Search This Blog

Friday, September 02, 2016

கலப்படத்தைக் கண்டறிவது எப்படி?

உணவுப் பொருட்களில் பல்வேறு கலப்படங்கள் செய்யப்படுகின்றன. அவற்றை கண்டறிவது எப்படி என்பதைப் பார்க்கலாம்..

டீத் துாள்:


கடைகளில் பயன்படுத்திய டீ துாள் கழிவை குறைந்த விலைக்கு வாங்கி, அதை வெயிலில் காயவைத்து, சிவப்பு நிறத்தை ஏற்றுகின்றனர். பின்னர், குறைந்த விலைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தரமற்ற மூன்றாம் தர டீ துாளை வாங்கி, இரண்டையும் கலக்கி, போலி லேபிள் கொண்ட பாக்கெட்களில் அடைத்து, டீக்கடை களுக்கு விற்றுவிடுகின்றனர். சில நேரங்களில், பிரபல பிராண்ட்கள் பெயரிலான லேபிள்களுடன் கூடிய போலி பாக்கெட்களில் அடைத்து, கடைகளுக்கும் விற்கின்றனர்.கண்டறிவது எப்படி?

சாதாரண 'பில்டர் பேப்பரில்' சந்தேகத்துக்குரிய டீ துாளை கொட்டி, அதன் மீது சிறிது நீரை ஊற்றினால், நிறம் தனியே பிரிந்து அந்தபேப்பரில் பரவும்; இதுவே போலி டீ துாள்.

கடுகு:

சமையலறை அத்தியாவசிய உணவுப் பொருட்களில் முக்கியமானது கடுகு. கசகசா வகையைச் சேர்ந்த'அர்ஜிமோன்' விதைகள், கடுகுடன் கலக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் தெரியாது.


கண்டறிவது எப்படி? :

தரமான கடுகை, உள்ளங்கையில் வைத்து அழுத்தி தேய்த்தால், அதன் உட்புறம் மஞ்சளாக காட்சி தரும். போலி கலக்கப்பட்டிருந்தால், கைகளில் நசுங்கும்போது, விதைகளின்உட்புறம் வெள்ளையாக காட்சி தரும்.

மஞ்சள் துாள்:

மஞ்சள் துாளில், மாட்டுச்சாணப்பொடியும், 'மெட்டானில் எல்லோ' என்ற ரசாயனமும் கலக்கப்படுகின்றன.


கண்டறிவது எப்படி? 

அரை ஸ்பூன் மஞ்சள்துாளை, 20 மி.லி., இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் இரண்டு துளிகள் 'ஹைட்ரோ குளோரிக்' அமிலத்தைச் சேர்க்க வேண்டும். இளம் சிவப்பு, ஊதா நிறத்தில் நீர் மாறினால், அதில் 'மெட்டானில் எல்லோ' கலந்திருப்பதை உறுதி செய்யலாம். பரிசோதனைக்கூடத்தில்தான் இதை கண்டுபிடிக்க முடியும்.

பச்சை பட்டாணி

பச்சை மிளகாய், குடமிளகாய் போன்றவை அதிகப் பச்சையாகத் தெரிய, 'மாலசைட் கிரீன்' என்ற ரசாயனத்தில் முக்கி எடுக்கின்றனர். இதேபோல, உலர் பட்டாணியை ஊறவைத்து, 'மாலசைட் கிரீன்' கலந்து 'பிரஸ்'ஸாக இருப்பதுபோல் விற்கின்றனர்.


கண்டறிவது எப்படி? 

கலப்பட பச்சை மிளகாய், பட்டாணி ஆகியவற்றை, வெந்நீரில் போட்டதும் பச்சை நிறம் வெளியேறினால் அதில் 'மாலசைட் கிரீன்' கலந்திருப்பது உறுதியாகும்.

பட்டை

பட்டையில், கேசியா, சுருள் பட்டை என்ற இரு வகைகள் உள்ளன. இதில், சுருள் பட்டையில்தான் சத்துக்கள் உள்ளன. கேசியா பட்டையில் சாதாரண மரப்பட்டைகளும், நிறம் சேர்த்துக் கலக்கப்படுகின்றன.


கண்டறிவது எப்படி?


சந்தேகத்துக்குரிய பட்டைகளில் ஒன்றிரண்டை, கைகளில் வைத்து நன்றாக கசக்கினால், கையில் எவ்விதமான நிறமும் ஒட்டக்கூடாது. அவ்வாறு ஒட்டினால் அது கலப்படம்.
மல்லி

மாட்டுச் சாணம் கலக்கப்படுகிறது.


கண்டறிவது எப்படி?

கலப்பட மல்லியை தண்ணீரில் போட்டால்,மாட்டுச்சாணம் கரைந்து, நீரின் நிறத்தை மாற்றி, சாணத்தின் நாற்றம் எழும்.

மிளகு

பப்பாளி விதைகளைக் காயவைத்தால் மிளகு போலத் தெரியும். அதை, மிளகில் சேர்த்து விற்கின்றனர். அதேபோல, பழைய மிளகில், 'மினரல் ஆயில்' எனப்படும் பெட்ரோலியப் பொருள் கலக்கப்பட்டு, மெருகேற்றப்படுகிறது.


கண்டறிவது எப்படி?

மிளகு பார்ப்பதற்குப் பளபளப்புடன் மின்னக் கூடாது. முகர்ந்துபார்த்தால் கெரசின் வாடை அடிக்கக் கூடாது. கண்ணாடி டம்ளரில்,50 மி.லி., தண்ணீரை ஊற்றி, அதில் மிளகைப் போட்டால், மிளகு மூழ்கினால் அது உண்மையான மிளகு, மிதந்தால் அது பப்பாளி விதை.

சீரகம்

சீரகத்தில், குதிரைச் சாணமும், அடுப்புக் கரியும் சேர்க்கப்படுகிறது.


கண்டறிவது எப்படி?

சீரகத்தைத் தண்ணீரில் போட்டால் சாணம் கரைந்துவிடும். சீரகத்தைக் கையில் வைத்துத் தேய்க்கும்போது, கறுப்பாக மாறினால், அதில் அடுப்புக் கரி சேர்க்கப்பட்டிருக்கிறது.

பால்

பால் 'சில்லிங்' சென்டருக்கு போகும் வரை, கெட்டுப்போகாமல் இருக்க, யூரியா, காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட் போன்றவை சேர்க்கப்படுகின்றன.


கண்டறிவது எப்படி?

பாலையும், தண்ணீரையும், 10 மி.லி., அளவில் சமமாகக் கலக்கும்போது நுரை வந்தால், அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்கலாம்.

மிளகாய்த் துாள்

கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் செங்கல் துாள் கலக்கின்றனர். அதுமட்டுமின்றி, கலப்பட மிளகாய்த் துாளுக்கு கவர்ச்சியான நிறத்தை ஏற்ற, புற்றுநோயை உண்டாக்கும் 'சூடான் டை' என்ற ரசாயனத்தை கலக்குகின்றனர்.


கண்டறிவது எப்படி?

ஒரு கிளாஸ் நீரில், ஒரு ஸ்பூன் மிளகாய்த் துாளைக் கலக்கும்போது, பளீர் சிவப்பு கலர் வெளிவந்தால் அதில் கலப்படம் உள்ளது.

தேன்

தேனில், வெல்லப்பாகு கலந்து நிறமேற்றுகின்றனர்.


கண்டறிவது எப்படி?

பஞ்சு எடுத்து, அதை தேனில் நனைத்து நெருப்பில் காட்டும்போது, பஞ்சு எரிந்தால் நல்ல தேன். எரியும்போது சடசடவென சத்தம் வந்தால், அது கலப்படத் தேன். தேனை தண்ணீரில் விட்டால், கரையாமல் அடி வரை சென்று தங்கும்; அவ்வாறின்றி கரைந்தால்,அது வெல்லப்பாகு.


நெய்


டால்டா மற்றும் வேக வைத்து நன்றாக மசித்த உருளைக்கிழங்கை கலக்கின்றனர்.


கண்டறிவது எப்படி? 

வாணலியில் இட்டு சூடாக்கினால், நெய் கரைந்து, மற்ற சேர்மானங்கள் தனியாக நிற்கும்.

சமையல் எண்ணெய்

எண்ணெயை ரீபைண்ட் செய்ய, பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த எண்ணெயை பயன்படுத்துவது உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தலாம்.

புகார் தெரிவிக்க:

கமிஷனர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
(உணவுப்பிரிவு), 359. அண்ணா சாலை, மருத்துவ பணிகள் இயக்குனரகம்
அலுவலக வளாகம், தேனாம்பேட்டை, சென்னை - 600 006.
தொலைபேசி எண்: 044 - 243 50 983.
ஹெல்ப் லைன்: 94440 42322.
இணைய தள முகவரி: commrfssa@gmail.com 

Tuesday, February 23, 2016

சைவ பேலியோ டயட்டினின் சவால்கள்


னிதனின் ஆரோக்கியம், புலாலில் மட்டுமே கிடைக்கும் சிலவகை வைட்டமின்கள், மினரல்களை நம்பியுள்ளது. சைவ உணவுமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு அசைவர்களுக்கு வராத சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 
புரதம்
சைவர்களின் முதல் சவாலே புரதம்தான். இந்திய அரசு அளிக்கும் புள்ளிவிவரப்படி 30% இந்தியர்கள் புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த முப்பது சதவிகிதத்தில் 46% பேர் பள்ளிக் குழந்தைகள். இவர்கள் எல்லாருமே சைவர்கள் எனச் சொல்லமுடியாது. இந்தியாவில், அசைவராலுமே முட்டை, இறைச்சி போன்ற புரதம் மிகுந்த உணவுகளை அன்றாடம் உண்ண முடியாது. எனவே புரதக் குறைபாடு இந்தியா முழுவதையும் பாதிக்கும் விஷயம் என்பதை மனத்தில் கொள்ளவேண்டும்.
மற்ற வைட்டமின்களை போல புரதத்தை உடலால் தேக்கி வைக்க முடியாது. அன்றாடத் தேவைகளுக்கான புரதத்தை அன்றாட உணவின் மூலமே அடையவேண்டும். ஏதோ ஒருநாள் இரு மடங்கு புரதம் எடுத்துக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.
இந்திய அரசின் நெறிமுறைகளின்படி சராசரி ஆண் 60 கிராம் புரதம் எடுக்கவேண்டும். பெண்ணுக்கு 55 கிராம் புரதம் தேவை. கடும் உடற்பயிற்சி, மகப்பேறு, பாலூட்டுதல் போன்றவற்றால் புரதத் தேவைகள் இன்னமும் தேவைப்படும். இதிலும் தாவரப் புரதங்கள் முழுமையாக நம் உடலில் சேர்வது கிடையாது. மிருகப் புரதங்களே நம் உடலில் முழுமையாகச் சேர்கின்றன. உதாரணமாக முட்டையில் இருக்கும் புரதம் 100% அளவில் நம் உடலுக்குள் செல்கிறது. ஆனால், கோதுமையில் உள்ள புரதத்தில் 30% அளவே நம் உடலில் சேர்கிறது. பீன்ஸ், பருப்பு போன்ற சைவ உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளன. ஆனால், அவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் முழுமையாக இல்லாததால் பாதிக்கும் மேலான பீன்ஸின் புரதங்கள் நம் உடலில் சேராமல் கழிவாக சிறுநீரகத்தால் வெளியேற்றபடுகின்றன. (அமினோ அமிலங்கள் உடலின் மிக முக்கியமான வகை அமிலங்கள். புரதங்களைக் கட்டமைக்கும் தன்மை கொண்டவை. மொத்தம் 20 அமினோ அமிலங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் சில வகை அமினோ அமிலங்கள் மட்டுமே பீன்ஸ், பருப்பில் உள்ளன.) சைவர்கள் பேலியோ உணவில் தினமும் 100 கிராம் அளவுக்குப் பாதாம் எடுத்தால் 23 கிராம் புரதம் கிடைக்கும். 500 கிராம் பனீரில் 20 கிராம் புரதம் உள்ளது. இந்த இரண்டையும் சாப்பிட்டால் மொத்தம் 43 கிராம் அளவே புரதம் உடலைச் சேரும். தேங்காய், காய்கறிகளில் உள்ள புரதத்தை குத்துமதிப்பாக ஒரு ஏழெட்டு கிராம் என்று வைத்துக்கொண்டாலும் சைவ பேலியோவால் மொத்தம் 50 - 55 கிராம் அளவே புரதம் கிடைக்கிறது. இது அரசு பரிந்துரைக்கும் அளவை விடவும் குறைவு. எனினும் உடல்நலனைப் பாதிக்கும் அளவு பிரச்னைகளை உண்டுபண்ணாது. பேலியோ அல்லாத சைவ உணவில் பலரும் இதை விட குறைந்த அளவு புரதத்தையே அடைகிறார்கள். அப்படிப் பார்க்கும்போது சைவ பேலியோ உணவுமுறை மேலானது.
வைட்டமின் ஏ
தாவர உணவு எதிலும் வைட்டமின் ஏ கிடையாது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். வைட்டமின் ஏ ஏராளமாக இருப்பதாகப் பலராலும் நம்பப்படும் கேரட், கீரை போன்றவற்றில் துளி கூட வைட்டமின் ஏ கிடையாது என்பதே உண்மை.
வைட்டமின் ஏ-வில் இருவகை உண்டு. ரெடினால் (Retinol) மற்றும் பீடா காரடின் (Beta carotene). இரண்டில் ரெடினாலே உடலில் சேரும் தன்மை கொண்ட வைட்டமின். இதுவே கண்பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் பலன் அளிக்கும் தன்மை கொண்ட வைட்டமின் ஏ ஆகும்.
ஆட்டு ஈரல், மீன் தலை, முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை உண்ணும்போது அதில் உள்ள ரெடினால் எளிதில் நம் உடலில் சேர்ந்து விடுகிறது. பதிலாக கேரட், கீரையைச் சாப்பிட்டால் அதில் உள்ள பீடா காரடினை ரெடினால் ஆக மாற்றியபிறகே நம் ஈரலால் அதை வைட்டமின் ஏ-வாகப் பயன்படுத்தி உடலுக்கு நன்மையளிக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், தைராய்டு சுரப்பியில் பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கு பீடா காரடினை ரெடினாலாக மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனால் அவர்கள் கிலோ கணக்கில் கேரட்டைச் சாப்பிட்டாலும் அவர்களது ஈரலால் அதை ரெடினால் ஆக மாற்ற முடியாது. இதனால் மாலைக்கண் வியாதி, கண்பார்வை குறைபாடுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.
ரெடினால் உள்ள உணவுகளான நெய், பால், சீஸ், பனீர் போன்றவை சைவர்களுக்கு உதவும். ஆனால் பாலில் உள்ள கொழுப்பில் மட்டுமே ரெடினால் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் நம் மக்கள் கொழுப்பு இல்லாத பாலை வாங்குவதில்தான் ஆர்வம் செலுத்துகிறார்கள். பாலில் உள்ள கொழுப்பை அகற்றினால் அதில் உள்ள ரெடினாலையும் நாம் சேர்த்தே அகற்றிவிடுகிறோம். பிறகு பாலில் என்ன சத்து இருக்கும்?
நெய், வெண்ணெய் போன்ற பேலியோ உணவுகளை அதிகம் உண்ணுவதால் அதில் உள்ள ரெடினாலின் பயனை சைவர்கள் அடைகிறார்கள். அவர்களின் வைட்டமின் ஏ அளவுகள் அதிகரிக்கின்றன. எனவே சைவ பேலியோவைப் பின்பற்ற எண்ணுபவர்கள் தினமும் அரை லிட்டர் பால் அல்லது பனீரை தவறாமல் எடுத்துக்கொள்வதுடன் தினமும் அதிக அளவிலான நெய், வெண்ணெய் போன்றவற்றையும் சமையலில் பயன்படுத்தவேண்டும்.
பி12 வைட்டமின்
பி12 என்பது முக்கியமான பி வைட்டமின்களில் ஒன்றாகும். பி12 வைட்டமின் குறைபாட்டால் நமக்கு மாரடைப்பு, ஆஸ்துமா, மலட்டுத்தன்மை, மன அழுத்தம் போன்ற பலவகை வியாதிகள் ஏற்படுகின்றன.
துரதிர்ஷ்டவசமாக பி12 வைட்டமின் எந்தத் தாவர உணவிலும் இல்லை. பி12 - புலால், மீன், முட்டை, பால் போன்ற மிருகங்களிடமிருந்து கிடைக்கும் உணவுகளிலேயே காணப்படுகிறது. சைவர்கள் பால், பனீர் போன்றவற்றை உண்பதன் மூலம் பி12 தட்டுப்பாடு ஏற்படாமல் காத்துக்கொள்ளமுடியும். அதே சமயம் ஒரு நாளுக்கு தேவையான பி12-ஐ அடையவேண்டும் என்றால் தினமும் ஒன்றே கால் லிட்டர் பாலை அருந்தவேண்டும். இது நம்மால் முடியாது அல்லவா! இதன்படி, பால் மட்டுமே உண்ணும் சைவர்களுக்கு பி12 தட்டுப்பாடு உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம்.
முட்டை சாப்பிடும் சைவர்களால் இதைச் சமாளிக்க இயலும். அவர்களின் புரதத் தேவையும் முட்டை உண்பதால் பூர்த்தி அடையும். ஆனால் பெரும்பாலான சைவர்கள் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அவர்கள் பி12 அளவுகளை மருத்துவப் பரிசோதனை மூலம் அறிந்துகொள்ளவேண்டும். பி12 அளவுகள் உடலில் குறைவாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் பி12 ஊசி போட்டுக்கொள்ளவேண்டும்.
பதிலாக பி12 அளவை அதிகரிக்க பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளையோ, வைட்டமின் மாத்திரைகளையோ உண்பதால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில் மாத்திரைகளில் உள்ள வைட்டமின்கள் செயற்கையாக தொழிற்சாலைகளில் தயாராகுபவை. முட்டை, பாலில் உள்ளதுபோல தரமாகவும், எளிதில் ஜீரணிக்கப்படும் வைட்டமின்களாகவும் அவை இருப்பதில்லை. ஊசி வடிவில் பி12 எடுத்துக்கொண்டால் ஓரளவு அந்த வைட்டமின் உடலில் சேரும் வாய்ப்பு உள்ளது. அது நேரடியாக ரத்தத்தில் கலக்கும் என்பதால்.

நன்றி: நியாண்டர் செல்வன் 

Saturday, February 20, 2016

PCOSம் பேலியோ உணவு முறையும்

 பெண்களைத் தாக்கும் பாலிசிஸ்டிக் ஒவரி சிண்ட்ரோம் (PCOS - Polycystic ovary syndrome) எனப்படும் முக்கிய வியாதியைப் பார்க்கலாம்.


18 முதல் 21 வயது வரை உள்ள பெண்களைத் தாக்கக்கூடிய நோய்களில் இதுவும் ஒன்று. இந்த நோய் பாதிப்பில், இந்தியாவிலேயே தமிழகத்துக்குத்தான் முதலிடம் என்பதையும் கவனிக்கவேண்டும்.
பெண்கள் சிலருக்குப் போதுமான அளவில் கருமுட்டைகள் உற்பத்தி ஆகவில்லை என்றால் அது பி.சி.ஓ.எஸ் என்று அழைக்கப்படும்.
ஹார்மோன் சமநிலை தவறுவதால் பி.சி.ஓ.எஸ் பாதிப்பு இருக்கும் பெண்களின் உடல், ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரானை (Testosterone) அதிக அளவில் உற்பத்தி செய்யும். இதனால் பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களுக்கு மீசை முளைப்பது, தாடி முளைப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படும். காரணம், அவர்கள் உடலில் இன்சுலின் சுரந்து ஹார்மோன்கள் பாதிப்படைந்து ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான் உடலில் அதிக அளவில் சுரந்து விடும். ஆண்களுக்கு இம்மாதிரி நிகழ்கையில் அவர்களுக்கு ஆண் மார்பகங்கள் முளைக்கின்றன. வெளியே சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு பல ஆண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இத்தகைய ஆண்/பெண்களுக்கு விந்தணுக் குறைபாடு, கருமுட்டைக் குறைபாடு போன்ற சிக்கல்களும் நேரும்.
இந்த நோய் ஏன் வருகிறது எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் தற்போது அதற்குக் காரணம் இன்சுலின்தான் எனக் கண்டறியபட்டுள்ளது.
தானியம் மற்றும் மாவுச்சத்து உள்ள உணவுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரித்து ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்பட்டு கருமுட்டைகளும், கருப்பையும் பாதிப்படையும் நிலை உருவாகிறது. இதனால் பி.சி.ஓ.எஸ் வியாதி ஏற்படுகிறது. அதனால் மருத்துவர்கள் இன்சுலினின் ஆட்டத்தைக் குறைப்பதற்காக சர்க்கரை மருந்தான மெட்பார்மினைக்கூட இதற்குப் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை இல்லாமல் மெட்பார்மினை உண்ண வேண்டியதில்லை. ஆனால், நம் மக்களுக்கு வழக்கமான தானிய டயட்டை விட முடியாது. இதனால் இன்சுலின் கட்டுப்பாடும் சாத்தியமாவதில்லை. எனவே மருத்துவர்களுக்கும் வேறு வழி இருப்பதில்லை!
ஹார்மோன் சமநிலை தவறுவதற்கு முக்கிய காரணம் - உணவில் போதுமான அளவு கொலஸ்டிராலும் ஊட்டச்சத்தும் இல்லாததே. இன்னொரு முக்கிய காரணம் - வைட்டமின் டி3 பற்றாக்குறை. கொலஸ்டிரால்தான் ஹார்மோன்கள் அனைத்துக்கும் அரசன். அதை மூலப்பொருளாகக் கொண்டுதான் உடல் போதுமான ஹார்மோன்களைத் தயாரிக்கிறது.
இத்தகைய குறைபாடு உள்ள பலரும் பேலியோ உணவு மூலம் தங்கள் குறைகளைப் போக்கியுள்ளனர். குழந்தைபேறும் அடைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதனால் இதுபோன்ற சிக்கல்கள் உள்ளவர்கள் தானிய உணவைத் தவிர்த்து, இன்சுலின் சுரப்பைக் குறையவைக்கும் பேலியோ உணவுகளை உண்ணுவதன் நிவாரணம் பெறலாம்.
பி.சி.ஓ.எஸ் இருக்கும் சைவப் பெண்கள் குறைந்தபட்சம் முட்டை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், ஹார்மோன்கள் அனைத்தையும் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள், முட்டையில் உள்ள கொலஸ்டிரால் என்பதால் முட்டை உண்பது நிறைய பலன்களை அளிக்கும்.
இதற்குப் பரிந்துரைக்கப்படும் (முட்டையுடன் கூடிய) சைவ பேலியோ டயட்:
தினமும் 100 கிராம் பாதாம்
கீரை, காய்கறி அடங்கிய குழம்பு. காளிபிளவர் அரிசியுடன்.
சீஸ் 50 கிராம் அல்லது 2 கோப்பை முழுக்கொழுப்பு உள்ள பால்
3 அல்லது 4 ஆர்கானிக்/நாட்டுக்கோழி முட்டை
பசுமஞ்சள் பச்சையாக தினமும் அரை டீஸ்பூன் மற்றும் பச்சைப் பூண்டு
பனீர் டிக்கா, காய்கறி சூப்
அரிசி, கோதுமை, தானியம் போன்றவற்றை அறவே தவிர்க்கவேண்டும். ஹார்மோன்களைச் சீர்குலைய வைக்கும் சோயாபீன்ஸ் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும்.
மதிய வேளையில், நேரடி வெயில் தோலில் படும்வண்ணம் 15 - 20 நிமிடம் வெயிலில் நிற்பது நன்று. மதியம் 11 மணி முதல் 1 மணி வரை உள்ள வெயில் இதற்கு உகந்தது. தலைக்கு வெயில் தாக்காமல் இருக்க தொப்பி அணியவும். வெயில் அதிக அளவில் நம் உடலில் படவேண்டும் என்பதால் அதற்கேற்ற உடை அணியவும்.
தானிய உணவு, மாவுச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்த்து பேலியோ டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் ரத்த சோகை, பி.சி.ஓ.எஸ் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.

Friday, February 05, 2016

Vethathiri Maharishi Meditation in Tamil and EnglishBe Blessed by the Divine
Meditation in Tamil / English
தமிழ்
English
No. of Times
Remarks
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Be bless around the world; be blessed by the divine


குரு வாழ்க குருவே துணை
Greetings to the  Guru & may Guru lead us


இறை வணக்கப் பாடல்  
Song for the Divinity


குரு வணக்கப் பாடல்
Song for the Guru


நாம் அமர்ந்துள்ள இடத்தைச் சுற்றிலும் நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின
May the divine  power purify the atmosphere around us  
3

அருட்பேராற்றல் உடலிலே உயிரிலே அலை அலையாகப் பாய்வதை உணர்கிறோம்
May the divine power descends upon our body and soul
3

அருட்பேராற்றல் இரவும், பகலும், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக
May the divine power be helpful, protective, guiding day and night, at all times, at all places  and  all endeavors


அன்னைக்கு வணக்கம் தந்தைக்கு வணக்கம் ஆசான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு குரு வணக்கம்
Salutations to mother, father and Guru 


தவம் : <தவத்தின் பெயர்>
We are going to start meditation


தவத்தை நிறைவு செய்ய இருக்கிறோம். சங்கல்பம்:
அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம், நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வோம்
We are going to conclude our meditation
Auto suggestion:
By the grace of Almighty we all may enjoy good health, long life, prosperity wisdom and peace
3


வாழ்க்கைத் துணையை வாழ்த்துவோம்
Blessings to the life partner

All should say by themselves -  not loudly “Be blessed by the divine”
பெற்ற மக்கட்செல்வங்களை வாழ்த்துவோம்
Blessings to the  children one by one

As above
உடன்பிறந்த சகோதர சகோதிரிகளை வாழ்த்துவோம்
Blessing to brothers and sisters

As above
நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும் வாழ்த்துவோம்
Blessings to close relatives and friends

As above
தொழில் துறையிலே தினசரிக் கடமைகளிலே நம்முடம் நெருங்கிய தொடர்புடைவர்களையும் வாழ்த்துவோம்
Blessings to those who help us in our daily routines and business endeavors

As above
இன்னல் புரிவோர் எதிரிகளாக நினைப்போர் எவரேனும் இருப்பின் அவர்கள் மனம் திருந்தி நல்வாழ்வு பெற அன்பும் கருணையோடும் வாழ்த்துவோம்
Blessings to those who think us as enemies, with love and kindness

As above
ஆசான் அருட்தந்தை அருளிய வேதாத்திரியம்  (வாழ்க வளமுடன் அனைவரும்)
Vethathirism

All should say loudly “Be blessed by the Divine”
உலக சமுதாய சேவா சங்கம்  (வாழ்க வளமுடன் அனைவரும்)
SKY Trust

As above
ஆழியார் அறிவுத் திருக்கோவில்  (வாழ்க வளமுடன் அனைவரும்)
Temple of consciousness, Aliyar

As above
மகானின் மணிமண்டபம்  (வாழ்க வளமுடன் அனைவரும்)
Memorial hall of the Guru

As above
பேங்காக் தவ மையம் (வாழ்க வளமுடன் அனைவரும்)
Bangkok mediation centre

As above
ஸ்ரீரிராச்சா தவ மையம் (வாழ்க வளமுடன் அனைவரும்)
Sriracha mediation centre

As above
AIT தவ மையம் (வாழ்க வளமுடன் அனைவரும்)
AIT mediation centre

As above
இரண்டோழுக்கப் பண்பாடு:
நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தரமாட்டேன் துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன் (அனைவரும்)
Two fold morale:
I will not hurt anybody in body or mind and help those who are in need
3
All should say loudly two fold morale
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
Be blessed by the divine


உலக நல வேட்பு:
உலகிலுள்ள பொறுப்புடைய ..... (அனைவரும்)
World welfare song: May the world leaders understand the dignity of self and attain self realization.

May all of them unite and form powerful One world government to protect the borders of all the countries

May all the people live without fear of war and perform their duties

May the entire world enjoy prosperity, happiness and peace


All should sing world welfare song loudly
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
Be blessed by the divine


மழை வாழ்த்து:
எரி குளம் கிணறு ....
(அனைவரும்)
Rainfall song:
May there be adequate rain water filling to the brims of all the water bodies in the world.
3
All should sing rainfall song loudly
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
Be blessed by the divine


நம் மனதினுள் அமைதி நிலவட்டும் நம்மைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும் உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்
அமைதி அமைதி அமைதி
May there be peace within us, among us and in this world. PEACE, PEACE, PEACE
Wednesday, January 27, 2016

அசைவ உணவுகளும் - பலன்களும்

ப்போது ‘அசைவம் நல்லதா, கெட்டதா?’ என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில்  பட்டையைக் கிளப்புகிறது அந்த விவாதத்துக்குள் போவதற்கு முன் மிக முக்கியமாக ஒரு விஷயத்தை மனதில் பதிந்துகொள்ளுங்கள். இப்போதைய சுத்த சைவர்களின் பாட்டன், முப்பாட்டன், முந்தைய தலைமுறையினர் எல்லாம் காடைக் கறி, கவுதாரி ரத்தம், சுறாப் புட்டு சாப்பிட்டுத்தான் பரம்பரையை நீட்சியடையவைத்தனர். பண்டைய தமிழரும் சரி தமிழ்ச் சித்தர்களில் பலரும் சரி புலால் உணவை விருந்தாக மருந்தாகப் போற்றியிருக்கின்றனர். 

ஆடு, ஆமை, மூஞ்சுறு, முதலை வரை நாம் யூகிக்க முடியாத உயிரினங்களை எல்லாவற்றையும் பிடித்து நம் முன்னோர்கள் சாப்பிட்டு வெளுத்துக்கட்டியிருக்கின்றனர்.  புலால் உணவின் புரட்டப்படாத பக்கங்கள் நம் வரலாற்றில் ஏராளம். ‘ஈசலைக்கூட சீனாக்காரன் விட்டுவைக்க மாட்டான். வறுத்துத் தின்றுவிடுவான்’ என நம்மவர்கள் கேலியாகச் சொல்வார்கள். ஆனால், 
‘செம்புற்று ஈயலின் இன் அலைப் புளித்து மெந்தினை யாணர்த்து நந்துக் கொல்லோ’ 
என்ற சங்க இலக்கியப் பாடல் வரிகள் நம் முன்னோர்கள் ‘ஈசல் ஊத்தப்பம்’ சாப்பிட்டார்கள் என்பதை உணர்த்துகிறது என அவர்களுக்குத் தெரியாது.

காடை 
மருந்துகள் தராத ஊட்டம் சில புலால் விருந்து தரும். காடை இறைச்சி எனும் QUAIL FLESH அப்படியானது. 
‘கட்டில் கிடப்பார்க்கு காட்டில் படும்காடை’ 
என காடை இறைச்சியின் அருமை பெருமைகளை அடுக்குகிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. ஆஸ்துமா, அல்சர் போன்ற நோய்களைப் போக்குவதுடன் வற்றலாக சோகை பிடித்திருக்கும் நபர் காடைச்சோறு சாப்பிட்டால் கட்டழகன் ஆவான் என்கிறது நம் பண்டைய தமிழ் நூல்கள்.

‘கால் ஆடு, அரை முயல், முக்கால் உடும்பு, முழு காடை' என, ஒரு பிரபல சொலவடை காடையின் பெருமையைச் சிலாகிக்கிறது. அதாவது ஒரு காடை என்பது, ஆட்டு இறைச்சி சத்தின் கால் பங்கும் முயல் இறைச்சியில் அரைப் பங்கும், உடும்பில் முக்கால் பங்கும் கொண்டதாம். காடை முட்டைக்கு, கோழி முட்டையைவிட மூன்று முதல் நான்கு மடங்கு சத்து அதிகம். மூளைக்கு அவசியமான சத்தில் தொடங்கி, விட்டமின் பி1, பி12 என அத்தனை சத்திலும் கோழியை விஞ்சுமாம் காடை.

ஆடு
வெள்ளாடும் வரையாடும் கூட  நம் முன்னோர்கள்  சாப்பிட்டவை. ‘உள்ளாடும் நோயெல்லாம் ஓட வைக்கும்’ எனப் பாடப்பட்ட வெள்ளாட்டுப் புலாலை,  பிற உணவுகளை மருந்துக்குப் பத்தியமாக ஒதுக்கிவைக்கவேண்டிய நோய் தருணங்களிலும்கூட, சாப்பிடக்கூடிய உணவாக குறிப்பிட்டிருக்கின்றனர்.

குறிப்பாக, விட்டமின் பி12, அதிகப் புரதம், இரும்புச்சத்து என அத்தனையும் தரும் இந்த இறைச்சி. வெள்ளாட்டு ஈரல், இரும்புச்சத்து குறைவாக உள்ளோருக்கு அத்தியாவசியம். இரும்புச்சத்தை உட்கிரகிக்கத் தேவையான ஃபோலிக் அமிலமும், பி12 உயிர்ச்சத்தும் வெள்ளாட்டு ஈரலில்தான், பிற எந்த உணவைக் காட்டிலும் மிக அதிகம்
.
மீன்
நம் உடல் தானே உற்பத்தி செய்துகொள்ள முடியாத அமினோ அமிலங்கள் சிலவற்றை மீன்கள்தான். ஏகப்பட்ட புரதங்களோடு கூடவே அயோடின் முதலான தாது கனிமங்களையும் சேர்த்துத் தருபவை மீன்கள். தசைக்கு புரதம், எலும்புக்கு கால்சியம், மூளைக்கு ஒமேகா-3, ரத்தத்துக்கு இரும்பு, இதயத்துக்கு சோடியம், பொட்டாசியம் என உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச்சத்து தருவது மீன்கள் 

நீர் தேங்கி நிற்கும் குளம், கிணறு முதலான நீர்நிலை மீன்களைவிட, நீர் ஓடிக்கொண்டே இருக்கும் ஆறு, கடலில் உலாத்தும் மீன்களைத்தான் பழந்தமிழ் இலக்கியங்கள் பந்திக்குப் பரிந்துரைக்கின்றன. ஏரி மீன் மட்டும் இதில் விதிவிலக்கு. 

சுறாப் புட்டு, பிரசவித்தத் தாய்க்கு பால் ஊறச் செய்யும், விரால் மீனின் தலைக் கல், கண்களில் விழும் பூவை நீக்கும், குறவை மீன் மூட்டுவலி போக்கும் இயல்பு நிரம்பியது என்கிறது சித்த மருத்துவம். ஆற்று மீன்களில் விராலையும் கடல் மீன்களில் வஞ்சிரத்தையும் சிறப்பாகச் சொல்கின்றன பழந்தமிழ் இலக்கியங்கள். அரை முதல் முக்கால் மீட்டர் நீளத்துக்கு வளர்ந்த வஞ்சிரம் மீனில்தான் சுவையும் சத்தும் அதிகம் .

கண் நோயில் இருந்து புற்றுநோய் வரை தடுக்கும் அந்த எண்ணெய், நெடுநாளாக வதைக்கும் மூட்டு வலி, திரும்பத் திரும்ப வரும் சிறுநீரகக் கற்கள் நோய்க்கும்கூட நல்லது.


கோழி அல்லது மட்டன் ஆகிய இரண்டையும் நேரடியாக, இறைச்சிக் கடையில் இருந்து புதிதாகப் பெறுவதுதான் உத்தமம். ஃப்ரீஸரில் வைத்திருப்பதில் தொற்று நுண்கிருமிகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். அதுவும் இறைச்சியை நன்கு கழுவுவதால்கூட அந்தக் கிருமிகள் போகாது. சமையல் கொதிநிலையில் வேகும்போதுதான் கிருமி நீங்கும்.

கோழியாக இருந்தால் குறைந்தபட்சம், 165 டிகிரியைத் தாண்டி வேகவைப்பது மிகமிக அவசியம். பிற இறைச்சிக்கு இந்த உஷ்ணநிலை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.

தும்மல், இருமல், வியர்வை என பல வழிகளில் கிருமிகள், இறைச்சி வெட்டும் நபரிடம் இருந்து இறைச்சிக்கு வரலாம். அவை சரியாக வேகவைக்கப்படாதபோது, கிருமிகள் வளர வாய்ப்பு தரும். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் கிருமியின் அளவு இரட்டிப்பு ஆகும். அந்தக் கிருமிகள் வளர ஏதுவான 37 டிகிரி வெப்பநிலை உடலுக்குள் நிலவுவதுதான் காரணம் என்கிறார்கள்.


நன்றி: மருத்துவர்.கு.சிவராமன்
Related Posts Plugin for WordPress, Blogger...