Search This Blog

Wednesday, February 29, 2012

Thank You!


Tuesday, February 28, 2012

என் முதலாளி / மேனேஜர் (Boss) ரொம்ப மோசம் - சர்வே முடிவு

என் முதலாளி / மேனேஜர்தான் இருப்பதிலியே மோசம் என்ற எண்ணம் பொதுவாக எல்லோரிடமும் காணப்படுகிறதாம். நம் நாட்டிலும் கூட முதலாளிகள் 

 • திறமையில்லாமல் இருக்கிறார்கள்
 • புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்
 • தலைமைப்பண்பு இல்லை 
என்ற எண்ணம் உள்ளதாக மேனேஜ்மெண்ட் ஆலோசக நிறுவனம் DDI நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மேனேஜர்களில் 34% திறமையானவர்கள் இல்லையென்றும், 40%  மேனேஜர்கள் மட்டுமே தங்களின் சுய கெளரவத்திற்கு மதிப்பளிப்பதாகவும் ஆய்வில் பங்கு பெற்றவர்கள் கூறுகிறார்கள்

55% நபர்கள் மேனேஜர்களால் வேலையை விட்டு விடலாமா என்று யோசிக்கிறார்கள். 39% நபர்கள் தங்களது மேனேஜர்களால்தான் வேலையை விட்டதாக சொல்கிறார்கள். 

56% நபர்கள் இப்போதிருக்கும் முதலாளி / மேலாளர் தங்களுக்கு உதவி செய்து தங்களின் திறமையை அதிகரிக்க உதவுதாக சொல்கிறார்கள்

பெண்களை (34%) விட ஆண்கள் (53%) தங்கள் பாஸை விட தாங்கள் நல்ல லீடராக இருக்க முடியும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 35% பாஸ் மட்டுமே தங்களின் பணிரீதியான பிரச்சனைகளை காது கொடுத்துக் கேட்பதாக குறைபட்டுக்கொள்கிறார்கள். 60% பாஸ்கள் தங்களின் சுய மரியாதையினை ஏதாவது ஒரு சந்தர்ப்பதிலாவது காயப்படுத்தியாக சொல்கிறார்கள்

இந்த ஆய்வு
 1. அமெரிக்கா
 2. ஐரோப்பா
 3. ஆஸ்திரேலியா
 4. கனடா
 5. சீனா
 6. இந்தியா
 7. ஜெர்மனி
 8. மலேசியா
 9. சிங்கப்பூர்
 10. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் 1250 முழு நேரப் பணியாளர்களிடம் நடத்தப்பட்டது.
Source:Indian Express

Sunday, February 26, 2012

A very good and true Documentary about Wal Mart!

Wal-Mart: The High Cost Of Low Price is a feature length documentary that uncovers a retail giant's assault on families and American values. The film dives into the deeply personal stories and everyday lives of families and communities struggling to fight a Goliath. A working mother is forced to turn to public assistance to provide health care for her two small children. A Missouri family loses its business after Wal-Mart is given over $2 million to open its doors down the road. A mayor struggles to equip his first responders after Wal-Mart pulls out and relocates just outside the city limits. A community in California unites, takes on the giant, and wins! Producer/Director Robert Greenwald and Brave New Films take you on an extraordinary journey that will change the way you think, feel -- and shop.

Producer/Director Robert Greenwald and Brave New Films take you on an extraordinary journey that will change the way you think, feel -- and shop.

Check out their website: http://www.walmartmovie.com

The media material presented in this production is protected by the FAIR USE CLAUSE of the U.S. Copyright Act of 1976, which allows for the rebroadcast of copyrighted materials for the purposes of commentary, criticism, and education.


Saturday, February 25, 2012

தொப்பையை கரைத்து இளமையை மீட்க உதவும் யோக முத்திரா


ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன.  நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது. 

குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது தமிழ்வாக்கு.

அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச்சிக்கலையும் நீக்குவதால் யோக முத்திரா ஆசனங்களில் முத்திரை பதிக்கிறது. இந்த ஆசனம் எளிமையானது.

 
செய்முறை:
பத்மாசனத்தில் அமரவும். இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதிங்கால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக் கொள்ளவும். நிமிர்ந்து நேரே உட்காரவும். நுரைஈரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும். இப்போது மூச்சை விட்டுக் கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும். இப்படி இருக்கும் போது மூச்சை சௌகரியப்படி விடவும் வாங்கவும் செய்யவும். மூச்சை அடக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவர்க்கு வேண்டியபடி மூன்று முதல் 7 தடவைகள் வரை செய்யலாம்.
இந்த ஆசனம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும் செய்வதற்கு அவ்வளவு எளிதாக வந்து விடாது. சிலருக்கு என்ன செய்தாலும் மிகவும் அடிப்படையான ஆசனமான பத்மாசனம் போடவே வராது. அவர்கள் பத்மாசனம் நன்றாக செய்ய வரும் வரை, சாதாரணமாக அமரும் முறையில் சுகாசனத்தில் உட்கார்ந்து, இரண்டு முழங்கால்களுக்கு மேல் இரண்டு உள்ளங்கைகளை வைத்து அழுத்திக் கொண்டு, முன்னுக்கு குனிந்து மூக்கு தரையை தொட முயற்சிக்க வேண்டும். இரண்டு கைகளையும் பின்னுக்கு கட்டிக் கொண்டு தொடவும் முயற்சி செய்யலாம்.
அல்லது சுகாசனத்தில் இரண்டு பெருவிரல்களை கைகளால் பிடித்துக் கொண்டு முன்னுக்கு குனியவும் செய்யலாம். இவைகள் எல்லாம் பத்மாசனம் வராதவர்களுக்கு தான். ஆனால் இடையிடையில் பத்மாசனமும் போட்டு பழக வேண்டும். பிறகு முன் சொன்னது போல் பத்மாசனத்திலிருந்தே குனிய முயற்சி செய்ய வேண்டும். கைகளை குதிகாலின் மீது வைத்துக் கொண்டும் குனியலாம். கைகளை குதிகாலின் மேல் வைத்துக் கொண்டு குனிவது கடினமாக இருந்தால், பின்னுக்கு கைகளை கட்டிக் கொண்டு குனியலாம். சில நாட்களுக்கு பின் கைகளை குதிக்கால்களின் மேல் வைத்துக் குனியலாம். பத்மாசனம் போட்ட படி குனிவதால், கால்கள் ஒன்றை ஒன்று அழுத்தி முதலில் வலிக்கும். நாளடைவில் பழக்கமானால் வலி இருக்காது. சிலருக்கு முன்னுக்கு குனிந்து மூக்கைத் தரையைத் தொட முயற்சி செய்யும் போது பிருஷ்ட பாகம் தூக்கிக் கொள்ளும். அப்படி நேராமல் அழுத்தமாய் தரையில் உட்கார்ந்து பழக வேண்டும்.
சிலருக்கு தொடை பகுதி அதிக சதைகளுடன் மிகவும் பெரிதாக இருக்கும் போது அவர்கள் முன்குனிந்து தரையைத் தொட கடினமாக இருக்கும். சிலருக்கு வயிறு கொழுப்பு சேர்ந்து தொப்பை விழுந்து இருப்பதாலும் முன்குனிய முடியாது. அவர்கள் எல்லாரும் மற்ற ஆசனங்களுடன் யோக முத்திரவையும் முயற்சி செய்து வந்தால், நாளடைவில் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் உள்ள சதை, நரம்புகள் இளக்கம் பெற்று யோக முத்திரா செய்வதற்கு எளிதாகும். இந்த ஆசனம் செய்ய செய்ய தொப்பை பெருமளவு கரைந்து விடும். வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பு தான் சர்க்கரை நோய்க்கான அடிப்படை காரணம் என்று தற்போது சொல்கிறார்கள்.
இந்த வயிற்றை சுற்றிய கொழுப்பை யோக முத்திராவில் எளிதில் கரைத்து, தொப்பையை போக்கி மிகவும் இளமையுடன் காட்சியளிக்க முடியும். தொப்பை கரைவதால் மிகவும் சுறுசுறுப்பு வந்து சேரும். சிலர் ஒல்லியாய் இருப்பார்கள். இவர்களுக்கு தொப்பையும் இருக்காது. ஆனால் இவர்களுக்கும் யோக முத்திரா செய்ய சுலபமாக வராது. காரணம், இவர்களது முதுகுஎலும்பு கட்டை பாய்ந்து இருக்கும். அதாவது, குனிந்து நிமிரும் உடற்பயிற்சிகளே இல்லாத காரணத்தால் முதுகுஎலும்பு வளைய முடியாமல் கட்டை போன்று திடமாக காணப்படும். இவர்களும் தொடர்ந்து யோக முத்திராவை பயிற்சி செய்யும் போது நன்றாக வளைந்து தரையை தொட முடியும்.
யோக முத்திராவால் முதலில் மூக்கை வைத்து தரையை தொடுவதும்,பின்னர் வாயால் தரையை தொடுவதும் என்று நன்றாக பழக்கமான பிறகு அதே நிலையில் 20 எண்ணும் வரை இருக்க வேண்டும். யோக முத்திரா முழுமையான நிலையில் சாதாரணமாக மூச்சை இழுக்கவும், விடவும் செய்யலாம்.
குறிப்பு;
யோக முத்திராவை வழக்கமாய் செய்யும் பெண்கள் கர்ப்பனமானால் இரண்டு மாதங்கள் வரை தான் செய்ய முடியும். அதன்பின் கைகளை வயிற்றின் குறுக்கே வைக்காமல் 1 மாத கால அளவிற்கு செய்யலாம். இந்த காலத்திற்கு மேல் கர்ப்பமான பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. மிகவும் முக்கியமாக கர்ப்ப காலத்தில் இந்த ஆசனத்தை பழகவே கூடாது. பத்மாசனத்தில் மட்டும் உட்காரலாம்.

Friday, February 24, 2012

Emirates Airline's luxury on sky


Emirates' business class shows what high-end pampering is all about.

After you lie down on the 180-degree reclining seat and rejuvenate your senses with a refreshing drink of your choice, don't worry if you've forgotten to carry that book you've long wished to read. Because Emirates' business class gives you enough and more to do during the 3-4 hour flight from an Indian destination to Dubai.

You have 1,300 channels of entertainment, hundreds of video games, a plethora of soap operas, a music collection worth dying for and a good 300 movies to explore. From Disney classics to Arabic cinema, from Bollywood to vintage sporting action, from Frank Sinatra to Black Eyed Peas, I struggled to choose and pack in the maximum.

Simultaneously, my thoughts keep returning to the time spent in Dubai, a city which mesmerised me with its urbane charm and chic landscape.

With the ICE (Information-Communication-Entertainment) system onboard allowing me to plug in the USB device to view the pictures I had clicked in the city, I could relive the delightful time spent there. What's more, you can also surf, tweet, email, SMS and make telephone calls.

“Over 20,000 Indian subscribers have made phone calls from Emirates flights. Over 250,000 SMS have also been sent or received from our flights,” says Patrick Brannelly, Vice-President, Corporate Communications Product, Publishing, Digital and Events, Emirates Airlines.

The airline has spent approximately $10,000-15,000 per seat on installing the ICE system.
“We rotate our ICE content every month, adding more movies, audios and games. Going forward, the future lies in providing e-newspapers, because even while on a flight people would like to know what is happening around the world at that moment,” says Brannelly.
Having spent so much money on the ICE system, he and his team are not too happy when a passenger sleeps through the flight, because, he adds, the airline provides 2 terrabytes of entertainment content per passenger.

This has fetched it the 2011 Skytrax World Airline Awards' ‘World's Best Airline In-flight Entertainment' title for the seventh year running..

As though this pampering is not enough, the Emirates First and Business class lounges at the Dubai airport have to be experienced to understand how it is possible for well-heeled, privileged air travellers to arrive at their destination looking fresh.


Source: The Hindu

Wednesday, February 22, 2012

ஏர் பேக் இருந்தாலும் காரில் சீட் பெல்ட் அணிய வேண்டுமா?


டெல்லியில் அதிவேகத்தில் வந்த சூப்பர் கார் சாலை தடுப்புகளின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அந்த காரை ஓட்டி வந்த இளம் தொழிலதிபர் எம்விஎல் நிறுவனத்தின் இயக்குனர் அனுக்குல் ரிஷி(28) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 


இச்சம்பவத்தில்,சாலை ஓரத்தில் இருந்த தடுப்புகளின் மீது மோதிய அந்த கார் நிலை தடுமாறி அவ்வழியே சென்ற சைக்கிள் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த கம்பம் ஒன்றில் படு பயங்கரமாக மோதியது. சைக்கிளை ஒட்டிய நபர் படுகாயமடைந்தார். காருக்குள் இருந்து ரிஷி வெளியே தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அவ்வழியே வந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 


அனுக்குல் ரிஷி 180 கிமீ வேகத்தில் காரை ஓட்டிவந்ததாக கூறப்படுகிறது. மேலும், அனுக்குல் சீட் பெல்ட் அணியாமல் வந்ததால்தான், காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு ரிஷி இறந்ததற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 


விபத்தில் பலியான இளம் தொழிலதிபர் அனுக்குல் ருஷிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதாக தகவல்கள் கூறுகின்றன. ரூ.3 கோடி மதிப்புடைய அவரது லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் கார் லிமிடேட் எடிசனாக வெளியிடப்பட்ட கார். வெறும் 3.9 நொடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்ட வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.


விபத்துக்களின்போது ஏர்பேக் எனப்படும் உயிர்காக்கும் காற்றுப் பைகள் தக்க சமயத்தில் விரிந்தாலும், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கின்றனர் வல்லுனர்கள். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி ஹெல்மெட் அவசியமோ அதுபோன்ற கார்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது மிக மிக அவசியம்.


விபத்தில் சிக்கிய சூப்பர் காரில் காற்றுப் பைகள்(ஏர் பேக்) உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகொண்ட கார். அந்த கார் மோதிய வேகத்தில் காற்றுப் பை சரியான சமயத்தில் விரிந்தும் அந்த தொழிலதிபர் உயிரிழந்துள்ளார்.


இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதே அவர் உயிரிழப்புக்கு ஒரே காரணமாக கூறப்படுகிறது. ஏனெனில்,சீட் பெல்ட் அணிந்து செல்லவில்லையென்றால், அதிவேகத்தில் செல்லும் கார் இதுபோன்று மோதி விபத்துக்குள்ளாகும்போது காருக்குள் இருப்பவரை வெளியே தூக்கி வீசும் நிலை இருக்கிறது.


இதனால், காற்றுப் பைகள் சரியான சமயத்தில் விரிந்து தனது எஜமானரை காப்பாற்ற முயன்றாலும் அதற்கு பிரயோஜனம் இருக்காது. எனவே, சீட் பெல்ட் அணிந்து செல்வதை கட்டாயம் மறவாதீர்கள். விபத்துக்கள் தேதி, நாள் குறித்து நடப்பவை அல்ல. 


எனவே, பக்கத்தில்தான் செல்கிறேன், அடுத்த தெருவுக்கு செல்கிறேன் என்று நினைத்து சீட் பெல்ட் அணியாமல் காரில் செல்ல வேண்டாம்.

ஒருவருக்கு அறிவாற்றல் எங்கிருந்து வருகிறது?

வளரும் விதமும் கல்வியறிவும் தான் ஒருவரது அறிவாற்றலுக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அறிவுத்திறனில் பாதி பாரம்பரியமாக பெற்றோரிடமிருந்தே வருகின்றது என்று கூறுகிறது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஏறத்தாழ 3500 பேரை இந்த ஆய்வுக்குட்படுத்தி ஒருவரது அறிவுத்திறன் அல்லது அறிவுத்திறனின்மை இரண்டுமே பெற்றோரிடமிருந்தே வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல் கிஸ்டலைஸ்டு இண்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் ஒருவரது தனித்திறன்களுக்கு காரணமாய் அமைவது அவரது ஜீன்களே! ஒரு சிக்கலான சூழ்நிலையில் பகுத்தாயும் திறன் மற்றும் கற்பனைக்கப்பாற்பட்ட விஷயங்களை புரிந்து கொள்ளும் திறன் இவையெல்லாம் ஒருவரது DNA வின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை அறிவுக்கு ஃப்ளூய்ட் டைப் இண்டெல்லிஜென்ஸ் என்று பெயர். இந்த ஆய்வினை மேற்கொண்டது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் ரிஸர்ச் என்ற அமைப்பு.

Friday, February 17, 2012

உங்களுக்கு ஆண் குழந்தை வேண்டுமா அல்லது பெண் குழந்தை வேண்டுமா?

வேதாத்திரி மகரிஷி வேண்டிய குழந்தை பிறக்க ஒரு பயிற்சி சொல்கிறார். அந்தப்பயிற்சி இதோ:

கருத்தரிக்கும் நேரத்தில் ஆணின் மூச்சு வலப்பக்கமாகவும், பெண்ணின் மூச்சு இடப்பக்கமாகவும் ஓடிக்கொண்டிருந்தால் பிறக்கும் குழந்தை ஆண். அதுவே மாறினால் பெண் குழந்தை.

பயிற்சி:
தரையில் அமர்ந்து கொண்டு வலக்காலை இடக்கால் மேல் போடவும்.
வலக்கையை வலக்கால் தொடையில் வைக்கவும்.
இடக்கையை தரையில் ஊன்றிய படி அமரவும்

இவ்வாறு தினந்தோறும் பத்து நிமிடம் இருக்கவும்

இப்படிச்செய்தால் மூச்சு வலப்பக்கம் ஓடும். இவ்வாறு 2 - 3 மாதங்கள் பயிற்சி செய்து பழகலாம்.

இடது பக்கம் மூச்சு ஓட மாற்றிச் செய்யவும்.

Monday, February 13, 2012

உங்களுக்கு நிதிச் சுதந்திரம் (Financial Freedom) இருக்கிறதா?நிதி நிர்வாகம், அது தனி மனித நிதி நிர்வாகமோ அல்லது நிறுவனத்தின் நிர்வாகமோ அவை வளர்ச்சி பெற, `கட்டுப்பாடு' மிக அவசியம். தனி மனித கட்டுப்பாடு, நிர்வாக கட்டுப்பாடு ஆகியவை வளர்ச்சி பெற `ஒழுக்கம்' மிக அவசியம். திட்டமிடுதல், திட்டமிட்டபடி செயல்படுதல் ஆகியவை அவசியம்.
கட்டுப்பாடு என்பது அடிமைத்தனம் ஆகாது. மனமுவந்து ஏற்றுக்கொண்டால், இந்த கட்டுப்பாடு ஒரு சுதந்திரம் எனத் தெரிய வரும். எனவே, நிதி சுதந்திரம் பெற (Financial Freedom) இந்த ஒழுக்கமானது அவசியம்.
நிதி சுதந்திரம் என்றால் என்ன? நம்மில் எவ்வளவு பேருக்கு இந்த நிதி சுதந்திரம் உள்ளது? இந்த நிதி சுதந்திரம் அடைய என்ன செய்ய வேண்டும்? இவற்றை சற்று விரிவாக பார்ப்போம்.
நம்மில் எத்தனை பேர், நாளைய பற்றிய கவலைகள் ஏதுமின்றி நிம்மதியாக உறங்க முடிகின்றது? இந்த கவலைகளில் பல பணம் சார்ந்ததாகவே இருக்கும். எவர் ஒருவர், தான் இல்லாவிட்டாலும், தன் குடும்பம் பணம் சார்ந்த விஷயங்களில் பாதிப்பின்றி இருக்கும் வகையில் தன் வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்து கொண்டுள்ளாரோ, அவருக்கே இந்த `நிதி சுதந்திரம்' உள்ளது எனக் கூறலாம்.
இந்த `நிதி சுதந்திரம்' அனைவருக்கும் சாத்தியமா! என்றால் சாத்தியமே. அதற்கு, மேலே சொன்ன `கட்டுப்பாடு நிதி ஒழுக்கம்' (Financial Discipline) மிக அவசியம். இந்த நிதி சுதந்திரம் கைகூட `நிதி திட்டமிடுதல்' (Financial Planning) அவசியமாகிறது. நிதித் திட்டமிடுதல் என்பது ஒருவருடைய வாழ்க்கையின் குறிக்கோளுக்கான, அவருடைய நிதி நிர்வாகத்தின் மூலம் அடைவதற்கான ஒரு வழிமுறையாகும். இதில், சொந்த வீடு, சொந்த வாகனம், தரமான கல்வி, உயர் கல்வி, குழந்தைகளின் திருமணம் மற்றும் ஓய்வு ஊதியம் ஆகியவை அடங்கும்.
நிதித் திட்டமிடுதல் என்பது ஒரு வழிமுறை எனப் பார்த்தோம். இப்போது அதற்கான திட்டங்கள் யாவை என்றும், அவற்றின் பயன்பாடுகளையும் வரிசைப்படுத்துவோம்.
1. ஆயுள் காப்பீடு - டேர்ம் பிளான் (Term Plan)
2. ஆயுள் காப்பீடு - யூலீப் திட்டங்கள் (Unit Linked Insurance Plan)
3. மருத்துவக் காப்பீடு - (Mediclaim Policy)
4. பரஸ்பர நிதித் திட்டங்கள் (குறிப்பாக SIP/SWO) & (Mutual Fund)
5. மனை மற்றும் வீடு
6. பங்குச்சந்தை முதலீடு - நீண்ட கால அடிப்படையில் முதலீடு.
மேற்கூறிய நிதித் திட்டங்களின் பயன்பாடுகளை சுருக்கமாக கீழே காண்போம்.
1. ஆயுள் காப்பீடு - டேர்ம் பிளான் : குறைந்த பிரிமியம் அதிக காப்பீடு.
2. ஆயுள் காப்பீடு - யூலீப் திட்டங்கள் : நீண்ட கால அடிப்படையில் (20, 25 மற்றும் 30 ஆண்டு காலம்) ஒருவரின் வருமானத்தைப் பாதுகாக்கவும், மேலும் சிறப்பான ஓய்வூதியத்திற்காகவும் பயன்படுத்தலாம்.
3. மருத்துவக் காப்பீடு: குடும்பத்திற்கான Floater Policy திட்டங்கள் - முழு குடும்பத்திற்கான Cashless facility.
4. பரஸ்பர நிதித் திட்டங்கள்: மாதம் 100 முதல் 500, 1000 ரூபாய் என நாம் சேமிக்கும் திறனைப் பொறுத்து நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் அடைந்திட சிறந்தவழி.
5. மனை மற்றும் வீடு: வீட்டிற்கானத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவற்றில் முதலீடு செய்வது நல்ல பலனை அளிக்கும்.
6. பங்குச்சந்தை முதலீடு : இ கோல்டு (Gold ETF) மற்றும் முன்னணியில் உள்ள நல்ல நிறுவனங்களில், பங்குச்சந்தை வீழ்ச்சியடைகின்ற காலங்களில், சிறிது சிறிதாக வாங்கி, நீண்ட காலத்திற்கு (3-5 ஆண்டுகள் வரை) முதலீடு செய்வது நல்ல எதிர்பார்த்த பலனை அளிக்கும்.
இப்போது உள்ள காலக்கட்டத்தில், தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் மேற்கூறிய திட்டங்களில் முதலீடு என்பது மிக சுலபமான ஒரு விஷயமாகும்.
இனி, நிதித் திட்டமிடுதலில் உள்ள சில அடிப்படையான உண்மைகளைப் பார்ப்போம். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல், நிதித் திட்டமிடுதல் என்பது முழுமை பெறாத ஒரு விஷயமாகிவிடும்.
1. வட்டி விகிதம் (Interest Rate): நாம் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேரும் போது நம் முதலீட்டிற்கு உரிய உண்மையான ஆதாயம் ஆண்டிற்கு 8 சதவீதம் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, வருமானவரி விலக்கு Sec 80 சி மற்றும் Sec 10 (10 ஞி) படி.
2. மாதம் ரூபாய் 1500 முதல் 2000 வரை 20 வருடங்கள் சேமித்தால், 9 சதவீத கூட்டு வட்டியில் நாம் லட்சாதிபதியாகலாம்.
3. உங்களுடைய முதலீட்டின் ஆதாயமானது, பணவீக்கத்தை விட குறைவாக இருப்பின் உங்கள் முதலீடு சிறுக, சிறுக கரைந்து விடும்.
கடன் அட்டைகள் (Credit Cards): 1. உங்களுடைய (EMI : Equated Monthly Instalment) மாதத் தவணை உங்களுடைய வருமானத்தை விட 40 சதவீதம் அதிகரிக்கும் போது, எதிர் காலத்தில் உங்களால் மாதத் தவணையை செலுத்த சிக்கல் வரும்.
2. உங்களுடைய கடன் அட்டைகளின் மாதத் தவணை உங்கள் வருமானத்தில் 40 சதவீதத்தை தாண்டும்போது நீங்கள் அபாய கட்டத்தில் இருக்கின்றீர்கள் என உணர வேண்டும்.
ஆயுள் காப்பீடு: யாருடைய குடும்பம் எல்லாம் ஒருவருடைய வருமானத்தை நம்பி இருக்கின்றதோ, அவருக்கெல்லாம் அவசியம் ஆயுள் காப்பீடு தேவை. எப்போது உங்கள் முதலீட்டின் ஆதாயம் எந்த ஒரு இடர்பாடு இன்றி (Risk free Returns) உங்கள் சராசரி செலவுகளை விட, அதிகமாக வருகின்றதோ, அப்போது உங்களுக்கு ஆயுள் காப்பீட்டின் தேவை குறைகின்றது.
பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு ஆயுள் காப்பீடு இருத்தல் அவசியம்.
உதாரணம்: ஆண்டு வருமானம் 2 லட்சம் எனில் ஆயுள் காப்பீட்டின் தேவை 20 லட்சம் ஆகும்.
உங்களுடைய ஆண்டு பிரிமிய தவணையானது, உங்களுடைய ஆண்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் மேல் போகும் போது, எதிர்காலத்தில் உங்கள் தவணை செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.
திட்டமிடுதல், திட்டமிட்டபடி செயல்படுதல், தகுந்த நேரத்தில் தகுந்த ஆலோசனை படி, திட்டங்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்தல் ஆகியவை, நாம் மேற்கூறிய `நிதி சுதந்திரம்' அடைவதற்கான உத்திகள் ஆகும். அச்சுதந்திரம் உங்கள் கைகளில்தான் உள்ளது.
`நம் முதல் செலவு சேமிப்பே!

சேமிப்போம், முதலீடு செய்வோம், வளம் பெறுவோம்.

Saturday, February 11, 2012

அறிவாளியை உருவாக்க விந்தணுவால் முடியுமா?விந்தணு அணுக்கள் எனப்படும் 23 நிறமூர்த்தங்களை (Chromosomes) கொண்ட விந்து ஆண்களின் விதைகளில் உருவாக்கப்படுகின்றன. இதில் ஹார்மோன்களின் தூண்டல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  பெண்ணின் கருமுட்டை 23 நிறமூர்த்தங்களையும் ஆணின் விந்து 23 நிறமூர்த்தங்களையும் கருவூட்டலின் போது சேர்ந்து 23 சோடி நிறமூர்த்தங்களாக உருவாகின்றன.இந்த நிறமூர்த்தங்களில் டி என் ஏ என்ற பெரிய சங்கிலி மூலக்கூறுகள் உண்டு. அவற்றில் ஜீன்கள் எனப்படும் பகுதிகள் உண்டு. அந்த ஜீன்களே நமது இயல்புகளுக்கு காரணம்.ஒரு ஆணிடம் இருந்து இயற்கையாக தோன்று விந்தணுக்களில் உள்ள நிறமூர்த்தங்கள் ஒருபோதும் அவர்களில் உள்ள உடலில் உள்ளது போன்று அமைவதில்லை. காரணம், விந்தணு தோன்றும் நிகழ்வின் போது cross over என்ற செயற்பாட்டின் மூலம் ஜீன்கள் ஒரு நிறமூர்த்தத்தில் இருந்து அடுத்ததற்கு பகுதியாக பரிமாறப்படுவதன் மூலம் தனித்துவமான விந்துகள் உருவாகின்றன.ஆக ஒருவரின் வாழ்நாளில் அவர் சார்ந்த இயல்புகள் அப்படியே விந்தணுவில் அடக்கப்படுவதில்லை. மாறல்கள் நிகழ்கின்றன. அதுவும் இல்லாமல் ஒரு ஆணின் ஜீன் தனது இயல்பை வெளிப்படுத்த வேண்டுமானால் பெண்ணின் அதே நிலைக்குரிய ஜீன் ஜோடியின் தன்மையும் அதற்கு இணங்கியாக வேண்டும். சில சந்தர்ப்பங்களில் பெண் ஆதிக்கமுள்ள ஜீனையும் அதேவேளை அதே சோடிக்குரிய ஆதிக்கமற்ற ஜீனை ஆண் கொண்டிருந்தாலும் பெண்ணின் இயல்பே வெளிப்படும். மேலும் மனிதனில் குறிப்பிட்ட பல இயல்புகள் பல ஜீன்களின் ஒருமித்த வெளிப்பாட்டாலும் உருவாகின்றன (மதிநுட்பம் போன்றவை...)ஆக விந்துகளை மட்டும் வைத்துக் கொண்டு இயல்புகளை பூரணமாக தீர்மானிக்க முடியாது.  முட்டை + விந்து ஜீன்கள் அப்படியே பொருந்தினாலும்  ஜீன்கள் சரியாக வெளிப்பட உடல் வளரும் சூழல் சரியாக அமைய வேண்டும். சரியான சூழலில் வளராவிட்டால் ஜீன்களின் வெளிப்படுத்தலில் தவறுகள் நிகழலாம். சூழல் என்பது நாம் வாழும் பூமியின் பெளதீகச் சூழல், இரசாயன, சமூகச் சூழல்,  உடலினுள் உள்ள சூழல் என்று பல.எனினும் மூளைத் திறமை அல்லது திறனை எடுத்து கையாண்டால் அதைத் தீர்மானிப்பது ஜீன்கள் மட்டுமல்ல; சூழலும் தீர்மானிக்கிறது. அந்த வகையில், எல்லாம் ஜீன் அளவில் சரியாக அமைந்து சூழல் சரியான சூழல் அமையவில்லை என்றால் திறமையான ஜீன் சரியாக வெளிப்பட மாட்டாது. எல்லாம் 100% சரியாக அமைய வேண்டின் இயற்கையின் தேர்வும், சூழலும் சரியாக அமைய வேண்டும்.ஒரு குழந்தையை இவ்வாறு செயற்கையான தேர்வு முறையில் உருவாக்க ஆகும் செலவு பல மடங்கு. அந்தச் செலவை மீதப்படுத்தி இயற்கை வழியில் குழந்தையை உருவாக்கினால் அந்தப் பணம் குழந்தைக்கு நல்ல உணவு உட்பட்ட சூழலை ஏற்படுத்தி இயல்புகள் சரிவர வெளிப்படுத்த வகை செய்ய முடியும்.


அழகு, கல்வி அறிவு, விளையாட்டுத் திறன், கணணி அறிவு இதெல்லாம் வெறும் ஜீன்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; ஜீன்களின் வெளிப்பாட்டை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இயற்கைச் சூழலே இன்றும் இருக்கிறதுசுருக்கமாச் சொன்னால், நல்ல விந்து, நல்ல கருமுட்டை, நல்ல சூழல் மற்றும் முயற்சி இருந்தால் அறிவாளியாக வாய்ப்பு உள்ளது. 

Monday, February 06, 2012

உடலை ஸ்லிம் ஆக்கும் இந்திய உணவுகள்

மஞ்சள்

இந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மஞ்சள் கொழுப்பு சக்தியை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

கொத்தமல்லி

உடலின் கொழுப்பை குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்கு உண்டு. உண்ட உணவை ஜீரணப்பதில் கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடலை ஸ்லிம் ஆக்குகிறது.

கறிவேப்பிலை

உடலின் கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் டாக்ஸின்கள் உள்ளன. தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலைகளை உட்கொண்டால் கொழுப்பு படிப்படியாக குறையும். மோர், காய்கறி சாலட், போன்றவைகளில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

வெள்ளைப்பூண்டு

கொழுப்பை எரிப்பதில் வெள்ளைப்பூண்டுக்கு முக்கிய பங்குண்டு. இது கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே இது உடலின் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடுகு எண்ணெய்

சமையல் எண்ணெயானது உடலில் கொழுப்பு சேருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறைப்பு கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். கடுகு எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடென்ஸ்,வைட்டமின்கள் போன்றவை காணப்படுகின்றன. இது இதயத்திற்கு இதமானது.


முட்டைக்கோஸ்

உடல் கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவுகளில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் குறைப்பில் சாலட் வகைகளில் முட்டைக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. முட்டைக்கோஸ் உடலில் கொழுப்பு, சர்கரை போன்றவற்றை சரிசமமாக தக்கவைக்கிறது.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் ஏ,பி,சி, மற்றும் ஈ வைட்டமின்கள் உள்ளன. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. இது குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு. உணவியல் நிபுணர்கள் உடல்குறைப்பு தொடர்பான உணவாக பாசிப்பருப்பினை பரிந்துரைக்கின்றனர். இது உயர் ரகமான நார்ச்சத்து கொண்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.

தேன்

உடல்பருமனை குறைப்பதில் தேனின் பங்கு முக்கியம்மானது. தினமும் காலை நேரத்தில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமன் குறையும்.

மோர்
உடலுக்கு தேர்வையான நீர் சத்தை அளித்து, கொழுப்பை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான கலோரிகளை மட்டுமே அளிக்கும் தன்மையுடையது என்பதால் தேவையற்ற கொழுப்பை உடலில் தங்கவிடாது.

சிறு தானியங்கள்

நார்ச்சத்து நிறைந்த கம்பு, சோளம், ராகி, தினை போன்றவை உடம்பில் கொழுப்பை ஏற விடாது. விலைகுறைவானதும் சத்து நிறைந்த்துமான இந்த தானிய உணவுகளையே பண்டைய காலத்தில் உணவாக உட்கொண்டனர்.

பட்டை, கிராம்பு

கறி சமையலுக்கு வாசனைக்காக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை கொழுப்புச்சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை உடம்பில் தங்கவிடாமல் செய்து, டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துகிறது.


நன்றி:தட்ஸ்தமிழ்

Saturday, February 04, 2012

ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு - 11 விவரங்கள்


பூமியின் சுற்றுச்சூழலில் மனிதர்களால் பல்வேறு வகையில் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட கார்பனின் அளவு தொடர்ந்து அதிகரித்தபடியே இருப்பதால், பூமியின் சுற்றுச்சூழலில் வெப்பத்தின் அளவு அதிகரித்தபடியே உள்ளது. இப்படி பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தால், பூமியில் வாழும் உயிரினங்கள் பலவகையிலும் பாதிக்கப்படும். ஆகையால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட கார்பனின் அளவை கடுமையாக குறைக்க வேண்டும். இதன் விளைவாக இந்த கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்து வதற்காக ஐ.நா. அமைப்பு சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் சர்வதேச மாநாடுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் டர்பன் நகரில் பருவநிலை மாற்றம் மாநாடு-2011 நடந்து முடிந்தது. உலக நாடுகள் வெளியிடும் கார்பனின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட கியோடோ ஒப்பந்தம் விரைவில் முடிவடைய இருக்கும் பின்னணியில் இந்த டர்பன் மாநாடு நடத்தப்பட்டது.

கார்பன் வெளியேற்ற கட்டுப்பாடு 
வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட சீனாவும், இந்தியாவும், புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதற்காக தற்போது அமலிலில் இருக்கும் சர்வதேச ஒப்பந்தமே தொடர வேண்டும் என்று கூறின. அடுத்த வருடம் முடிவுக்கு வரவிருக்கும் கியோட்டோ உடன் பாடுதான், செல்வந்த நாடுகள் தமது கார்பன் வெளியேற்ற அளவை குறைப்பது தொடர்பில் அவற்றை சட்டப்படி கட்டுப் படுத்தக் கூடிய ஒரே ஆவணம் என்று அவை வாதிட்டன.
ஆனால், பல தொழில்வள நாடுகள் புதிய காலநிலை ஒப்பந்தம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று கோருகின்றன. 11 வருடமாக அமலில் இருக்கும் கியோட்டோ ஒப்பந்தத்தில் அதி வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் உள்ளடக்கப்படவில்லை. இந்த முரண்பாடான நிலைப்பாடுகள், தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த ஐ.நா.வின் வருடாந்த காலநிலை மாநாட்டில் ஒரு சுமூகமாக தீர்வு எட்டப் படவில்லை. இந்த இழுபறிநிலை காரணமாக கார்பன் வெளி யேற்றம் அதிகரித்து அதன் மூலமான அச்சுறுத்தல்களை தாம் அனுபவிக்க நேரிடும் என்று வளரும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர். முன்னதாக காலநிலை மாற்றம் குறித்த புதிய ஒப்பந்தத்துக்கான எதிர்பார்ப்புக்கள் குறைந்து வந்தபோதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி சிறிதளவாவது இருந்தது.

ஆனால், கடந்துபோன சமரசப் பேச்சுக்களில் ஒரு பரந்துபட்ட பொது நிகழ்ச்சித் திட்டத்துக்கான உடன்பாடுகள் ஏற்படாததால்,தனிப்பட்ட விவகாரங்கள் முன்னிலைப்படுத்தப்படத் தொடங்கிவிட்டன. சில செல்வந்த நாடுகளைப் பொறுத்தவரை, இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியதாக ஒரு உடன்பாடு வரவேண்டும் இல்லாவிட்டால், எதுவும் இல்லை என்று கருத்தில் அவை இருக்கின்றன. கார்பன் வெட்டு தொடர்பில் சட்டரீதியாக அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு உடன் படிக்கையை ஏற்க மறுக்கும் வளரும் நாடுகளுக்கு எதிராக செல்வந்த நாடுகளின் கருத்துக்கள் இருந்தன.

கார்பன் வெளியேற்ற குறைப்பு விவகாரத்தில் இருதரப்பும்  (வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள்)  இன்னமும் இழுபறியில் இருக்கும் நிலையில், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய தான புதிய காலநிலை உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மிகவும் வளரும் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அது நடந்தால்கூட அடுத்த வருடம் நடக்கக்கூடிய ஐ.நா.வின் காலநிலை மாநாடு வரை அது தொடரரும்.

இந்த நிலையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி பற்றித்தான் தாம் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக வளரும் நாடுகள் கூறுகின்றன.

இருந்த போதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக அண்மை வருடங்களில் வழங்கப்பட்ட சிறிய அளவிலான நிதியைக்கூட இந்த வளரும் நாடுகள் துஷ்பிர யோகம் செய்வதாகவும் பல வளரும் நாடுகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாநாட்டின் புதிய தீர்மானங்கள்
பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தை 2015-ஆம் ஆண்டுக்குள் மேற்கொள்ள வேண்டும் என டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் 2020-ஆம் ஆண்டிலிலிருந்து நடை முறைக்கு வரும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்:
பருவநிலை மாற்றம் தொடர்பாக இப்போது நடைமுறையில் உள்ளது கியோட்டோ ஒப்பந்தம். 2008-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டுக்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்கு குறைக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் வகை செய்யப் பட்டது. இந்த அளவானது 1990-ஆம் ஆண்டுக்கும் முன்பிருந்த நிலையாகும். இதன்படி பசுமை இல்ல வாயுவை (கார்பன் டை ஆக்ஸைடு) அதிகம் வெளியிடும் நாடுகள் இந்த அளவை எட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 194 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். விரைவாக முடிய வேண்டிய இந்த மாநாட்டின் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் சீனாவின் எதிர்ப்பு காரணமாக 36 மணி நேரம் தாமதமாக முடிவுற்றது. இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளே பசுமை இல்ல வாயுவை அதிகளவு வெளியிடுவதாகவும், இந்நாடுகள்தான் புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கருத்துத் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியாவும், சீனாவும் புதிய கட்டுப்பாடுகளினால் தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், லட்சக்கணக்கான மக்கள் வறுமையை எதிர்நோக்க நேரிடும் என்றன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவிக்கும் திட்டத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் என்ன என்பது தெரியாமலே, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை எங்கள் நாட்டினால் பணயம் வைக்க இயலாது என்று தெரிவித்தார். மேலும் தங்களைப் பிணையாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சுற்றுப்புறச் சூழல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைவருக்கும் சமமானதே என்றும் அவர் தெரிவித்தார். தொழில்மயமாக்கப்பட்ட நாடு களைவிட, வளரும் நாடுகளின் பொறுப்புணர்ச்சி இவ் விஷயத்தில் குறைவு என்ற வாதத்தையும் அவர் நிராகரித்தார். ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் கோனி ஹெடிகார்டு மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசி ஓர் சமரச முடிவை எட்ட வேண்டும் என்றும் பேசப்பட்டது. இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து இருதரப்பினரும் 2015-ஆம் ஆண்டுக்குள் ஓர் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டனர். மேலும் சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்கென வளரும் நாடுகளுக்கு நிதியளிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  அதுவரை கியோட்டோ ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின் பற்றுவதாக ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவித்தது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சீனப் பிரதி நிதிகளின் தலைவர் ஸிஸன்ஹுவா  அமையவுள்ள ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பின் விதிகளின்படியே அமையும் என்று தெரிவித்தார். இந்தியாவின் கருத்துகள் குறித்துத் தெரிவித்த ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் ஹெடிகார்டு, தனது பொருளா தாரத்துக்கு ஆபத்தான முடிவை எடுக்கும்படி இந்தியாவைத் தாங்கள் வலியுறுத்தவில்லை என்றும், அந்நாட்டின் வளர்ச்சியை முழுமையாக அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம் ஒப்பந்தம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மாநாட்டில் எந்த உறுதியான முடிவும் எட்டப்படாமல் அரைகுறையாக முடிந்துள்ளது. கார்பன் உமிழ்வை கட்டுப் படுத்தாத நிலையில் பூமியின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயரும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ள னர். அதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் பயங்கரமான விளைவுகள் இந்தியாவில் மட்டும் எப்படியிருக்கும். சில எடுத்துக்காட்டுகள்:

1) இந்தியா முழுவதும் 1 செ.மீ. கடல்மட்டம் சராசரியாக உயர்ந்து வருகிறது. கடல்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் இந்திய கடற்கரைப் பகுதியில் 1,700 சதுர கி.மீ. மூழ்கி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  

2) மேற்குவங்கம் மாநிலத்தின் சுந்தரவனக் காடு பகுதியில் கடல்மட்ட உயர்வால் ஒரு தீவு முற்றிலும் மூழ்கிவிட்டது. 6000 குடும்பங்கள் வாழ்விழந்துள்ளன. கடல்மட்டம் உயரும் நகரங்கள்  பட்டியலிலில் சென்னை, நாகப்பட்டினம் உள்ளன.

3) இந்திய விவசாயம் 65 சதவீத பாதிப்பை சந்திக்கலாம். ஏற்கனவே இந்த ஆண்டு பருவமழை பொய்த்தது.

4) ஒவ்வொரு 0.5 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வுக்கும் 17 முதல் 30 சதவீத அரிசி, கோதுமை விளைச்சல் பாதிக்கப் படும். ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால், 40-50 லட்சம் டன் கோதுமை விளைச்சல் குறையும்.

5) 50 சதவீத இந்தியக் காடுகள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நமது பருவநிலை காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

6) 2035-ஆம் ஆண்டுக்குள் வடக்கில் ஓடும் ஜீவநதிகளின் தாயான இமயமலை பனிச்சிகரங்கள் முற்றிலும் மறைந்து விட வாய்ப்புள்ளது.

7) இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 27 சதவீதம் பாதிக்கப்படலாம்.

8) கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும்.

9) இதுவரை 1998-ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு. உலகின் மிக வெப்பமான 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள், 1980-க்குப் பிறகே வந்துள்ளன. 2009 மிக வெப்பமான ஐந்தாவது ஆண்டு.


10) 20-ஆம் நூற்றாண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.6 டிகிரி அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 2050க்குள் குளிர்கால சராசரி வெப்பநிலை 3.2 டிகிரி வரை, கோடை காலத்தில் சராசரி வெப்பநிலை 2.2 டிகிரி வரை உயர்ந்து விடும். 

ஆகையால் வல்லரசு இந்தியா என்ற லட்சியத்தைவிட பசுமையான இந்தியா என்பதே இன்று அவசியமான லட்சியம் ஆகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...