் நட்டமடைவோம்; அவர்கள் லாபமடைவார்கள். இதற்கு எடுத்துக்காட்டு:
அ) அன்னியச் செலவாணி முன்பேர ஒப்பந்தங்கள் (Forex Derivative Contracts) சில உலக நாடுகளையும், நிறுவனங்களையும் திவாலாக்கும் நிலைக்குக் கொண்டு சென்றன.
ஆ) Sub prime mortgage எனப்படும் வீட்டுக்கடன் அடமான முதலீட்டுத் திட்ட வாய்ப்பில் அமெரிக்காவே மிகவும் சிக்கலில் மாட்டிகொண்டது நினைவிருக்கலாம்.
எனவே மேற்கத்திய காகித முதலீட்டுத் திட்டங்களில் கவனமாக இருக்கவும். ஏனெனில் அவர்கள் திறமையான மார்கெட்டிங் மூலம் மிக அதிக வருவாய் தரக்கூடிய திட்டமென்று சொல்லி விற்றுவிடுவார்கள். இறுதியில் அந்த பேப்பர் முதலீட்டில் பேப்பர்தான் மீதமிருக்கும்; முதலீடு கரைந்திருக்கும்.
இனி அந்த 15 காரணிகள்:
அ) நாணய மதிப்பிழப்பு:
அன்னிய செலாவணிச் சந்தை இன்னும் சில வருடங்களில் அமெரிக்க டாலர் மிகவும் வீழ்ச்சியடையும் என்று கருதுகிறது. ஆனால் மற்ற நாடுகள் அவர்கள் நாணயம் அமெரிக்க டாலருக்கு எதிராக மதிப்புக்கூடுவதை விரும்பவில்லை. இந்தக்காரணியால் தங்கத்தின் பக்கம் அனைத்து நாடுகளின் கவனமும் திரும்பி தங்க விலையேறும்.
ஆ) தங்க முதலீடு அதிகரிக்கும்:
அனைத்து நாடுகளும் நாணயம் மற்றும் நிதிச்சொத்துகளில் (பங்கு முதலீடு, பாண்டுகள், வங்கி முதலீடுகள்) சிக்கல் வரும்போது தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரிப்பார்கள்.
இ) அமெரிக்காவின் நிதி நெருக்கடி முற்றுகிறது:
கடந்த இரு வருடங்களில் அமெரிக்க பட்ஜெட் உபரி பட்ஜெட்டிலிருந்து பற்றாக்குறை பட்ஜெட்டாக உருவெடுத்துள்ளது. அது அவ்வளவு சீக்கரம் சரியாகும் என்று தோன்றவில்லை. மேலும் நடப்பு கணக்குப் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இவை டாலரின் வீழ்ச்சிக்கு வழிவகுத்து தங்கத்தை இன்னொரு முதலீட்டு வாய்ப்பாக மாற்றும்.
ஈ) வட்டி விகிதம் மைனசுக்கு சென்றுவிட்டது
அமெரிக்க வங்கிகளின் முதலீட்டுக்காண வட்டிவிகிதம் கூடுவதிற்குப்பதிலாக குறைந்துவிட்டது. வட்டி குறையக்குறைய தங்க விலை கூடும்.
உ) உலகப் பணப்பரிமாற்றம் (Money Supply) அதிகரித்துவிட்டது:
அமெரிக்க கடன் அதிகரித்துள்ளதால் அதைச்சமாளிக்க அந்நாடு பணத்தை அச்சடிக்கும். இதுபோல் எல்லா நாடுகளும் செய்தால் பணப்பரிமாற்றம் அதிகரித்து தங்கவிலை கூடும்
ஊ) தேவைக்கும் அளிப்புக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது:
தங்கம் சுரங்கத்திலிருந்து 2500 டன்தான் கிடைக்கிறது. ஆனால் தேவையோ (தங்கப்பயன்பாடு) பலமடங்கு அதிகரித்துவிட்டது. ஆகவே விலை கூடும்
எ) தங்கச்சுரங்க உற்பத்தி குறையும்:
தங்கம் சுரங்கத்திலிருந்து கிடைப்பது நாளடைவில் குறையத் தொடங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக்காரணி தங்கவிலையேற்றத்திற்கு வழிவகுக்கும்.
ஏ) மிகப்பெரிய குறு நிலை நடவடிக்கைகள் (Large short positions):
தங்கம் சுரங்கத்திலிருந்து குறைவாக வெட்டியெடுக்கப்படுவதால் சந்தைத் தேவையினை ஈடுகட்ட மைய வங்கியிலிருந்து (Central Banks / Reserve Banks ) குத்தகை முறையில் வாங்கப்படுகிறது. புல்லியன் மார்க்கெட்டில் மையவங்கி வைத்திருக்கும் தங்கத்தில் 30 – 50% (10000 – 16000 டன் தங்கம்) நிதி நடவடிக்கைகளில் நட்டத்தடைபேரமாக வைக்கப்பட்டுள்ளது. இவை புல்லியன் வங்கிகள் மையவங்கிக்குச் செலுத்தவேண்டியவை.
ஐ) குறைவான வட்டி விகிதங்கள் நட்டத்தடை பேரத்தைக் (Hedging) குறைக்கும்:
வட்டி விகிதங்கள் குறைந்துள்ளன. மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தங்கத்தயாரிப்பாளர்கள் அவர்களின் நட்டத்தடைபேரத்திலிருந்து வெளிவருவார்கள். மேலும் நட்டத்தடைபேரத்திலும் ஈடுபட மாட்டார்கள். இதனால் நிதிச்சந்தையிலிருந்து தங்கம் வெளிவரும்.
ஒ) அதிகரிக்கும் தங்க விலையும் குறையும் வட்டி வீதமும் நிதி ஊக நடவடிக்கைகளைக் (Financial Speculations) குறைக்கும்:
தங்கத்தின் விலை குறையும்போதும் அதே சமயத்தில் வட்டி வீதங்கள் உயரும்போதும் நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மையவங்கியை அணுகி தங்கத்தினை குறைவான குத்தகை வீதத்தில் (0.50 – 1% / வருடம்) பெற்று அதை விற்று அதிக வருமானம் தரும் முதலீடுகளில் முதலீடு செய்வார்கள். ஆனால் தங்கவிலை அதிகரிக்கும் இச்சமயத்தில் இதனை செய்ய மாட்டார்கள்
ஓ) மைய வங்கி வரைவு மாற்றுப்புள்ளியினை (Inflection Point) நெருங்குவதால் மார்கெட்டுக்கு தங்கத்தை தருவதை தவிர்க்கிறார்கள்:
மைய வங்கி ஏற்கனவே அதிகமான தங்கத்தை குத்தகை முறையில் மார்கெட்டுக்கு கொடுத்து விட்டது. மேலும் தூரக்கிழக்கு மைய வங்கிகள் அமெரிக்க டாலர் முதலீட்டிலிருந்து விலகி தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றன
ஔ) தங்கம் பிரபலமாகிறது:
வளரும் நாடுகள் (இந்தியா, சீனா, ரஷ்யா போன்றவை) தங்கத்தினை சிறந்த முதலீட்டு வாய்ப்பாக கருதுகின்றன. 1.30 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனா தேசிய தங்க எக்ஸ்சேஞ்ஜை துவங்கியுள்ளது. அங்கு தங்கத்தின் தேவை 500 டன்னாக உயரும் என எதிர்பார்கப்படுகிறது.
ஃ) தங்கம் பணமாக மதிக்கப்படுகிறது:
இஸ்லாமிய நாடுகள் தங்க நாணயத்தில் (தங்க தினார்) முதலீடு செய்கின்றன. அர்ஜெண்டினா தலைவரும் தங்க நாணயத்தில் (தங்க பிசோ) முதலீடு செய்வதாக சொல்கிறார். இவர்கள் நிதி இடர்பாடுகளில் இருந்து அவர்களைக் காக்க தங்க நாணய முதலீட்டு முறையினை நாடுகிறார்கள். ரஷ்யா முழுவதும் தங்கமாக மாற்றக்கூடிய நாணயத்தினைப்பற்றி யோசித்து வருகிறது.
க) உலக நாடுகளின் இறுக்கமான சூழல் அதிகரிக்கிறது:
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழல், அமெரிக்கப்பிரச்சினைகள், வடகொரியாவின் அணுஆயுதக்குவிப்பு முயற்சிகள், அமெரிக்கா - சீனா முரண்பாடுகள் (சீனா அந்நாட்டு நாணயத்தினை அமெரிக்க டாலருக்கு எதிராக மதிப்புக்கூட்ட மறுத்து விட்டது) இவை மக்களை தங்க முதலீட்டை நோக்கி இழுக்கும்
கா) தங்க மார்கெட்டின் கட்டுப்பாட்டளவு குறைவாக இருப்பதால் பலுக்கல் (Leverage) அதிகரிக்கும்:
உலக தங்கத்தின் மதிப்பு 1 டிரில்லியன் டாலராக் இருக்கிறது. ஆனால் நிதி நடவடிக்கையில் (Financial Market Transactions) உள்ள தங்க மதிப்பு 100 பில்லியனுக்கும் குறைவான டாலரே. அடிப்படைக் காரணிகள் உற்சாகமூட்டுவதால் தங்க முதலீடு (தங்க, தங்கப்பங்கு) பல மடங்கு டிரில்லியனாக அதிகரிக்கும்
முடிவுரை:
தங்கம் குறைவாக மதிப்பிடப்படும், குறைவாக உடைமையாக்கப்பட்டும், குறைவாக வளர்ச்சியடைந்தும் உள்ளது. இதன் மீதான முதலீட்டு வாய்ப்புகள் மக்களுக்கு இன்னும் புரியவில்லை. 1970ல் ஒரு அவுன்ஸ் தங்கம் $35 லிருந்து $800க்கு 10 வருடங்களில் அதிகரித்திருக்கிறது. அதுமாதிரியே மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்பை விட இப்பொழுது தங்க முதலீட்டு அடிப்படைக்காரணிகள் (Fundamental Factors) மிகவும் வலிமையாக உள்ளது.
400$ இருந்தது இன்னிக்கு 1756 $
ReplyDeleteவிலை ஏற்றம் பயமா இருக்கு.
இந்த மாதிரி கண்ணு மண்ணு தெரியாம ஏறுச்சுனா சீக்கரம் கீழே விழும்
Delete