தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு தலைமையில் தமிழக அரசு ஒரு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள 53 சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, 31.08.12 அன்று வெளியிட்டது.
ஒவ்வொரு பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதி, ஆசிரியர்மாணவர்கள் விகிதாச்சாரம் உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, அதிகபட்சமாக எல்.கே.ஜி.க்கு ரூ.31,875ம், பிளஸ்-2வுக்கு ரூ.36000மும் நிர்ணயித்துள்ளார்கள். அதிகபட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ள பள்ளிகள் இரண்டும் சென்னையில் உள்ள பள்ளிகள் ஆகும். குறைந்தபட்ச கட்டணமாக எல்.கே.ஜி.க்கு ரூ.6 ஆயிரமும், பிளஸ்-2வுக்கு ரூ.7 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது
மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளிக்கான கல்விக்கட்டண விவரங்களை (வகுப்பு வாரியாக) தமிழக அரசின் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.