இந்தப் பதிவு எப்படி சாப்பிடுவது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள: ஓகே. எப்படி சாப்பிடுவது?
* பசி வந்த பின்புதான் சாப்பிட வேண்டும். உடலில் உள்ள செல்களுக்குச் சத்துகள் தேவை என்னும்போதுதான் நமக்குப் பசி எடுக்கிறது. எனவே பசிக்காமல் சாப்பிடக் கூடாது.
* அடுத்து சாப்பிடும் உணவு நல்லபடியாகச் செரித்து அதிலுள்ள சத்துகள் உடலில் சேர வேண்டும். அதற்கு வாயைத் திறந்து, திறந்து அவசர அவசரமாக உணவை விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாயைத் திறந்து மூடுவதன் காரணமாக உணவுடன் காற்றும் வயிற்றுக்குள் செல்கிறது. அதனால் உணவை வாயில் போட்டவுடன், உதட்டை மூடிக் கொண்டு, உணவு கூழ் போல் ஆகும்வரை மென்று, உணவின் சுவையை நாக்கு உணருமாறு செய்து அதற்குப் பின்பு விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாக்கில் ஊறும் உமிழ்நீருடன் உணவு கலந்து வயிற்றுக்குள் செல்கிறது. உமிழ்நீர் உணவை நன்கு செரிக்கச் செய்கிறது. எனவே அவசரமாகச் சாப்பிடக் கூடாது.
* சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போது, சாப்பிட்ட பின்பும் நிறையத் தண்ணீர் குடிப்போம். நல்ல பசி உள்ள வேளையில் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. நாம் தண்ணீர் குடிக்கும்போது, ஜீரண நீர்கள் நீர்த்துப் போகின்றன. இதனால் செரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. அதாவது, நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள் உடலில் முழுமையாகச் சேர்வதில்லை.
* குளித்தவுடனேயே சாப்பிடக் கூடாது. நீங்கள் வெந்நீரிலோ, தண்ணீரிலோ குளிக்கும்போது நமது உடலின் வெப்பநிலை மாறுபடுகிறது. அப்படி மாறும் வெப்பநிலையை - உடலின் வெப்பநிலைக்கு - அதாவது 37 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் - கொண்டு வர நமது உடலில் உள்ள செல்கள் முழுக்க முயற்சி செய்கின்றன. குளித்து முடித்தவுடன் உடலில் ஏற்பட்ட வெப்பநிலை மாறுதலை சரி செய்வதற்காக, உடலின் செல்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நாம் சாப்பிட்டால் உணவு ஜீரணமாவதில் பிரச்னை ஏற்படும். அதேபோன்று சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது.
* தண்ணீர் குடிப்பதிலும் நமக்குச் சரியான தெளிவில்லாமல் இருக்கிறோம். எவ்வளவு தண்ணீர் குடிப்பது? உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் தேவைப்படும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதுமானது.
* தேவையான அளவுக்குத் தூங்க வேண்டும். தேவையான அளவு தூக்கம் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். கடுமையான உடல் உழைப்பாளிக்கு அதிகத் தூக்கம் தேவைப்படும். ஏஸி அறையில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து மூளை உழைப்புச் செய்பவருக்கு அதிகத் தூக்கம் தேவைப்படாது. எனவே தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரைகளை விழுங்குவதில் அர்த்தமில்லை. தூக்கம் வரவில்லை என்றால் கண்ணை மூடிக் கொண்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூக்கம் வரும்போது தூங்கிக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தூங்கினால்தான் செல்கள் உடலில் நன்கு செயல்பட முடியும்.
* செல்லுக்கு அறிவு உண்டு. தேவையான சத்துப் பொருட்கள் உரிய அளவில் இருந்தால் கெட்டுப் போன செல்கள் தம்மைத் தாமே சரி செய்து கொள்ளும்.
* எவற்றைச் சாப்பிடுவது?
1) உணவு வகைகளில் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் சுவையுள்ள பழங்கள், வெள்ளரி போன்ற காய்கள் போன்றவற்றுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும்.
2) முளைவிட்ட தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3) சமைத்த சைவ உணவுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
4) அசைவ உணவு வகைகளுக்கு அதற்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
5) டீ, காப்பி, மது போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது.
எவற்றை மட்டும் சாப்பிட்டு நாம் மூன்றுநாட்களுக்கு மேல் உயிரோடு இருக்க முடியுமோ, அவையெல்லாம் உணவு. எவற்றை மட்டும் சாப்பிட்டு மூன்று நாட்களுக்கும் மேல் உயிரோடு இருக்க முடியாதோ, அவையெல்லாம் உணவு அல்ல. எடுத்துக்காட்டாக மது போன்றவை உணவல்ல.
உடல் உழைப்பு உள்ளவர்களைத் தவிர, பிறர் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, யோகாசனம் போன்றவற்றைச் செய்து வந்தால் நோயின்றி வாழலாம். வந்த நோயையும் சரிப்படுத்திவிடாலாம்.
நன்றி: பாஸ்கர், கோவை
No comments:
Post a Comment