Search This Blog

Saturday, December 10, 2011

வருமான ஏற்றத்தாழ்வு

வளரும் நாடுகளில் இந்தியாவில்தான் வருமான ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டில் இது 2 மடங்கு உயர்ந்திருக்கிறது. குறைந்த வருமானம் பெறுவோரைவிட, அதிக வருவாய் பிரிவினர் 12 மடங்கு அதிக வருமானம் பெறுகின்றனர். வளரும் நாடுகளில் வருமான ஏற்றுத்தாழ்வு குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு விரிவான ஆய்வு நடத்தியது. அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1990ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மிக குறைந்த வருமானம் பெறுபவரை விட, மிக அதிக வருமானம் ஈட்டும் நபரின் வருமானம் 6 மடங்கு அதிகமாக இருந்தது. அது சமீபத்திய கணக்கெடுப்பில் 12 மடங்காக உயர்ந்துள்ளது. இது 20 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்வு. அதிக வருமானம் பெறுவோர் & மிக குறைந்த வருமானம் ஈட்டுவோர் இடையே ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிரந்தர பணி மற்றும் குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற இரு பிரிவினருக்கும் இடையே வருவாயில் அதிக ஏற்றத்தாழ்வு உள்ளது.

இந்த விஷயத்தில் வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரப்படி வருமான ஏற்றத்தாழ்வில் தென்ஆப்ரிக்கா மோசமான நிலையில் இருந்தது. இப்போது அந்நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வு 50 சதவீதம் குறைந்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள், நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் இந்தியாவில்தான் அதிகம். வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள், நடமாடும் வர்த்தகர்கள், துணை ஒப்பந்தம் மூலம் வேலை பெறும் தொழிலாளர்கள் ஆகியவற்றில் நிலையான வருமானம் இல்லாததால் வருமான ஏற்றத்தாழ்வு விரிவடைகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...