Search This Blog

Friday, March 09, 2012

கோலங்கள் - தெரிந்ததும் தெரியாததும்


அதிகாலையில் வீட்டுமுன் சாணம் தெளித்து கோலம் போடுவதில் அர்த்தம் உள்ளது. சாணம் கிருமி நாசினி வீட்டுக்குள் கிருமிகளை நுழையவிடாது. மார்கழி பனிக் காற்றில் மருத்துவ குணமுள்ள ஓசோன் இருப்பதால் அதிகாலையில் கோலம் போடும் பெண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.   
நம் மூதாதையர்கள் அரிசி மாவில்தான் கோலம் போட்டனர். அது அன்னதானத்துக்கு சமமாக கருதப்பட்டது. 

கோலம் போடுவதற்கான சில வழிமுறைகள்:

* சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும். வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.

* தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது.

*  கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும். சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், கோல மாவின் வெண்மை பிரம்மாவையும் காவியின் செம்மை சிவனையும் குறிக்கிறது.

* கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும்.

* பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு.



* விழா நாட்களில் இலை கோலம் போடுவது சிறப்பாக இருக்கும்.



* ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை (அ) சூரிய கோலம் நல்லது. திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் போடுவது நல்லது. செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் போடவேண்டும்.  வியாழக்கிழமை துளசி மாட கோலம், வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் போடுவது நல்லது. சனிக்கிழமை பவளமல்லி கோலம் போட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

* வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது.

* கோலத்தின் 8 பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

* இறந்தவர்களுக்கு செய்யும் விஷேசம், பித்ரு நாட்களில் கோலமிடக்கூடாது.

* இடது கையால் கோலம் போடக்கூடாது. ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும்.

* பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும் உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.

* கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும்.

* கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும்.




1 comment:

  1. அருமையான விளக்கம் கோலம் பற்றி.

    // கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும்.

    * கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும்.//

    என் அம்மா இப்படித்தன் சொல்வார்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...