Search This Blog

Friday, December 02, 2011

ஷாப்பிங் போறீங்களா, உஷார்!

ஷாப்பிங் போகும் ஆண்களே, ரொம்ப கவனம். அதனால் ஒரு 'இம்பார்ட்டன்ட்' பிரச்சினையை சந்திக்க நேரிடும் - அதுததான் 'இம்பொடன்சி'.
.

வர்த்தக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவற்றுக்குப் போகும்போது அங்குள்ள கேஷ் கவுன்டர்களில் தரப்படும் ரசீதுகளில், அதாவது அந்தத் தாள்களில் பிஸ்ஃபெனால் ஏ (Bisphenol A (BPA) என்ற ஆபத்தான பொருள் அடங்கியிருக்குமாம். அதை தொடும் ஆண்களுக்கு அந்த பொருள் நமது உடல்மூலமாக ஊடுறுவி, செக்ஸ் ஹார்மோன்களை செயலிழக்க வைத்து விடுமாம்.
இந்த வேதிப் பொருளை பிரின்டர்களில் பயன்படுத்தப்படும் மையில் கலநது விடுகிறார்கள். அதாவது பளிச்சென எழுத்துக்கள் தெரிய வேண்டும் என்பதற்காக இவ்வாறு பிபிஏவை மையில் கலக்கிறார்கள். ஆனால் இது ஆண்களின் பர்ஸை மட்டுமல்ல, எல்லாவற்றையும் காலி செய்து விடும் ஆபத்து இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

இந்த வேதிப் பொருள் அடங்கிய ரசீதை வாயில் வைப்பது, கையால் தொடுவது உள்ளிட்டவற்றின் மூலமாக நமது உடலுக்குள் இது போகிறதாம்.


ஷாப்பிங் செல்லும் பழக்கம் அதிகம் உடைய ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எழுச்சியின்மை, விறைப்புத்தன்மை குறைவு போன்றவற்றுக்கும் இது இட்டுச் செல்லும்.இது மட்டுமல்லாமல் மார்பகப் புற்றுநோய், இதய நோய்கள், உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளிட்டவையும் கூட வரும் வாய்ப்பு உள்ளது.

இந்த வேதிப் பொருளுக்கு அமெரிக்கா, கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளது.எனவே ஆண்குலமே, ஷாப்பிங் போகும்போது ரொம்பக் கவனம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...