Search This Blog

Saturday, October 31, 2015

தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும்

ஒரு காலத்தில் இணையத்தளம் என்பது அச்சு ஊடகத்திற்கு விளம்பரப் பதாகை போல இருந்தது. இணையத்தில் இதழுக்கான தளத்தில் விளம்பரம் இட்டு அச்சு இதழை விற்றனர். ஆனால் இணையத்தின் ஆற்றல் மெல்ல மெல்ல இதழ்களை ஈர்க்கத் தொடங்கியது. இரண்டும் வெவ்வேறு வெளி என்றுணர்ந்து இரண்டிலும் பெரிய ஊடகங்கள் காலூன்றியுள்ளனர். தினசரி, வாராந்திரி, மாந்தாந்திரி என்று பெரு இதழ்கள் எல்லாம் விலையில்லாமலோ, விலைவைத்தோ இணையத்தில் உள்ளன.

பல அச்சு சிற்றிதழ்கள் இணையத்தில் பெயரளவிலும் ஒரு இணையப்பக்கம் கொண்டிருப்பதில்லை. அதைவிட தகவல் தொடர்பிற்கு ஒரு மின்னஞ்சலும் இல்லை. சில இதழ்கள் ஆர்வமுடன் இணையத்தளம் தொடங்கினாலும் கொண்டுசெல்வதில் சிக்கல் கொண்டு கைவிடப்படுகின்றன. ஒன்றிரண்டு இதழ்கள் பேஸ்புக்கில் பக்கத்தைத் திறந்து இதழின் அட்டைப்படத்தை வெளியிட்டதுடன் நின்றும் விடுகின்றன. முதலில் இணையத்திலுள்ள சிற்றிதழ்களைப் பார்ப்போம்.
பல்சுவை இதழ்கள்:

கிழக்கு வாசல்
http://kizhakkuvaasal.blogspot.com

தன்னம்பிக்கை
http://thannambikkai.com

பத்ரி அவர்களின் ஆழம்
http://aazham.in/

ஜெ.பி.யின் முழக்கம்
www.jpyinmuzhakkam.com/jpyinmuzlakkam-boo.html

காவியம் மாத இதழ்
http://www.kaviyam.in/

ரௌத்திரம்
http://rowthiram.in

அமுதசுரபி
http://amudhasurabi.in

புதிய பார்வை
http://puthiyaparvai.com/

உரத்த சிந்தனை
http://vidhai2virutcham.com/

Thursday, September 24, 2015

A/c (Air conditioner) எளிமையான விளக்கங்கள்










புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.



ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். ஸ்பிளிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள்.இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.



எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லாப் பகுதியும் சூடாகிவிடும்.வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும்.ஸ்பிளிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.

  • ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கிவிடும்,
  • நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...