Search This Blog
Thursday, December 01, 2011
நாம் உண்டு முடித்த பிறகு வெந்நீர் (Warm water - இளஞ்சூடு) குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது
நமது உணவுப் பழக்க வழக்கத்தில் - உண்ட பின்பு - ஒரு முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.
நாம் உண்டு முடித்த பிறகு வெந்நீர் (Warm water) இளஞ்சூடு உள்ள நீர் (Hot Water) என்றால் கொதிக்க கொதிக்க உள்ள நீர்) குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது! சாப்பிடும்போது இடையில் குடிக்கும் தண்ணீர் இப்படி இளஞ்சூடு உள்ள நீராக இருப்பது நல்லது.
இது மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறதாம்! என்னே வியப்பு! சீனர்களும், ஜப்பானியர்களும் உணவு உண்ட பின்பு சூடாக தேநீர் அருந்துகிறார்கள். ஏன் அரபு நாடுகளில் கூட இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
உண்டவுடன் வெறும் குளிர்நீரைக் குடிப்பவர்கள் மாறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இக்கட்டுரை அமையக் கூடும்!
வெந்நீர் - இளஞ்சூடு உள்ள நீர் செய்யும் நன்மையை - இந்தக் குளிர் நீர் செய்வதில்லையாம்!
குளிர் நீர் குடித்தவுடன், உண்ட உணவினை கெட்டியாக (Solidity) ஆக்குகிறதாம். காரணம் நம் சாப்பாட்டில் எண்ணெய் - கொழுப்புகளும் உள்ளன அல்லவா? இது செரிமானத்தை காலதாமதப்படுத்துகிறது. இந்த உணவுக் கூழ் அமிலத்துடன் இணைந்து செயலாற்றும்போது, அது உடைந்து கெட்டியான உணவை விட வேகமாக குடலினால் உட்கிரகிக்கப்படுகிறது. இது குடலின் ஓரங்களில் திரண்டு, வெகுவிரையில் கொழுப்புகளாக மாறி புற்று நோய்க்கு வழி ஏற்படுத்தி விடும்.
உணவு உண்ட பிறகு சூடான சூப்போ அல்லது இளஞ்சூடு உள்ள வெந்நீரோ அருந்துவதே மிகவும் சிறந்தது.
மாரடைப்புக்கான பொதுவான அறிகுறிகள்
மாரடைப்புப்பற்றி ஒரு முக்கியமான குறிப்பு:
மாரடைப்பு ஏற்படும் ஒவ்வொரு நேரத்திலும் இடது கையில் வலி ஏற்படாது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
தாடைப் பகுதியில் கடுமையான வலி இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
மாரடைப்பு ஏற்படும்போது உங்களுக்கு முதன்முதலாக நெஞ்சில் வலி ஏற்படாது.
குமட்டிக் கொண்டு வாந்தி வருவது போன்ற உணர்வு மற்றும் அதிகப்படியாக வியர்ப்பது ஆகியவையும் மாரடைப்பின் பொதுவான அறிகுறிகளாகும்.
தூங்கிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்படும்; 60 விழுக்காடு மக்கள் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வதில்லை. தாடையில் ஏற்படும் வலி ஆழ்ந்த உறக்கத்திலிருந்து உங்களை எழுப்பிவிடக்கூடும். நாம் அதனைப்பற்றி நன்கு அறிந்தவர்களாகவும், மிகுந்த கவனம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இவற்றைப் பற்றியெல்லாம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நாம் அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்தச் செய்தியைப் படிப்பவர்கள் ஒவ்வொருவரும் 10 பேருக்கு இந்தச் செய்தியை அனுப்பினால், குறைந்தது நம்மால் ஓர் உயிரையாவது காப்பாற்ற முடியும் என்று நிச்சயமாக நம்பலாம் என்று ஓர் இதயநோய் மருத்துவர் கூறுகிறார்.
எனவே இதனைப் படித்துவிட்டு, ஒரு நண்பருக்காவ்து சொல்லுங்கள் ஓர் உயிரை அதனால் காப்பாற்ற முடியும்.
Labels:
eating,
eating habit
Subscribe to:
Post Comments (Atom)
?
+
X
Recommended for you
Loading..
loading
No comments:
Post a Comment