* முன்பெல்லாம் வசமாக சிக்கும் வாகனங்களை மட்டும் திருடிக் கொண்டுபோய், அதற்கென்று இருக்கும் ஆட்களிடம் விற்பார்கள். `பக்கா பிளான்’ இல்லாமல் தட்டுத்தடுமாறி இதை செய்து வந்ததால், பெரும்பாலான திருடர்கள் சிக்கிக் கொண்டார்கள். இப்போது மராட்டியம் முதல் கன்னியாகுமரி வரை `நெட் ஒர்க்’ அமைத்து கனகச்சிதமாக கார் திருட்டு நடத்துகிறார்கள்.
* கார் திருடபட்டு, மின்னல் வேகத்தில் பல கைகள் கடந்து, கடத்தபடுகிறது. இறுதியில் `காருக்கான பியூட்டி பார்லருக்கு’ செல்கிறது. அங்கு மரத்தில் இருந்து புளியம் பழம் உலுப்புவதுபோல் சில மணி நேரத்தில் அத்தனையையும் கழற்றி அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடுகிறார்கள்.
* இந்த நெட் ஒர்க்கில் தலைவனாக இருபவனுக்கு `டீம் லீடர்’ என்று பெயர். அவனுக்கு கீழ் சில இன்பார்மர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கார்கள் எங்கே நிற்கின்றன, எந்த நேரத்தில் அதை தள்ளலாம், எந்த ரூட்டில் கொண்டு செல்லலாம் என்பதை முடிவு செய்கிறார்கள். இவர்கள் கொடுக்கும் ஐடியா படி காரை திருடுபவருக்கு `லிப்ட்டர்’ என்று பெயர்.
* குறிப்பிட்ட இடத்தில் இருந்து இவர் ஒரு காரை திருட 15 நிமிடங்கள் போதும். அந்த அளவிற்கு லிப்ட்டர் தொழில் `தேர்ச்சி’ பெற்றிருக்கிறார். திருடபட்ட வாகனம் நான்கு, ஐந்து கிலோ மீட்டர் கடந்ததும் காத்திருக்கும் அடுத்த நபர் கையில் ஒபடைக்க படுகிறது. இவருக்கு `டிரான்ஸ்போர்ட்டர்’ என்று பெயர். அவரிடம் இருந்து வாகனத்தை பெறுபவர் `ரிசீவர்’.
* கடத்திக் கொண்டு வரும் வாகனத்திற்கு மார்க்கெட் விலையை கொடுத்து வாங்கு பவர்தான் இந்த ரிசீவர். இவர்கள் தமிழ்நாட்டிலும் முக்கிய இடங்களில் இருக்கிறார்கள். குறிப்பாக கேரள எல்லை பகுதிகளில் இவர்கள் கொட்டம் கொடிகட்டி பறக்கிறது. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு கார்களை கடத்திக்கொண்டு வந்து `கழற்றும்’ வேலையில் அதிக சிக்கல் ஏற்படுவதில்லையாம்.
* 13 லட்ச ரூபாய் கொண்ட வாகனம் திருடபடுகிறது என்றால், அதற்கு இப்படி விலை நிர்ணயம் செய்கிறார்கள். என்ஜின் விலை- 80 ஆயிரம். சேசிஸ்- 60 ஆயிரம். கியர் பாக்ஸ்- 19 ஆயிரம். டீசல் டேங்க்- 2 ஆயிரம். ரேடியேட்டர்- 6 ஆயிரம். டயர்- ஒன்றுக்கு 4 ஆயிரம். ஆக்சில்- 15 ஆயிரம்… இப்படி ரிசீவர் விலை நிர்ணயம் செய்து, டீம் லீடருக்கு கொடுத்து விடுகிறார்.
* அவர்கள் ரூம் போட்டு தண்ணி அடித்து பங்கு பிரித்துவிட்டு, அடுத்த கடத்தலுக்கு நாள் குறிக்கிறார்கள். இந்த `மார்க்கெட்’ இப்போது ரொம்ப சூடு பிடித்திருப்பதால், நிறைய புது முகங்கள் இந்த `தொழிலில்’ குதிச்சிருக்காங்களாம். உங்க காரை கொஞ்சம் கவனமாக பார்த்துக்குங்க..!
thanks: dinakaran
No comments:
Post a Comment