Search This Blog

Showing posts with label எடை குறைய. Show all posts
Showing posts with label எடை குறைய. Show all posts

Monday, February 06, 2012

உடலை ஸ்லிம் ஆக்கும் இந்திய உணவுகள்

மஞ்சள்

இந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மஞ்சள் கொழுப்பு சக்தியை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

கொத்தமல்லி

உடலின் கொழுப்பை குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்கு உண்டு. உண்ட உணவை ஜீரணப்பதில் கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடலை ஸ்லிம் ஆக்குகிறது.

கறிவேப்பிலை

உடலின் கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் டாக்ஸின்கள் உள்ளன. தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலைகளை உட்கொண்டால் கொழுப்பு படிப்படியாக குறையும். மோர், காய்கறி சாலட், போன்றவைகளில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

வெள்ளைப்பூண்டு

கொழுப்பை எரிப்பதில் வெள்ளைப்பூண்டுக்கு முக்கிய பங்குண்டு. இது கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே இது உடலின் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடுகு எண்ணெய்

சமையல் எண்ணெயானது உடலில் கொழுப்பு சேருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறைப்பு கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். கடுகு எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடென்ஸ்,வைட்டமின்கள் போன்றவை காணப்படுகின்றன. இது இதயத்திற்கு இதமானது.


முட்டைக்கோஸ்

உடல் கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவுகளில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் குறைப்பில் சாலட் வகைகளில் முட்டைக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. முட்டைக்கோஸ் உடலில் கொழுப்பு, சர்கரை போன்றவற்றை சரிசமமாக தக்கவைக்கிறது.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் ஏ,பி,சி, மற்றும் ஈ வைட்டமின்கள் உள்ளன. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. இது குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு. உணவியல் நிபுணர்கள் உடல்குறைப்பு தொடர்பான உணவாக பாசிப்பருப்பினை பரிந்துரைக்கின்றனர். இது உயர் ரகமான நார்ச்சத்து கொண்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.

தேன்

உடல்பருமனை குறைப்பதில் தேனின் பங்கு முக்கியம்மானது. தினமும் காலை நேரத்தில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமன் குறையும்.

மோர்
உடலுக்கு தேர்வையான நீர் சத்தை அளித்து, கொழுப்பை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான கலோரிகளை மட்டுமே அளிக்கும் தன்மையுடையது என்பதால் தேவையற்ற கொழுப்பை உடலில் தங்கவிடாது.

சிறு தானியங்கள்

நார்ச்சத்து நிறைந்த கம்பு, சோளம், ராகி, தினை போன்றவை உடம்பில் கொழுப்பை ஏற விடாது. விலைகுறைவானதும் சத்து நிறைந்த்துமான இந்த தானிய உணவுகளையே பண்டைய காலத்தில் உணவாக உட்கொண்டனர்.

பட்டை, கிராம்பு

கறி சமையலுக்கு வாசனைக்காக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை கொழுப்புச்சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை உடம்பில் தங்கவிடாமல் செய்து, டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துகிறது.


நன்றி:தட்ஸ்தமிழ்

Sunday, November 27, 2011

7 நாளில் 6 கிலோ குறையுங்க...

7 நாளில் 6 கிலோ குறையுங்க... 7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது. அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும். ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும். *** இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும். *** நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ஐந்தாம் நாள் சிறிதளவு (ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர் (மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது. *** ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம். ஏழாவது நாள் ஒரு கப் சாதம் - காய்கறிகளுடன், பழ ஜூஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு. *** இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான். எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும். *** 3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும். நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. 5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம். *** அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது `ஜெனரல் மோட்டார்ஸ் டயட்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...