Search This Blog

Tuesday, February 22, 2011

உடல் அழகுக்கு தேவையான ரகசியம்


சிவப்பு அழகு வேண்டுமா? என்று கேட்டு, எத்தனையோ வகையான கிரீம்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன! உடற்பயிற்சியே செய்யாமல், நொறுக்குத் தீனிகளையும் கைவிடாமல், உடல் எடை குறையும் என்றுகூறி விதவிதமான மாத்திரைகள் தைலங்கள் விற்பனை யாகின்றன! எப்போதும் ஒலி ஒளிபரப்பாகும் அழகு குறிப்புகளைப் பார்த்து, அதை அரைகுறையாக கடைபிடித்து உலக அழகி ஐஸ்வர்யாராய் போல் ஆக வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.
அப்படி ஆசைப்படுகிறவர்களுக்கு தம் உடலில் இருக்கும் ஒரு பிரதான உறுப்பே அழகு, ஆரோக்கியத்தின் ஊற்று என்பது தெரியுமா?! மனித உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. மனித உடலில் இருக்கும் பஞ்ச பூதங்கள் பிரபஞ்ச சக்தியிலிருந்து தனக்கு தேவையான பஞ்ச பூத சக்தியை வாங்கி உடலை புத்துணர்ச்சி யுடன் வைத்துக் கொள்கின்றன. எப்படி யென்றால்ஞ் நம் தோலுக்கடியில் மிக துல்லியமான பாதை ஒன்று உள்ளது. இதை உயிர்ச்சக்தி பாதை என்று கூறுவார்கள். இதன் வழியேதான் பஞ்ச பூத சக்தி ஊடுருவி சென்று உறுப்புகளைச் சேரும். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு நேரத்தில் மட்டுமே இந்த உயிர் சக்தி பிரதான மாய் செல்லும்.உதாரணமாக நுரையீரலுக்கு அதிகாலை 3  to5 மணி, மண்ணீரலுக்கு காலை 9.11 மணி. இப்படி ஒவ்வொரு உறுப்புக் கும் குறிப்பிட்ட நேரம் வகைசெய்யப்பட்டிருக் கிறது. நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆவதற்கான செரிமான செயலாக்கம் வயிற்றில் மட்டுமே நடைபெறுவதில்லை. செரிமான செயலாக்கம் ஆரம்பிக்கும் இடம் வாய். வாயில் உள்ள உமிழ்நீர்தான் செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. உமிழ்நீரில் இருக்கும் நுண்கிருமிகள் உணவில் கலந்து செரிமான வேலையை துவங்கும். மனிதனின் உடல் பஞ்சபூத கலவை என்பதுபோல நாக்கிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன.
இதனால் மிக நிதானமாக நாக்கின் எல்லா பகுதியிலும் உணவுபடும்படி முழுக்கவனம் செலுத்தி மென்று உண்ணுதல் வேண்டும். ஒவ்வொரு பஞ்சபூதமும் ஒரு சுவையோடு தொடர்பு உடையது. நெருப்பு கசப்பு சுவையுடனும், மண் இனிப்பு சுவையுடனும், காற்று – துவர்ப்பு மற்றும் காரச் சுவையுடனும், நீர் உப்பு சுவையுடனும், ஆகாயம் – புளிப்பு சுவையுடனும் தொடர்புடையது. இவைகளை நாம் புரிந்து கொண்டு சாப்பிட பழகிக் கொண்டால் குறைவாக சாப்பிட்டாலே நம் உடலுக்கு போதுமான சக்தி கிடைத்துவிடும். உதாரணமாக 4 இட்லி சாப்பிடுபவர் களுக்கு 2 இட்லியே போதுமானதாக இருக்கும்.

அழகையும், ஆரோக்கியத்தையும் விரும்புகிறவர்கள் காலை உணவை 7 7.30க்குள் மேலே சொன்ன முறைப்படி நிதானமாக, மென்று சாப்பிட வேண்டும். சமைக்காத உணவு கள், பழங்கள், காய்கறிகள், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் ஊறவைத்த பருப்பு வகைகள் போன்றவைகளை காலை உணவில் சேர்க்கவேண்டும். பருப்பு வகைகளை நன்றாக அலசி முதல் நாள் இரவே மண் சட்டியில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் 7 மணிக்கு அந்த தண்ணீரை பருகிய பின்பு ஒவ்வொன்றாக கடித்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்? வயிறு பிரபஞ்சத்திலிருந்து சக்தியை காலை 7 முதல் 9 மணிவரை பெறுகிறது. அதனால் 7 மணிக்கு ஆரம்பித்து நிதானமாக 7.30க்குள் காலை உணவை மென்று முடிக்க வேண்டும்.
15 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீர் பருக வேண்டும். பின்பு 7.45லிருந்து காலை 11 மணி வரை தண்ணீர் கூட பருகக்கூடாது. ஏனென்றால் மண்ணீரல் சக்தியை உள்வாங்கும் நேரம் காலை 9.11 வரை. இது மிக அளப்பரிய சக்தியாகும். அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தி அதற்கு முழுமையாக கிடைக்க, அந்த நேரத்தில் எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும். மண்ணீரல் பஞ்சபூதத்தில் மண்ணை சார்ந்தது. மண்ணீரல் சக்தியை பெற்று உடலில் சேமித்தால் அது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும். அப்படி நச்சுக்கள் வெளியேறும்போது நம் தோல் அதற்குரிய மினுமினுப்பை பெறும்.
அழகு தானாக வரும். இதை பின்பற்றினால் 6 மாதத்திற்குள் உடலில் நல்ல மாற்றங்கள் நிகழும். மண்ணீரலின் சக்தி உடலுக்குள் பல விதங்களில் பயன்படும். ஒரு சில நேரங்கள் சாப்பிடாமல் இருந்தாலும் இந்த மண்ணீரல் உடலுக்கு தேவையான சக்தியை மாற்றி கொடுக்கும். இதைதான் சித்தர்களும், முனிவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் முதலில் மண்ணீரலின் சக்தியை சேமித்து பின் வருடக்கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார்கள். அப்போது மண்ணீரல்தான் தேவையான சக்தியை உடலுக்கு அளித்துக்கொண்டே இருக்கும். அது மட்டுமல்லாமல் நம் உடலில் பிற உறுப்புகள் தொய்வடையும்போது மண்ணீரல் தன் சக்தியை அதற்கு தேவையான சக்தியாக மாற்றிக் கொடுக்கும்.
உதாரணமாக சிறுநீரகம் பஞ்ச பூதங்களில் நீரை சார்ந்தது. சிறு நீரக செயல்பாடு குறையும்போது மண்ணீரல் அதற்கு தேவையான நீர் சக்தியாக மாறி உதவும். மதிய உணவை 12 மணிக்குள்ளும், இரவு உணவை 78 மணிக்கும் சாப்பிட வேண்டும். மென்று சாப்பிட்டு 15 நிமிடம் கழித்து தண்ணீர் பருக வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும். சாதாரணமாக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது நல்லது. இவ்வாறு செய் தால் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணலாம்.


மருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

நம் உடலிஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. 


இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.


உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம். 


தலைவலி : 
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, "தலை வலிக்கிறது' என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு! 


அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : 
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது. 


மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, "ஆன்டாசிட்' மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.


மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.


கழுத்து வலி :
கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது. 


உயர் ரத்த அழுத்தம் :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது. காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது. 


- டாக்டர் ஜெ.ஜெயலட்சுமி


Wednesday, February 09, 2011

குறட்டை குறைபாடா?


தூங்க ஆரம்பிக்கும்போதே மிகவும் அதிக ஓசையுடன் குறட்டையும் ஆரம்பித்துவிடுகிறதே, குறட்டை வருவது எதனால்? அது ஓர் ஆரோக்கியக் குறைபாடா? உடல் கோளாறுகளால் ஏற்படுகிறதா? மூக்கில் அறுவைச் சிகிச்சை பயன் தருமா? ஆயுர்வேத சிகிச்சை என்ன?
எஸ்.அனந்தராமன், புட்டபர்த்தி.

மூச்சுக் குழாய் மற்றும் நாக்குப் பகுதிகளில் உள்ள தசைகளின் சக்திக் குறைவினாலும், தொய்வினாலும், தூக்கத்தில் அவை தளர்வுற்று மூச்சுக் குழாயில் காற்று செல்லும்போது, அதன் பாதையில், அவை தொங்கி அங்கும் இங்கும் ஆடுவதால், குறட்டை ஒலி சத்தத்துடன் எழும்புவதாகக் கூறப்படுகிறது. அவை தளர்வுற்றுத் தொங்குவதற்கான பல காரணங்களில் முக்கியமாக உடல் பருமன் ஒரு காரணமாகலாம்.

கழுத்து மற்றும் மூச்சுக் குழாய்ப் பகுதிகளில் சேரும் அதிக தசைகள், படுக்கும்போது, உள்நோக்கி அமுங்குவதால், பிராண வாயுவிற்கு ஏற்படும் தடையினால், குறட்டை உருவாகிறது. புகை பிடிப்பவர்கள், தலையில் நீர் கோர்த்த நிலை உள்ளவர்கள், மதுபானம் அருந்தும் வழக்கமுடையவர்கள், தூக்க மாத்திரையை இரவில் சாப்பிடுபவர்களுக்கு குறட்டை ஏற்படும்.

அலர்ஜியைக் கட்டுப்படுத்த உதவும் அய்ற்ண் - ஏண்ள்ற்ஹம்ண்ய்ங் மருந்துகள், தொண்டையைச் சுற்றியுள்ள தசைநார்களைத் தளர்வுறச் செய்வதாலும், மூச்சுப் பாதையில் தடை ஏற்படுத்தி, குறட்டையை ஏற்படுத்தக்கூடும். தலையணையின் உயரம் அதிகமிருந்தால் கழுத்தில் முன்னோக்கிய அழுத்தம் கூடுவதாலும் குறட்டை ஏற்படக்கூடும். பாதிக்கப்பட்டுள்ள நபரின் முன்னோர்களுக்கும் குறட்டை விடும் பழக்கமிருந்தால், சிகிச்சை எளிதில் பலன் தருவதில்லை.

அதிக அளவிலும், அதிக நேரம் எடுத்துக் கொண்டும் இரவில் சாப்பிடுவது, பால், வெண்ணெய், தயிர் இரவில் சாப்பிடுவது, மதுபானம் அருந்துதல், தூக்க மாத்திரை, காப்பி குடித்தல் போன்றவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்த்தால் குறட்டையையும் குறைத்துவிடலாம். மேலும் குறட்டையைத் தவிர்க்க, தொண்டையிலுள்ள தசைகளை வலுப்படுத்த வேண்டும்.

 நாக்கை இங்கும் அங்கும் சுழட்டுவதன் மூலமாகவும், எ,இ, ஐ, ஓ,யூ எனும் எழுத்துகளைச் சத்தமாக, ஒவ்வொன்றையும் மூன்றுமுறை அடிக்கடி உச்சரிப்பதாலும் நாக்கு மற்றும் தொண்டையிலுள்ள தசைகள் வலுப்பெறும். நாக்கின் நுனியை முன்பற்களின் பின்புறம் வைத்து, அப்படியே வாயின் மேற்கூரை வழியாக பின்னோக்கி மூன்று நிமிடங்கள் செலுத்தும் பயிற்சி நாக்கின் தசை வலிவைக் கூட்ட உதவும். வாயைத் திறந்து, தாடை எலும்பை வலப்புறம் அசைத்து 30 வினாடிகள் நிறுத்தவும். பிறகு இடதுபுறம் அசைத்து 30 வினாடிகள் நிறுத்தவும்.

தசைகள் வலுப்பெறும். வாயைத் திறந்து, தொண்டையின் பின்புறத்திலுள்ள தசைகளைத் தொடர்ந்து சுருக்கி விரிக்கவும். கண்ணாடியில் உள்நாக்கு மேலும் கீழுமாக ஆடுவதைக் காணலாம்.  பாட்டுப் பாடுவதன் மூலமாகவும், தொண்டைத் தசையை வலுப்படுத்தலாம். இவை அனைத்தும் குறட்டையைக் குறைக்க உதவும் உபாயங்களாகும். குறட்டையைக் கட்டுப்படுத்த மூக்கில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை நிறைவான பலனைத் தருவதில்லை. தசை நார்களை வலுப்படுத்துவதுதான் சிறந்த சிகிச்சை முறையாகும்.

குறட்டைக்கான ஏற்படுவது எதனால் என்பதற்கு ஆயுர்வேதம் கூறும்  ஒரு முக்கியக் காரணம், நெய்ப்பு எனப்படும் எண்ணெய்ப் பசை மூக்கு மற்றும் மூச்சுக் குழாய்ப் பகுதிகளில் குறையும் போது, அந்தப் பகுதிகளில் வறட்சியின் தன்மை கூடுகிறது. வறண்ட பாதையில் பிராண வாயு செல்லும் போது, அங்குள்ள சுவர்களில் மோதிச் செல்கிறது. இதனால் ஏற்படும் உரசல் குறட்டை ஒலியை எழுப்புகிறது.

இந்த நெய்ப்பைச் சம்பாதித்துக் கொள்வதற்கான சிறந்த வழி, காலையில் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக இரும்புக் கரண்டியில்  வெதுவெதுப்பாக சூடாக்கிய நல்லெண்ணெய்யை ஊற்றி நிரப்பி, மூக்கினுள்ள 3-4 சொட்டுகள் விட்டுக் கொண்டு, வாயினுள்ளே நல்லெண்ணெய்யை நிரப்பிச் சிறிது நேரம் வைத்திருந்து துப்பி, கண்களின் புருவம், ரப்பைகளில் இளஞ்சூடான விளக்கெண்ணையைத் தடவி, நீவி விட்டு, முகத்தில் தேங்காய் எண்ணெய்யை இதமாகப் பூசி, கழுத்துகளின் மென்னிப் பகுதிகளில் வெதுவெதுப்பாக நல்லெண்ணெயைத் தேய்த்து, ஊறிய பிறகு இதமான வெந்நீரில் குளித்து, தலைப் பகுதியிலுள்ள பிசுக்கை அகற்ற, பச்சைப் பயறு மாவுடன் அரிசி வடித்த கஞ்சியைக் குழைத்து தேய்த்துக் குளிக்க வேண்டும். இது தோலிலுள்ள பிசுக்கை அகற்றி, உட்பகுதிகளில் உள்ள நெய்ப்பின் சேமிப்பை மிச்சப்படுத்தும்.

இப்படி எண்ணெய் தேய்ப்பதால், வேறு ஏதேனும் நன்மை உண்டா? என்றால் உண்டு. முகத்தின் வசீகரம் கூடும். தலையிலுள்ள ஐம்புலன்களும் தத்தம் தொழில்களில் திறம்பட வேலை செய்யும். முடி நன்றாகத் தலையில் வளரும். சிந்தனை எனும் சக்தியானது செயல் ஏற்றம் பெற்றுப் புத்தியைக் கூர்மையாக்கும். உறக்கம் இரவில்தானே வரும். விடியற்காலையில்தானே விலகும். குறட்டைச் சத்தம் எழுப்பாமல் இருக்க இது சிறந்த வழியாகும்.

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771Friday, February 04, 2011

Mobile phone radiation poses health risks: Government panel


New Delhi, Feb 3 (IANS)

 Next time you chat away for hours on your mobile phone, think about the grave health risks from the emitted radiation. It causes loss of memory, lack of concentration, digestive and sleep disturbances, says a government panel on hazards posed by electromagnetic radiation.
According to a study by the eight-member inter-ministerial committee, comprising representatives from the health ministry and the departments of biotechnology and telecommunications, startling violations of radio frequency levels according to international standards were found.
The localised Specific Absorption Rate (SAR) as per the Indian guidelines standard is 2 watt per kg, averaged over a six minute period. According to the study however, the radiation effects are more in Indians than Europeans due to the tropical climate in India, low mass index and low fat content.
'With higher SAR values of mobile handsets, the public could potentially receive much higher radio frequency exposure. We have recommended that SAR levels be lowered down to 1.6 watt per kg, as prescribed by the Federal Communication Commission of United States (US),' a committee member said.
The report also recommends the use of hands-free technology to lower physical contact with the body and the cell phone and the mobile phones not adhering to standard levels of energy radiation should be banned.
It recommended children, adolescents and pregnant women should avoid excessive use of mobile phones.
'People having active medical implants should keep their cell phone at least 30 cm away from the implant,' the report advises.
Apart from health risks, the study also indicates that mobile phone radiation creates environment hazards like disappearance of butterflies, bees, insects and sparrows from big cities.
'Mobile towers should not be installed near high-density residential areas, schools, playgrounds and hospitals,' the report said.
The recommendations submitted by the committee will be used to chalk out a national policy and better guidelines on electromagnetic frequency (EMF) radiation for telecom towers.
Related Posts Plugin for WordPress, Blogger...