Search This Blog

Thursday, January 20, 2011

21.12.2012அன்று பூமியில் என்ன நடைபெறும்?

நமது பூமியை சந்திரன் ஒரு சுற்று சுற்றிவர 28 1 / 4 நாட்கள் ஆகின்றன.நமது சூரியனை நாம் வாழும் பூமி சுற்றிவர 365 1/4 நாட்கள் ஆகின்றன.நமது சூரியன் ஒரு மையத்தை சுற்றிவருகிறது.அந்த மையத்தின் பெயர் அல்சியோன் ஆகும்.இந்த அல்சியோனை நமது சூரியன் சுற்றி வர 26,000 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த அல்சியோன் பிரபஞ்ச மையத்திலிருந்து வெளிவரும் போட்டான் பேண்டில் பொருந்தியுள்ளது.இந்த போட்டான் பேண்டின் அகலத்தைக் கடக்க நமது பூமிக்கு 2000 ஆண்டுகள் ஆகும்.
நமது பூமி இந்த போட்டான் பேண்டிற்குள் கி.பி.1998 ஆம் ஆண்டில் பிரவேசித்துள்ளது.இந்த சக்தி மெல்ல மெல்ல வலுவடைந்து,14 ஆவது ஆண்டு,கி.பி.2012 இல் அதி உச்சமடையப்போகிறது.இந்த சமயத்தைப்பயன்படுத்தி,நாம் தியானம் செய்தால்,பிரபஞ்ச சக்தி எனப்படும் காஸ்மிக் சக்தி நமக்குப் பெருமளவில் கிடைக்கும்.இதனால்,நாம் ஏராளமான நன்மைகளையும்,முக்தி எனப்படும் மறுபிறப்பற்ற நிலையையும் அடையமுடியும்.
இப்படிப்பட்ட ஒரு காலகட்டம் 11,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏற்படும்.
அதேசமயம்,இந்த அபார சக்தியால் பூமியின் அச்சாணி சற்றேவிலகுவதற்கு வாய்ப்புக்கள்உண்டு.இதனால்,இயற்கைசீற்றங்கள்,ஆழிப்பேரலை,ஓயாத மழை உண்டாக வாய்ப்புக்கள் அதிகம்.பூமியில் பல தீயசக்திகள் வலுப்பெற்று,பூமியில் கஷ்டநஷ்டங்கள் ஏற்படலாம்.
ஆனால்,கி.பி.2012 க்குள் இந்த நிலைமாறி உலகெங்கும் தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால்,தீயசக்திகள் அழிந்து உலகமேஒரு அமைதி நிலைக்கு வந்துவிடும்.
அல்சியோன் என்ற பிரம்மாண்ட நட்சத்திரம்,பிரபஞ்சமையத்தைச் சுற்றி வர 2,25,000 ஆண்டுகள் ஆகின்றன.வரும் 21.12.2012 அன்று அல்சியோன் தனது முதல் சுற்றை முழுமையாக்குகின்றது.அதாவது பிரபஞ்சமையத்தை ஒரு முறை வலம் வந்திருக்கும்.
அதேபோல்,நமது சூரியனும் தனது 8 வது சுற்றை முடித்துக்கொள்ளும் நாள் அதுதான்.பிரபஞ்சத்துக்கே இந்த நாள் மிக முக்கியமான நாள்!
புத்தர்,விவேகானந்தர்,ஈசா எனப்படும் ஏசு,முகமது நபி முதலான தெய்வீக சக்திகள் நமது பூமிக்கு வருகைதருவார்கள் என்பது நம்பிக்கை.அதற்குள் நாம் தினமும் தியானம் செய்து நமது மூன்றாவது கண்ணைத்திறந்துவிட்டால், இந்த மகான்கள் அனைவரையும் ஒருசேர தரிசிக்கும் பாக்கியம்நமக்குக் கிடைக்கும்.

நன்றி:ஆன்மீக விஞ்ஞானவழிகாட்டி,பக்கம் 88.கிடைக்குமிடம்:கோவைபிரமிட் ஆன்மீக மன்றம்,
“அகஸ்தியர்” 6,பிரமிட் காம்ப்ளக்ஸ்,வடவள்ளி,கோவை41.
செல்:94424 93327,தொலைபேசி:0422 2401023

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...