ஒபாமா இந்தியாவைப் பற்றியும் நம் அன்னிய மூதலீட்டுக் கொள்கையைப் பற்றியும் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதில் முக்கியமானது நம் நாட்டின் முதலீட்டுச் சூழல் நன்றாக இல்லையென்றும் மிகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது என்பதே.
அமெரிக்க வறட்சியைப் பற்றியும், அதிபர் தேர்தலில் எப்படி ஜெயிக்கலாம், அந் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை, வேலையின்மையை எப்படி சரிசெய்யலாம் என்பதைப் பற்றியும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டிய நேரத்தில் இந்தியாவைப் பற்றிப் பேச நேரமிருக்கிறதென்றால் அமெரிக்க கார்ப்பொரேட் கம்பனிகள் எப்படி
அந்நாட்டை ஆள்கிறது என்பதைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
அந் நாட்டின் கம்பெனிகள் இங்கு நுழைந்து நம் பணத்தை வாரிச்செல்ல சில்லறை வணிகத்திலும் இன்ஸூரன்சிலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்பதே அவற்றின் கோரிக்கை. ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி வென்றுவிட்டால் அடுத்து வரும் நிதி அமைச்சர் அமெரிக்காவின் இந்தக் கொள்கைகளை செயல் படுத்த வேண்டும் என்பதே ஒபாமவின் (வேறு வகையில் சொல்வதென்றால் அமெரிக்கா கார்பொரேட் கம்பனிகளின்) விருப்பம். அதற்காகத்தான் ஒரு நினைவூட்டல் கடிதம் போல முதலிலிலேயே சொல்லிவிட்டார்.
ஆனால் ஒபாமா நம் நாட்டு கம்ப்யூட்டர் கம்பனிகளுக்கு அவுட் சோர்சிங் செய்வதை எதிர்க்கிறார். ஏனெனில் அங்கு வேலை வாய்ப்பு குறைந்து விடுமாம்.
இந்தச் சூழ்நிலையில் நாம் நம் அரசியல் வாதிகளை நம்பாமல் (பெட்டி வாங்கிக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்வர்) எச்சரிக்கையுடன் இருந்து அமெரிக்காவுக்கு அடிமையாவதைத் தடுக்க வேண்டும்.
அமெரிக்கா போன்ற முதாலாளித்துவ நாடுகளில் முதல் சலுகை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், மத ஸ்தாபனங்களுக்கும் தான் !!!
ReplyDeleteyes. if you want to start saving on tax don't be an individual but become corporate. u can hide taxable money in form expense like r&d. you can also boost your expn to avoid paying tax.
Delete