இந்தச் செய்தி மார்ச் 2ம் நாளைய தினகரனில் வந்துள்ளது. செய்தி கீழே:
வாஷிங்டன்: சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகரித்து வரும் வாகனங்களே காரணம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு ஒபாமா அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஒபாமா, இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகளில் கட்டுக்கடாங்காமல் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையே எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறினார். இந்தியா மற்றும் சீனாவில், தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளதால் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்க வாய்பிருப்பதாகவும் ஒபாமா எச்சரித்துள்ளார்.
ஏன் உலகின் போலி போலிஸ்காரன் இந்த மாதிரி சொல்கிறார் என்றும் அதன் விளைவுகள் என்ன என்றும் கீழே காணலாம்:
1. அவர் நாட்டில் அவருக்கு எதிரான கருத்தில் சரியான விளக்கம் அவரிடம் இல்லை. எனவே சாதாரண மனிதர்கள் பக்கத்து வீட்டினர் மீது பொறாமைப் பட்டு குற்றம் சாட்டுவது போல் உளறியிருக்கிறார்.
2. அதிபர் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்கிற பதட்டத்தில் வந்த வார்த்தைகள். ஏனெனில் அவரின் பதவிக்காலத்தில் அவர் எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் எந்த விதமான குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை
3. அமெரிக்க நிதிநிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் மாணவர்களிடம் உரையாற்றும் போது பிரன்ச், ஜெர்மன் போன்ற மொழிகளை படித்தால் அந்தந்த நாடுகளில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். மற்ற நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்வதற்குப்பதிலாக இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் நிலைக்கு இன்று அமெரிக்கா உள்ளது.
4. சமீத்தில் இந்தியா வந்த போது இந்தியாவிடமிருந்து வேலைவாய்ப்புகளும், முதலீடும் அமெரிக்காவுக்கு வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தார். அதாவது வளரும் நாட்டினரிடமிருந்து வளர்ந்த (?) நாட்டுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தில் கூறியுள்ளார்.
5.எண்ணெய் விலை உயர்வுக்கு ஆன்லைன் டிரேடிங்கும், அமெரிக்கா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் மீது பொருளாதார அழுத்தை கொடுப்பதுமே முக்கியக் காரணம். ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த உலக நாடுகளை அமெரிக்க நிர்பந்தித்து வருகிறது. மேலும் பணபரிவர்த்தனை நடவடிக்கைகளை முடக்கியுள்ளது.
6. இது மாதிரியான உண்மைகளை மறைத்து பிரச்சனையை திசைதிருப்பி இக்கருத்தின் மூலம் சாதரண மன நிலையான பொறாமை, வயிற்றெரிச்சல், இயலாமை, தன் மீதான அவநம்பிக்கை என கீழ்த்தரமான அரசியல்(வியா)வாதியாகப் பேசியதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே இணக்கமின்மையை, பகையை உருவாக்குகிறார்
7. எனவே இந்தியர்களே நமது நாட்டில் சம்பள விகிதம் மற்ற வளர்ந்த நாடுகளை விட 12% உயர்ந்திருக்கிறது. தொழில் வளர்ச்சி விகிதமும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளை விட குறிப்பிட்டுச் சொல்லும் வீதத்தில் முன்னேறி வருகிறது. அமெரிக்கா கடனாளியாகி சமீபத்தில் பொருளாதாரம் வீழ்ந்த போது நமது நாட்டில் பெரிய அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்பதை நினைவு கூறலாம்.
8. ஆகவே நம் நாட்டினை மேலும் உயர்த்த நமது திறமைகளை இந்தியாவிற்கு செலவிடுவோம். இந்தியா, சீனா நட்புறவை வலுப்படுத்த முயலுவோம். ஏனெனில் இனி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆசிய நாடுகளே பொருளாதாரத்தில் வல்லமை செலுத்தும் நிலையில் உள்ளது.
பயனுள்ள பதிவு. நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteசில வருடங்களுக்கு முன் அரிசி மற்றும் உணவு தட்டுப்பாடிட்கு, இந்தியா போன்ற நாடுகள் தான் காரணமாம். [மக்கள் தொகை]. ஆனால், அந்த வீணாய்ப்போனவர்கள், பயோ-எரிபொருள், என்ற பெயரில், எவ்வளவு தானியங்களை, விரயம் செய்ததை, கேட்டால், கூசாமல், எதோ, நமக்கு ஒன்றும் தெரியாதது போல், அறிவு ஜீவி போல் பேசுவார்கள்.
Delete