திருமண உறவு நிலைத்திருக்க
- கணவன் அல்லது மனைவி இருவரும் தன் துணையின் மேல் ஆளுமை / ஆதிக்கம் செலுத்துவதைவிட்டு அன்பு செலுத்தவேண்டும். ஆளுமை / ஆதிக்கம் ஒரு போதை.
- சூழ்நிலைக்கு ஏற்ப குடும்ப பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் பொறுப்புக்களை உணர்ந்து உடனுக்குடன் நிறைவேற்றுங்கள்.
- துணையின் இயலாமையை விமர்சனம் செய்யாதீர்கள். புரிந்துகொள்ளுங்கள்.
- நாம் மற்ற விசயங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை தன் துணையின் சிறு சிறு உணர்வுகளுக்கும் தரவேண்டும். சிறு விரிசல்கள் தான் ஒரு நாள் மொத்தத்தையும் தகர்த்துவிடும்.
- எப்போதும் நாம் நம் துணைக்கு மருந்தாக இருக்கவேண்டுமே தவிர ஒரு போதும் பிணியாக மாறக்கூடாது.
- அல்ப காரணங்களுக்காக திருமண உறவில் இருந்து பிரிந்து செல்வது தற்கொலைக்குச் சமமானது.
- கணவன் அல்லது மனைவி இருவரும் ஒரு குடும்ப எல்லையை வகுத்துக்கொண்டு அதற்குள் மற்ற உறவுகளின் ஆதிக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும்.
- பேசுங்கள். மனது விட்டு அன்புடன் பேசுங்கள். ஒரு துணை பேச ஏங்கும்போது தவறாமல் பேசுங்கள். நீங்கள் பேசும் விசயம் உங்களின் துணையை காயப்படுத்தும் என்றால் தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள். நிச்சயம் நீங்கள் பேச விரும்பிய விசயத்தை உங்களின் துணையை காயப்படுத்தாமல் சொல்லமுடியும். கற்றுக்கொள்ளுங்கள்.
- எப்போதும் எக்காலத்துக்திலும் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒருவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அப்படி ஒரு நிலை திருமண வாழ்வில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- உங்களின் குழந்தைகளின் முன்பு தயவுசெய்து சண்டையிட்டுக்கெள்ளாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரின் மேல் உள்ள குற்றம் குறைகளை குழந்தைகளிடம் கூறிக்கொண்டிருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒரு உதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.
- உறவுகள் மற்றும் நண்பர்களில் உள்ள கறுப்பு ஆடுகளை அடையாளம் கண்டுகொள்ளவும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
குறிப்பு 1: இங்கு நான் துணை (துணைவி அல்ல) என்று எழுதியிருப்பது ஆண் மற்றும் பெண் இருவரையும் பொதுவாக குறிப்பிடவே.
No comments:
Post a Comment