Search This Blog

Wednesday, October 26, 2011

அறிய வேண்டிய அரிய செய்திபூமியில் இன்றைக்கு 6.8 பில்லியன் பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் 9.5 பில்லியன் பேர்களுக்கு சோறு போட வேண்டிவரும். அதற்கு பிரேசில் நாடு அளவுக்குப் புதிதாக வேளாண்மை நிலம் நமக்குத் தேவைப்படும். ஏற்கனவே குடிநீரில் 70 சதவிகிதமும் எரிபொருளில் 20 சதவிகிதமும் உணவு உற்பத்திக்காகவே செலவாகிறது. மேலும் ஒரு 3 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான நிலத்திற்கும் நீருக்கும் எரிசக்திக்கும் என்ன செய்வது? எங்கே போவது? இதற்கு கலப்பையில்லாத கட்டட விவசாயம்தான் ஒரே பதில். நிலத்தை உழுது, பாசனம் செய்து, உர மிட்டதால் பூமி நொந்துபோய் மலட்டுத் தன்மை அடைந்துவிட்டன. வேண்டிய அளவுக்குக் காடுகளையும் வெட்டி நாசம் செய்து அவற்றை விவசாய நிலங் களாக்கி விட்டோம். அதன் காரணமாக புவியின் சூடும் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் எதையாவது புதிதாகச் செய்தால்தான் இந்தச் சிக்கலிலிருந்து விடுபடமுடியும். மண் படாத வேர்கள்
முப்பது மாடிக் கட்டடத்தில் ஒவ் வொரு தளத்திலும் மண்ணைப் பயன் படுத்தாமல், பயிர்களை வளர்க்கும் உள்ளரங்க பயிரியல் முறைதான் கட்டட வேளாண்மை.
வில்லியம் எஃப் பெரிக் என்பவர் 1929 இல் மண்ணில்லாமல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, அதில் ஊட்டச்சத்து உப்புகளைக் கரைத்து, செடிகளை வளர்த்துக் காட்டினார். ஹைட்ரோ போனிக்ஸ் என்பது இந்த முறையின் பெயர் _  இரண்டாம் உலகப் போரின் போது 8 மில்லியன் கிலோ காய்கறிகளை பசுபிக் தீவுகளில், நேட்டோ நாடுகளின் சார்பில் நிலமில்லாமல் நேரடியாக நீர்த் தொட்டிகளில் வளர்த்துப் பெறப்பட்டது.
வேர்கள் கெட்டியாக மண்ணைப் பிடித்துக் கொண்டுதான் வளரும் என்று பலகாலம் நாம் நம்பிவந்திருக்கிறோம். உண்மையில் மண்ணிலுள்ள தாதுக்கள் தான் அவற்றிற்குத் தேவை. தண்ணீர்த் தொட்டியில் செடியினால் நிற்க இயலாது என்று கருதினால் வெரிமிகுலைட் என்ற ஜடப் பொருளை, (தக்கைபோல இருக்கும்) துருவி தூளாக்கிப் போட்டு பல ஆண்டுகளுக்கு மண்போலவே திரும்பத் திரும்பப் பயன் படுத்தலாம். இது பயிரின் வேர்களுக்குத்  தேவையான பிடி மானத்தை மட்டும் வழங்கும்; மற்றபடி இதற்கு வேறு வேலை ஏதும் கிடையாது.
ஏரோபோனிக்ஸ் என்கிற இன்னொரு முறையில் செடிகள் நூலில் கட்டப்பட்டு காற்றில் தொங்கியபடி வளரும். காற்றில் குறைவில்லாத ஈரம் நிரம்பியிருந்தால் போதும். மார்கழிப் பனிபோல அறை முழு வதும் நீர்த் திவளைகளால் நிரப்பி அதில் ஊட்டத் தாதுக்களையும் கரைத்து கலந்து விட்டால் செடிகள் ஜோராக வளரும்.
யூரோஃபிரெஷ் எனும் காய்கறி நிறு வனம் அரிசோனா பாலைவனத்தில் 318 ஏக்கர் நிலபரப்புக்குச் சமமான விவசா யத்தை அடுக்கு மாடி கட்டடத்தில் செய்து கொண்டு வருகிறது. தக்காளி, வெள்ளிரிக் காய், மிளகு ஆகியவற்றை ஹைட்ரோ போனிக்ஸ் முறையில் பயிர்செய்தது.
செங்குத்து வேளாண்மை அடுக்குமாடி கட்டடத்தில் ஒவ்வொரு தளத்திலும் பல அடுக்குகளில் வரிசையாக தொட்டிகளை நிறுத்தி அவற்றில் பயிர் செய்வது செங்குத்து வேளாண்மை. செங்குத்து வேளாண்மைக்கு பல ஏக்கர் நிலம் வேண்டியதில்லை. எங்கெல்லாம் காய்கறிகள் வேண்டுமோ அங்காங்கே பயிர் செய்து கொள்ளலாம். கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில், விமான தளத்திற்கு பக்கத்தில், என நகரங்களின் நட்ட நடுவே வேளாண்மை செய்யலாம். காடு, கழனிகள் ஓரிடத்திலும், விற்பனை சந்தைகள் ஓரிடத்திலும் இருந்த காலம் போய்விடும்.  அறுவடையான அரிசி யையும் கரும்பையும் ஊர் ஊராக அனுப்பிக்கொண்டு தேவை யில்லாமல் போக்குவரத்துக்கு செலவிட வேண்டியதில்லை. விளைபொருள்களை பதனிட்டு பாது காக்கவும் தேவையில்லை. அவரவர்களுக்கு வேண்டியவற்றை அவர்களிடத்திலேயே விளைவித்து, பறித்த காய்கறிகளைத் தரலாம். மூடிய கட்டடத்தில் சுத்தமான முறையில் பயிர் செய்வதால் காய்கறிகளில் பூச்சி அண்டாது, மண் மூலமாக பயிர்களில் பரவும் கிருமிகளும் இருக்காது. இதனால் பூச்சிக்கொல்லி மருந்து, நோய்க்கிருமிகள் இல்லாத காய்கறி, தானியங்கள் கிடைக்கும்.
பருவகாலம், மழைபொழிவு, புயல், வெள்ளம் என்ற பிரச்சினைகள் ஏது மில்லாமல் ஆண்டு முழுவதும் பயிர் செய்து கொண்டேயிருக்கலாம். தேவை யான மின்சக்தியை பயிர்களின் காய்ந்த குப்பைக் கூளங்களை எரித்து அனல் சக்தியாக்கிப் பெறலாம். சூரிய ஒளிப் பலகைகளிலிருந்தும் காற்றாடிகளி லிருந்தும் பெறலாம்.
நகரத்துக்குள்ளேயே அடுக்கு மாடிகளில் பயிரிடுவதால், உள்ளூர் இளைஞர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மண்ணில் இறங்கி வேலை செய்வதை கேவலமாக நினைத்து பட்டணத்துக்கு வரும் பட்டிக்காட்டு இளைஞர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். படிப்படியாக மண்ணுக்கு ஓய்வு கிடைக்கும். மீண்டும் அவை பழைய இயல்புநிலையை அடையும். விரும்பினால் அவற்றை அப்படியே விட்டுவிடலாம். இதன் மூலம் இழந்த காடுகளைத் திரும்பப் பெறலாம். அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற வங்காரி மாத்தய்  சொன்னது போல் நிலங்களை சும்மாவிட்டு விட்டால் போதும் உலகம் வெப்பமயமாதல் தானா  சரியாகிவிடும். சோற்றுக்கு என்ன செய்வது என்றால், அதற்குத்தான் செங்குத்து வேளாண்மை இருக்கிறதே!
சமன்பாடுகள்
முப்பது அடுக்கு மாடியில் செய்யப் படும் மொத்த விளைச்சலானது, 150 ஏக்கர் நிலப்பரப்பில் செய்யப்படும் வேளாண் மைக்குச் சமம். குட்டை ரக பயிர்களாக இருந்தால், ஒரே தளத்தில் மூன்று, நான்கு அடுக்குகளாக அவற்றைப் பயிர் செய்து, 2400 ஏக்கர் நிலத்திற்குச் சமமான விளைச்சலைப் பெறலாம். கிராமப்புறங்களில் நிலங்களை விட்டுவிட்டு புறநகர் பகுதியிலேயே கட்டடங்கள் கட்டி அவற்றில் அதற்குச் சமமான விளைச்சலை பெறமுடியும். பள்ளிக்கூடங்கள், பெரிய மருத்துவமனைகளின் மேல்தளங்கள் போன்றவற்றில்கூட கூண்டு கட்டி அவற்றில் அவசியமான அளவுக்குக் காய்கறி பயிர் செய்யலாம். நான்கைந்து வாரங்களில் கீரை கிடைத்துவிடும்; கம்பு, சோளம் போன்ற தானியங்கள் 4 மாதங் களில் கிடைக்கும். முயன்றால் எல்லா பயிர்களையும் கட்டடத்திற்குள்ளேயே வளர்த்துக் கொள்ளலாம்.
முப்பது அடுக்குகள் ஒவ்வொன் றிலும் பல வித முறைகளில் பயிர்கள் வளர்க்கப்படும். முனிசிபல் கழிவு நீரே சுத்தம் செய்யப்பட்ட பிறகு பாசனத்திற்கு பயன்படுத்தப்படும். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறப்படும். செயற்கை ஒளி தரும் குழல்விளக்குகள் பயிர்களை வளர்க்கும். குப்பைகள் வெளியேற தனியாக செங்குத்து சாக்கடைகள் இருக்கும். கழிவுகளிலிருந்து வெப்பம் கிடைக்கும். அங்கேயே காய்கறி கடையும் இருக்கும்.
செங்குத்து வேளாண்மை கட்ட டங்களின் ஒவ்வொரு தளத்திலும் பயிர்கள் இப்படித்தான் வளர்க்கப்படும். ஒரு முனையில் நாற்றுகள் உருவாக்கப்படும்; கன்வேயர் பெல்ட் நகர்ந்த படியே இருக்கும், மறுமுனைக்கு வரும் போது அவை கனிந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். தளத்தின் ஒளி அளவு, ஈரப்பதம் ஆகியவை கட்டுப்படுத்தப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக, யூரோ ஃப்ரெஷ் என்ற கம்பெனி (அரிசோனா, வில்காக்ஸ்) 318 ஏக்கர் பரப்பில் தக்காளி மற்றும் மிளகாய்களை உள் அரங்கத்திலேயே நீர்த்தொட்டிகளில் பெருமளவில் வளர்த்துவருகிறது. இது ஹைட்ரோபோனிக்ஸ் வேளாண்மையின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு.

Friday, October 14, 2011

திருமண உறவு நிலைத்திருக்க
 • கணவன் அல்லது மனைவி இருவரும் தன் துணையின் மேல் ஆளுமை / ஆதிக்கம் செலுத்துவதைவிட்டு அன்பு செலுத்தவேண்டும். ஆளுமை / ஆதிக்கம் ஒரு போதை.

 • சூழ்நிலைக்கு ஏற்ப குடும்ப பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் பொறுப்புக்களை உணர்ந்து உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். 

 • துணையின் இயலாமையை விமர்சனம் செய்யாதீர்கள். புரிந்துகொள்ளுங்கள்.

 • நாம் மற்ற விசயங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை தன் துணையின் சிறு சிறு உணர்வுகளுக்கும் தரவேண்டும். சிறு விரிசல்கள் தான் ஒரு நாள் மொத்தத்தையும் தகர்த்துவிடும்.

 • எப்போதும் நாம் நம் துணைக்கு மருந்தாக இருக்கவேண்டுமே தவிர ஒரு போதும் பிணியாக மாறக்கூடாது.

 • அல்ப காரணங்களுக்காக திருமண உறவில் இருந்து பிரிந்து செல்வது தற்கொலைக்குச் சமமானது.

 • கணவன் அல்லது மனைவி இருவரும் ஒரு குடும்ப எல்லையை வகுத்துக்கொண்டு அதற்குள் மற்ற உறவுகளின் ஆதிக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும்.

 • பேசுங்கள். மனது விட்டு அன்புடன் பேசுங்கள். ஒரு துணை பேச ஏங்கும்போது தவறாமல் பேசுங்கள். நீங்கள் பேசும் விசயம் உங்களின் துணையை காயப்படுத்தும் என்றால் தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள். நிச்சயம் நீங்கள் பேச விரும்பிய விசயத்தை உங்களின் துணையை காயப்படுத்தாமல் சொல்லமுடியும். கற்றுக்கொள்ளுங்கள்.

 • எப்போதும் எக்காலத்துக்திலும் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒருவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அப்படி ஒரு நிலை திருமண வாழ்வில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 • உங்களின் குழந்தைகளின் முன்பு தயவுசெய்து சண்டையிட்டுக்கெள்ளாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரின் மேல் உள்ள குற்றம் குறைகளை குழந்தைகளிடம் கூறிக்கொண்டிருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒரு உதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.

 • உறவுகள் மற்றும் நண்பர்களில் உள்ள கறுப்பு ஆடுகளை அடையாளம் கண்டுகொள்ளவும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பு 1: இங்கு நான் துணை (துணைவி அல்ல) என்று எழுதியிருப்பது ஆண் மற்றும் பெண் இருவரையும் பொதுவாக குறிப்பிடவே.

Tuesday, October 11, 2011

குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டம்; நெருக்கடியில் நெற்களஞ்சியம்


விவசாயத்திற்குப் பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளில், நிலத்தடி நீர் மட்டம் 42 அடி குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டே ஆண்டுகளில், தரிசு நிலங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த அபாயப் புள்ளி விவரங்கள், தஞ்சை மாவட்ட விவசாயத்தில் ஏற்பட்டு வரும் விரும்பத்தகாத மாற்றங்களின் சில அறிகுறிகள் தான்.
தண்ணீர் கரை புரண்டோடும் காவிரி நதி நீர் கால்வாய்கள், அவற்றில் குளித்துக் கும்மாளம் போடும் பிள்ளைகள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் எனக் காட்சி தரும் வயல்வெளிகள், வயல்வெளிச் சேற்றில் நாற்று நடும் பெண்கள் என, நெஞ்சை அள்ளும் தஞ்சை கிராமங்கள், வளமை போல் இந்த ஆண்டும், சம்பா பருவ நெல் சாகுபடிக்குத் தயாராகி வருகின்றன.அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதே காட்சிகள் கிடைக்குமா என்ற கேள்வியை, புள்ளி விவரங்கள் பின்னால் சென்ற போது சந்தித்த அசுரர்கள் எழுப்புகின்றனர்.

ஆழ்துளைக் கிணறு என்ற அசுரன்:
மத்திய நீர்வள அமைச்சகம், தஞ்சை மாவட்டத்தில், 26 இடங்களில், 2001-2011 ஆண்டுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் நிலத்தடி நீர் மாற்றங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதில், நிலத்தடி நீர் மட்டம், சராசரியாக 13.87 மீட்டர், அதாவது 45.5 அடி அளவிற்குக் குறைந்துள்ளது தெரியவந்தது.குறிப்பாக, தஞ்சையின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில், மருங்குளம், குறுங்குளம், திருவோணம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட கிராமங்களில், 70 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம், 120 அடிக்கு குறைந்துள்ளது. இதை, பொதுப் பணித் துறை அதிகாரிகளும் ஒப்புக் கொள்கின்றனர்.மேட்டூர் அணை நீர்வரத்து மற்றும் பருவ மழையில் நிலவும் மாறுபாடு, பயிர் சுழற்சி முறை கடைபிடிக்கப்படாதது ஆகியவற்றின் விளைவாக, ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் அதிகரித்துள்ளது.இதன் நேரடி விளைவாக, நிலத்தடி நீரும் வேகமாகக் குறைந்து வருகிறது. இதற்கும் மேல் நிலத்தடி நீர் குறைந்தால், நிலைமை, அபாய கட்டத்தை எட்டும் எனத் தெரிகிறது.

நீடாமங்கலத்தை அடுத்த, பைத்தஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி குமாரசாமி, ""மேட்டூரை மட்டும் நம்பி, விவசாயம் செய்த காலம் மாறிவிட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல், எங்கள் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் நடந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் மட்டும், 22 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இவற்றின் மூலம், விவசாயத்திற்கு நீரை எடுக்க, எடுக்க, நிலத்தடி நீர் மட்டம் நிச்சயம் குறையும்'' எனத் தெரிவித்தார். மேலும், ""இந்நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில், தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. அதன் அறிகுறியாக, இப்போதே எங்கள் பகுதியில், தண்ணீர் லேசாக உவர்க்கிறது'' என்றார்.

ஊடு பயிர்களை"ஊடு' கட்டிய அசுரன் யார்?
தாளடி, சம்பா நெல் சாகுபடிக்குப் பின், உளுந்து, நிலக்கடலை, பச்சைப்பயறு போன்ற ஊடு பயிர்களைப் போடும் முறை, தஞ்சையில் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.இந்தப் பயிர்களில் உள்ள வேர் முடிச்சுகள், இயற்கையாக அமோனியா உரம் தயார் செய்து மண்ணை வளமாக்குகின்றன. மேலும், இந்த வேர்கள் ஆழமாகப் பரவும் தன்மை கொண்டவை என்பதால், மண்ணை மென்மையாக்குகின்றன. இதனால், மண்ணின் மேற்பரப்பு, மழைநீரை உள்வாங்கும் பக்குவத்திற்குத் தயாராகிறது.ஆனால், தற்போது, தஞ்சை விவசாயிகள் ஊடு பயிர்களை புறக்கணித்து விட்டு, நெல் பயிரை மட்டுமே விதைத்து வருகின்றனர்.

இதுகுறித்து, தொப்பன்குடிசையைச் சேர்ந்த, இயற்கை முறை விவசாயி சித்தர், ""ஆழ்துளைக் கிணற்றுப் பாசன முறையால் குறையும் நிலத்தடி நீரை, பயிர் சுழற்சி முறையால் எளிமையாக ஈடுசெய்யலாம். ஆனால், தற்போது பெரும்பாலான விவசாயிகள், ஆண்டு முழுவதும் நெல் பயிரை மட்டுமே விதைக்கின்றனர்'' எனக் கூறினார்.

மேலும், ""இதற்கு இடப்படும் ரசாயன உரங்களும், தன் பங்கிற்கு மண்ணை இறுகச் செய்கின்றன. இதனால், மழைநீர் உறிஞ்சப்படாமல், வீணாகக் கடலில் கலப்பதுடன், நிலத்தின் வளமான மேற்பரப்பு மண்ணும், அடித்துச் செல்லப்படும் அவலம் ஏற்படுகிறது'' என்றார்.

ஆட்களை மாயமாக்கிய அசுரன்:
விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது, குதிரைக் கொம்பைப் பிடிப்பது போன்ற விஷயமாக தஞ்சையில் மாறிவிட்டதால், தற்போது பெரும்பாலும் இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இயந்திர அறுவடையால், பயிர் சுழற்சி முறையை செயல்படுத்துவதில், நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர்.

புன்னைநல்லூர் அடுத்த, மாரியம்மன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மனோகரன், ""தாளடி, சம்பா நெல் அறுவடைக்கு ஒரு வாரம் முன்பே, அதாவது தை முதல் வாரத்தில், வயலின் ஈரப்பதம், ஊடுபயிர் விதைகளை விதைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். அப்போதே வயலில் பட்டம் பிரித்து, ஊடு பயிர்களுக்கான விதைகளை விதைப்போம்.ஆனால், இயந்திரத்தை வைத்து அறுவடை செய்வதால், வயலை முழுவதும் காயவைத்த பின்தான், இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்ய இயலும். இதனால், ஊடு பயிர்களுக்கான விதைகளை, குறித்த நேரத்தில் விதைக்க முடிவதில்லை. அப்படி விதைத்தாலும், அறுவடை இயந்திரம் அவற்றை நசுக்கிவிடும்'' என்றார்.

தரிசாகும் விவசாய நிலங்கள்:
ஆள், நீர் பற்றாக்குறையால், தஞ்சையில் 2007-08ம் ஆண்டு 10,145 எக்டேராக இருந்த தரிசு நிலங்கள், 2009-10ம் ஆண்டில் 14,229 எக்டேராக அதிகரித்தது. அதாவது, இரண்டு ஆண்டுகளில், தரிசு நிலங்களின் அளவு, 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து, தஞ்சை, காட்டுப்பாக்கம் வேளாண் இணை இயக்குனர் அலுவலக அதிகாரி கூறுகையில், ""இன்றைய இளம் தலைமுறையினர், விவசாயம் செய்ய விரும்பவில்லை. பாரம்பரியமாக விவசாயம் செய்வோர் கூட, தங்கள் பிள்ளைகள் சில ஆண்டுகளாவது வெளிநாடு சென்று சம்பாதிப்பதையே விரும்புகின்றனர். இதனால், விவசாயத்திற்குப் பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்திலும், தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. இவை, நாளடைவில் வீட்டுமனைகளாக மாறிவிடுகின்றன'' என்றார்.மேலும், ""தரிசாகும் விளைநிலங்களால் ஏற்படும் உற்பத்திப் பாதிப்பைச் சரிசெய்ய, நவீன நெல் விதை ரகங்களை, விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கிறோம். இவற்றால், 15 ஆண்டுகளுக்கு முன், 4,000 கிலோ நெல் அறுவடை செய்யப்பட்ட ஒரு எக்டேர் பரப்பளவில், தற்போது, 6,500 கிலோ முதல் 7,000 கிலோ வரை, அறுவடை செய்ய முடிகிறது'' என தெரிவித்தார்.

உயர் ரக விதைகளுக்கு, கூடுதல் உரங்களும், பயிர் ஊக்கிகளும் தேவைப்படுகின்றன. இதுவே ஒரு முடியாத வட்டமாக, கூடுதல் உரம், உரத்தினால் மண் இறுக்கம், அதனால் நிலத்தடி நீர் குறைவு என்ற போக்கில், விவசாயத்தை நலிவடையச் செய்யும்.

அசுரர்களை விரட்டுவது தான் எப்படி?
சில அரசுத் திட்டங்களே, விவசாயத்திற்குப் பாதகமாக உள்ளன. குறிப்பாக, நீலத்தடி நீரைப் பாழாக்கும் இலவச மின்சாரம், வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் செய்யும் 100 நாள் வேலை திட்டம், விவசாயிகளை சந்தையில் இருந்து விலக்கும், கொள்முதல் விலை நிர்ணயம்.

இதுகுறித்து, இயற்கை விவசாயி சித்தர், ""குழந்தைக்கு பொம்மை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதன் காது கடுக்கனைக் கழற்றுவதைப் போல, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்துவிட்டு, விளை பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்கிறது. இந்த அணுகுமுறை தவறானது. விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை, விவசாயிகளுக்கே வழங்க வேண்டும்'' என்று கூறினார்.

தொடர்ந்து, பசுமையான தஞ்சையின், நெஞ்சை அள்ளும் காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்றால், மேட்டூர் அணைப் பாசனத்தைச் சீர் செய்து, புள்ளி விவரங்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் அசுரர்களையும் விரட்ட வேண்டும்.

தஞ்சை மாவட்டம்:
தஞ்சை மாவட்டத்தில், தஞ்சை, பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுவாசத்திரம், அம்மாபேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய விவசாய வட்டங்கள் உள்ளன.இவற்றில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் எக்டேர் பரப்பளவில், தற்போது விவசாயம் நடக்கிறது.

தொழிற்துறைக்கும் ஆளில்லை: வர்த்தக கூட்டமைப்பு காட்டம்
"குறைவான வேலைப்பளு மற்றும் அதிக சம்பளம் காரணமாக, பெருமளவு தொழிலாளர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் நோக்கி ஈர்க்கப்படுவதால், இதர தொழில்துறைகளில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது' என, இந்திய வர்த்தக கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் விளைவுகள் குறித்து, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

ஆய்வில் பங்கேற்ற பெருமளவு நிறுவனங்கள், "தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் குறைவான வேலைப்பளுவுடன் அதிக சம்பளம் வழங்கப்படுவதால், கனரக தொழிற்சாலைப் பணிகளில் ஈடுபட தொழிலாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, ஒப்பந்தப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது. இதில், நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதி மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் தான், பெருமளவு பாதிக்கப்படுகின்றன' என தெரிவித்தன.

இந்நிலை மேலும் தொடர்ந்தால், நாடு முழுவதும் திறன் வாய்ந்த பணியாளர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். இந்த நிலையை சரிசெய்ய, கனரக தொழிற்சாலைப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களையும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் சேர்த்துக் கொள்ளலாம் என்ற கோரிக்கையையும், அவை முன்வைத்தன.
விவசாயம் சார்ந்த தொழில்களும், இனி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் சேர்த்துக் கொள்ளப்படும் என, மத்திய அமைச்சர் சரத் பவார் அறிவித்துள்ளார்.எனவே, இதுபோன்ற உபயோகமான துறைகளிலும், இத்திட்டத்தின் தொழிலாளர்களை ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்து வரும் மேட்டூர் நீர்
தஞ்சையின் முக்கிய பயிரான நெல், குறுவை, தாளடி, சம்பா என, மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது.இதில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான குறுவை நெல் சாகுபடிக்கு, இம்மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீரையே பெரிதும் நம்பியுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளில், 12 ஆண்டுகள், தஞ்சை உட்பட 12 மேட்டூர் அணை பாசன மாவட்டங்களுக்கு, குறுவை நெல் சாகுபடிக்கு பரிந்துரைக்கப்பட்ட 137 டி.எம்.சி., தண்ணீரை விட, குறைவாகவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைத்துள்ளது. தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் பேரவையைச் சேர்ந்த, கலைவாணன், ""கடந்த நிதியாண்டில், இப்பருவத்தில், மேட்டூர் அணை பாசனப் பகுதிகளுக்கு, பரிந்துரைக்கப்பட்ட தண்ணீர் அளவை விட, 50 சதவீதம் குறைவாகத் தான் கிடைத்தது.இதனால், குறுவை நெல் சாகுபடிக்கு, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை எடுக்கும் அவசியம் ஏற்படுகிறது'' என்றார்.

பருவ மழையும், சம்பா சாகுபடியும்
தஞ்சை மாவட்டத்தில், சம்பா பருவத்தில் தான், அதிகளவு நெல் பயிரிடப்படுகிறது. கடந்த நிதியாண்டில், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 459 எக்டேர் பரப்பளவில், சம்பா நெல் பயிரிடப்பட்டது.ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான இப்பருவத்தில், வட கிழக்குப் பருவ மழை பெய்வதால், இம்மழை நீரைக் கொண்டு, பொதுப் பணித் துறையின் பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் மூலம் பாசனத்திற்குத் தேவையான நீர் கிடைத்து வருகிறது.இந்த காலகட்டத்தில், கடந்த நிதியாண்டில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட, 60.87 டி.எம்.சி., தண்ணீர் குறைவாகவே மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டாலும், விவசாயம் பாதிக்கப்படவில்லை.


Monday, October 03, 2011

How to pray God?
1) ӾĢø ¦¸¡ÊÁÃõ ÓýÒ ¿ÁŠ¸¡Ãõ ¦ºöÂ×õ
2) À¢ÈÌ §¸¡Å¢Ä¢ý ¯û§Ç ¦ºýÚ ´Õ Ó¨È ÅÄõ ÅÃ×õ
3) «¾ý À¢ý ãÄŨà ¾¡¢º¢ì¸×õ
4) À¢ý «õÀ¡¨Ç Ží¸×õ
5) þÃñ¼¡õ Ó¨È ÅÄõ ÅÕõ§À¡Ð ÁüÈ ¦¾öÅí¸¨Ç Å½í¸×õ
6) ãýÈ¡õ Ó¨È ÅÄõ ÅÕõ§À¡Ð ºñʦ¸ŠÅèà ¾¡¢º¢ì¸×õ
7) ´ù¦Å¡Õ Ó¨È ÅÄõ ÅÕõ§À¡Ð ãÄÅ¡¢ý Óý ¿ÁŠ¸¡Ãõ ¦ºöÂ×õ
8) ±É§Å 3 Ó¨È ÅÄõ ÅÕ¾Öõ  5 Ó¨È ¿ÁŠ¸¡ÃÓõ þ¨È ÅÆ¢À¡ðÊø ¿¨¼¦ÀÚõ


Related Posts Plugin for WordPress, Blogger...