Search This Blog

Tuesday, August 28, 2012

எளிய முறை உடற்பயிற்சி


மனிதன் இன்பத்தையும், துன்பத்தையும் உடலால் அனுபவிக்கிறான். அப்படியானால் இந்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக மிக அவசியம் இல்லையா? 

தினமும் வீட்டில் சமையல் செய்கிறோம். அடுத்த நாள் மீண்டும் சமையல் செய்ய வேண்டுமானால் அந்த பாத்திரங்களை சுத்தம் செய்தால்தானே மீண்டும் உபயோகிக்க முடியும். அது போலவே மனிதன் தினமும் இந்த உடலால் பலவற்றையும் அனுபவிக்கிறான். மீண்டும் அந்த உடலை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் உடற்பயிற்சி அவசியமாகிறது.  

உடற்பயிற்சி என்பது பாத்திரத்தை சுத்தப்படுத்துவது போல உடலை சுத்தப்படுத்துகிறது. எவ்வாறெனில்,  நமது உடலுக்கும் உயிருக்கும் இடையே ஒத்த உறவு , நன்முறையில் நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சரியாக இருக்க வேண்டும். இதை உடற்பயிற்சி தருகிறது.

இவ்வாறான ஒரு உடற்பயிற்சி முறையை  8 வயது குழந்தை முதல் 80 வயதான பெரியவர்கள் வரை யாரும் செய்யும் வகையில் இயற்கையையொட்டி மனதோடு இணைந்த பயிற்சியாக மிக எளிமையாக வடிவமைத்துள்ளார் வேதாத்திரி மகரிஷி. இந்த உடற்பயிற்சியை அரை மணிநேரத்தில் எந்த ஒரு கருவிகளும் இல்லாமல் உடல் உறுப்புக்களை மட்டுமே வைத்து செய்யலாம்.  கடினமான ஆசனங்கள் எதுவும் இல்லாமல் முழுப்பலனையும் இந்த எளியமுறை உடற்பயிற்சியினால் அடைய முடியும் என்பது இதன் சிறப்பம்சம். 

உடலில் உள்ள உள்உறுப்புகளான குடல், சிறுநீரகம், வயிறு, நுறையீரல், இருதயம் என அனைத்துக்கும் இப்பயிற்சி உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள், பிரஷர் உள்ளவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் இப்பயிற்சியை முறையாக செய்து பெருமளவில் பயனடைந்துள்ளனர் என்பது கவனிக்க வேண்டிய மிக முக்கியமானதாகும். உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இந்த ஓட்டங்களை சரிப்படுத்திக் கொள்ளலாம். 

அருட்தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறை உடற்பயிற்சியில்
  • கைப் பயிற்சி
  • கால் பயிற்சி
  • தசைநார், நுரையீரல் பயிற்சி
  • கண் பயிற்சி
  • கபாலபதி
  • மகராசனம்
  • அக்கு பிரஷர், மசாஜ் பயிற்சி
  • உடல் தளர்த்தல்
ஆகிய பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.

In English: 

The system of physical exercises developed by Shri Vethathiri Maharishi after years of intense research, fulfills the need of maintaining the proper circulation of blood, heat, air, energy and bio-magnetism, ensuring maintenance of health and prevention of disease in a gentle way. It develops the immunity system and thus acts as a preventive and as a curative to various diseases.

The exercises taught are

Hand Exercises:

* Hands and shoulders are strengthened.
* Arthritis, Numbness, Trembling of hands, Pain in the joints etc. are reduced and possibly cured.
* Improves the functioning of lungs.

Leg Exercises:

* Blood circulation gets regulated in all parts of the legs and abdomen.
* Is curative and preventive for sciatica and arthritis.
* By giving pressure to the toes and sole, important organs of the body such as heart, lungs, intestines and brain are activated.

Breathing Exercises:

* Strengthens the lower abdomen muscles.
* Ventilates the lungs and purifies the blood.
* Oxygenises all the glands and organs.
* Helps curing headache, insomnia, asthma and other bronchial troubles.
* Improves grasping power and memory power.

Eye Exercises:

* Helps to improve defective eyesight by toning the nerves and tissues around the eyes.
* Prevents eye strain, burning sensation and other eye diseases.

Kapalabhati:

* Clears the congestion in the nasal passage.
* Helps to cure sinusitis.

Makarasana:

* Regulates the endocrine system.
* Keeps the spine and spinal nerves flexible and healthy.
* Strengthens the backbone and the spinal cord.
* Reduces the excessive sugar in urine and blood.
* Removes unwanted flesh and strengthens the body.
* Regulates the menstrual system.

Acu pressure:

* Blocks due to short-circuit of electrical energy is removed.
* Is a preventive for heart ailments.
* Is helpful in alleviating insomnia.

Massaging:

* Removes tension in all the important organs (liver, spleen, intestines, kidneys, pancreas).
* Refreshes and tones the sense organs, facial nerves and vital organs.

Relaxation:

* Brings down blood pressure.
* Removes recurrence of heart trouble.
* Gives a wholesome rest to the entire system.

All these exercises do not harm any part. Do not take more time.

All exercises except a few, need to be done by closing the eye. Because, one has to take his mind to the part where his/her concentration should lie. Movements should be soft and gentle. There would not be any sweating. It is another form of meditation.

Contact / தொடர்புக்கு: http://www.vethathiri.edu.in/

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...