Search This Blog

Tuesday, August 02, 2011

நல்ல டாக்டர்கள் `இருவர்'


1

நலவாழ்வு வாழ நீங்கள் நாட வேண்டிய `இயற்கை' மருத்துவர்கள், இரண்டு பேர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உடல் நலனைக் கட்டிக்காப்பதில் கைதேர்ந்த `நிபுணர்கள்'. அவர்கள் யாரென்று அடையாளம் தெரிய இதோ அவர்கள் முகவரி...
காலையில் எழுந்ததும் இவரிடம் உடலைக் காட்டுவதுதான், நமது உடலை `செக்கப்' செய்து கொள்ளும் செலவில்லாத வழி. அவர் உடனே பல வியாதிகருக்கு தடுப்பு மருந்தை உடலில் செலுத்தி விடுவார். காசு எதுவும் கேட்க மாட்டார். அந்த டாக்டர் வேறு யாருமல்ல `சூரிய'பகவான்தான்.
`சூரிய ஒளி புகாத வீட்டில் டாக்டர் நுழைவார்' என்பது பழமொழி. சூரிய ஒளி உடலுக்கு என்னென்ன நலன்களைத் தருகிறது தெரியுமா?
* சருமத்திற்கு பொலிவு தருகிறது. உடலில் நோய் எதிர்ப்பு பணியைச் செய்யும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகம் உற்பத்தியாக உதவுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* சூரிய ஒளி, உணவு செரிமானத் தன்மையை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கழிவுகளை வெளியேற்ற உதவும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் துணை புரியும்.
* உடல் ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் `வைட்டமின் டி` கிடைக்கச் செய்கிறது. சமீபத்திய ஆய்வில், மாலை இளம் வெயிலில் நடைபயணம் செய்வது ஆண்மை வீரியம் கிடைக்க உதவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
* காலை மாலை இளம் வெயிலின் மூலம் உடலில் சூரிய ஒளி படுவதால் புற ஊதாக் கதிர்கள் உடலில்படும். அது வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. உச்சி வெயிலில் கிடைக்கும் அதிகமான புற ஊதாக்கதிர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
* சூரிய ஒளி படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* நலத்துடன் வாழ விரும்புபவர்கள் காலை, மாலை வெயிலில் சிறிது நேரம் (குறைந்தது 10 நிமிடங்கள்) உலவும் படியான பணிகளைச் செய்தாலே போதும். இந்த நன்மைகளெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும்.
2
கசப்பில்லா மருந்து தருவது இவரின் வாடிக்கை. எனவே அனைவரும் மகிழ்ச்சியுடனே இவர் தரும் மருந்தை சாப்பிடுவார்கள். நோயில்லாத நேரங்களிலும் எல்லாரும் இந்த மருந்தைச் சாப்பிடுகிறார்கள். மற்ற மருந்துகள் ஒரு நாளைக்கு ஒரு டோஸ், 3 டோஸ் என்றால் இந்த மருந்தை தினமும் 8 முதல் 10 டோஸ் (டம்ளர்) சாப்பிடலாம். அத்தனை சர்வசஞ்சீகை மூலிகை அது.
புரியவில்லையா... தண்ணீர்தாங்க அந்த மருத்துவர்.
இயற்கை தந்த அற்புத மூலிகை இது. உடல் அதிகப்படியாய் இருப்பது தண்ணீர்தான். உடலில் ஒவ்வொரு செல்லும் பாதிக்குமேல் தண்ணீரைக் கொண்டிருக்கிறது. தண்ணீர் உடலை எவ்வாறெல்லாம் வளப்படுத்துகிறது தெரியுமா?
* சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் அடங்கிய எலக்ட்ரோலைட் என்னும் மூலக்கூறு உடல் இயக்கத்துக்கு அவசியமானது. போதிய தண்ணீர் கிடைத்தால்தான் உணவுகளில் இருந்து எலக்ட்ரோலைட் கிடைக்க ஏதுவாகும். இல்லாவிட்டால் செல்கள் வறண்டுவிடும் அல்லது மாண்டுபோகும்.
* உடல் தளதளவென்று அழகு பெற தண்ணீர் அவசியம். உடலில் கொலஸ்டிரால் (கெட்ட கொழுப்பு) அதிகமாகாமல் தடுக்கும்.
* தினமும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு 2 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* தண்ணீர் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும். இதயம், மூளைக்குச் செல்லும் தமனிகள் தடையின்றி செயல்பட உதவும்.
* மூளை 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் பருகுவதற்கேற்ப மூளை புத்துணர்ச்சி பெறும். இதனால் நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். நினைவுத்திறன் அதிகரிக்கும். ஞாபகமறதி வியாதிகள் ஏற்படாமல் தடுக்கும்.
* தினமும் குறைந்தது 8 டம்ளர் (2 லிட்டர்) நீர் பருகுவது ஆரோக்கியத்திற்கு அவசியம். உங்களின் தாகத்தில்தான் உடல் ஆரோக்கியத்தின் தாக்கம் இருக்கிறது என்கிறார் புளோரிடா மருத்துவ நிபுணர் பத்மாங்கலிட்ஜ்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...