Search This Blog

Tuesday, January 22, 2013

பெரு வயிறு குறைய* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.


4 comments:

 1. நமது அழகான உடலின் அழகை அட்டகாசமாக மெருகூட்டுவது எது தெரியுமாங்க ? நிச்சயமாக ‘தொப்பை’ யாகத்தான் இருக்கும் !

  என்ன ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், சிரிப்பாகவும், கிண்டலாகவும் இருக்குதா... வேணும்டா... நம்மூர் நகைச்சுவை பாணியிலே “PhD” அல்லாத ஆய்வுக்கு இதை உட்படுத்தாலமுங்க...

  சரியா ?

  1. முதலில் ஆளில்லா ஓர் அறையின் சுவர் எதிரே நிண்டுகொள்ளவும்.

  2. கண்டிப்பாக குனியாமல் நேராக நிண்டுகொள்ளவும்.

  3. அப்படியே கண்ணை சைலண்டா மூடிக்கொள்ளவும்.

  4. அப்படியே சத்தம் போடாமல் மெதுவாக நடந்து செல்லவும்.

  5. சிறிது தூரம் நடந்து சென்றவுடன் சுவரில் “அம்மா’, ‘ஆத்தா’ ‘ஐயோ’ என்ற சப்தம் போட்டு மோதி நிற்பீர்கள்.

  6. அப்படியே வலியையும், அழுகையையும் அடக்கிக்கொண்டு மெதுவாக கண்களை திறந்து பார்க்கவும்.

  7. இப்ப சொல்லுங்க உங்கள் உடலின் எந்த பாகம்ங்க சுவரில் மோதி ஈக்கிது ?


  கண்டிப்பாக மலை விழுங்கி தொப்பையே........ எப்பூடி நம்ம ஆய்வு ( ? ! )
  என்னதாங்க பயன் ?

  1. கீழே குப்புற விழுந்து மண்ணைக் கவ்வும்போது முகத்தில் அடிபட்டு மூக்கும், சோடாப்புட்டி கண்ணாடியும் உடையாமல் நம்மை காப்பாத்தும்ங்க.

  2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்தும்ங்க . உதாரணமாக பெரிய பெரிய தொப்பையைக் கொண்ட “மாமுலா”ன போலீசாரைக் கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்துதுங்க.

  3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் பயன்படுதுங்க...உதாரணமாக வேலையில்லாமெ ச்சும்மா தில்லா வெட்டியா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொப்பையை மெதுவா தட்டிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாதுங்க.

  4. உறங்கும்போது குறட்டையை வரவழைத்து அருகிலுள்ள நம்ம பக்கத்து பெட்டு எதிரிகளை ( ! ? ) படுக்க விடாமல் தடுக்கலாமுங்க.

  5. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் ஏறி சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்ங்க.

  6. கூகுள் பேராண்டிகள் ஆழ்ந்து அயர்ந்து படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட யாஹு “அப்பா”வின் தொப்பையைத் தானுங்க.

  இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொப்பையை வாக்கிங், சைக்கிளிங், ஜாக்கிங் போன்றவற்றை தினமும் சைலண்டா செய்வதை மறந்துவிட்டு...

  நொறுக்குத்தீனிகள், பொரிச்ச கோழிகள், குளிர் பானங்கள், சைடிஸ்கள் போன்றதை மூச்சு முட்ட சாப்பிட்டுவிட்டு...

  கண்டிப்பாக தொப்பையை நாம் போற்றி வளர்ப்போம் ! கண்டதையும் உள்ளே போட்டு வளர்ப்போம் !!

  ReplyDelete
 2. பயனுள்ள பதிவு !

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. நல்ல பயனுள்ள பதிவு.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...