Search This Blog

Sunday, September 13, 2015

முன் ஜென்ம வினைகள்

மது முன்னோர்களின் பாவ புண்ணியங்கள் நமக்கு கருத்தொடராக வந்து விடுகின்றன. வேதாத்திரி மகரிஷி மனிதர்களின் ஒவ்வொரு செயல்களும் அவர்களின் கருமையத்தில் பதிவு பெறும் என்கிறார்.  நம் முன்னோர்களின் பாவப்பதிவுகளால்  நாம் துன்பமடைவதை இளங்கோவடிகள்  ஊழ்வினை  உருத்து வந்து ஊட்டும் என்கிறார்.
 இந்த மாதிரியான முன்னோர்களின் பதிவுகளை நாம் கருவமைப்புப் பதிவுகள் [சஞ்தித கர்மம்] என்கிறோம்

நம் பிறப்பிற்குப் பிறகு நமது செயல்களால் பெறும் பதிகளை மேலடுக்குப் பதிவுகள் [பிராப்த கர்மம்] என்கிறோம். இவ்விரண்டு பதிவுகளும் சேர்ந்து ஒரு மனிதனின் அறிவாட்சித்தரமாக [Personality] அமைகிறது.  

கருவமைப்புப் பதிவுகளும், மேலடுக்குப் பதிவுகளும் இணைந்து நாம் விருப்பப்பட்டு புதிய செயல்களை செய்கொண்டிருப்பது  ஆகாம்ய கர்மம் எனப்படுகின்றது 


4 comments:

  1. நாம் கண்கூடாக பார்த்திராத நம் முன்னோர்கள் செய்ததாக சொல்லப்படும் பாவச் செயல்கள் என்பது சத்த பொய்.

    மதவாதிகளாலும், இவர்களால் மனோவசியம் செய்யப்பட்ட அரச அதிகார சுரண்டல் வர்க்கங்களினாலும் எளிய மக்களின் மனதில் (கற்பனை ) வீணான குற்ற உணர்வுகளை பதிய வைத்து அவர்களை நடை பிணங்களாக மற்றும் அடிமைகளாக ஆக்கி கடைசி சொட்டு குருதிவரை உறிந்து குடிக்கும் திட்டத்துடன் உருவாக்கப்பட்ட சதி திட்டம்தான் நீங்கள் விளக்க முயற்சிக்கும் இந்த ஜென்ம நாடகம்.

    இன்றைய காலத்திலும் நிறைய உலக நாடுகளில் தாம் செய்யாத குற்றத்திற்காக பல மனிதர்கள் மனோவசியம் செய்யப்பட்டு தான்தான் உண்மையான குற்றவாளி என நம்பி சிறைகளில் வாடியும் பலர் மரண தண்டனை வரை பெற்று மடிந்தும் வருகின்றனர்.

    ReplyDelete
  2. இது ஒரு புளுகு என்று நினைக்கிறேன். உலகில் மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் உள்ளன.
    மனிதன் மறுபிறவி என்பதை நம்புவது சிரமமாக உள்ளது. அப்படி பிறந்தாலும் அவர்களின் கர்மா தொடரும் என்பதும் சரியா? முதலில் எது பாவம் எது புண்ணியம் ? இதை யார் தீர்மானிப்பது. பார்ப்பான் இன்று வரை தொடர்ந்து தமிழர்களை அழித்தும் ஒழித்தும் வந்து கொண்டு உள்ளான்.. அவன் செய்வது சரியா :? அவர்கள் வாழ்வில் தொடர்ந்து எல்லா ஏற்றமும் பெற்று வாழ்கின்றனரே? இன்னும் பத்து பிறவிக்கு பிறகு அவன் அனுபவிப்பான் என்பது மிக பெரிய புளுகு. இன்றைய IT கம்பெனிகளில் வேலை வாங்க ஒரே தகுதி பார்பான் ஆக இருக்க வேண்டும். கடவுள் இவர்கள் பக்கம் என்று சொல்லி , மற்றவர் வாழ்வை குலைப்பது சரியா? மிருகத்தை பல வழிகளிலும் வதைகின்றனர் ? பால் வேண்டும் என்று ஊசி போட்டு கொடுமை படுத்தி மிசின் வைத்து பால் எடுகின்றனர். மிசின் தரும் வலி எவ்வளவு வேதனை. இதற்கு மாட்டை கொன்று தின்பது மேல் , மாட்டிற்கு ஒரே நிமிட வேதனை. பால் எடுக்கிறேன் என்று தினமும் எப்படிப்பட்ட கொடுமை. இது போல் இன்னும் பல ஆயிரம் சொல்ல முடியும். கடவுளை என்று கல்லை காட்டி இன்றும் புளுகி பணம் பிடுங்குகின்றனர். எந்த கோவிலும் பணம் வாங்க கூடாது என்று சொல்லி பாருங்கள்.
    இந்தோனேசியாவில் நம்மாள் கட்டிய கோவிலில் கல் மட்டும் நிற்கிறது. யாரும் கடவுளாக கும்பிடுவதில்லை. அவ்வளவு சிறப்பாக இருக்கும். யாராவது எங்காவது பார்த்தார்களா? பின் எப்படி மனதுக்கு பிடித்த உருவத்தில் செய்து அது வரம் தருகிறது என்று நம்புவது. கடவுள் சாதி பாசம் போன்ற நம்பிக்கைகள் மூளையில் ஏற்படும் கெமிக்கல் வேலை. வேறு ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  3. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. நான் இன்னொரு பதிவு மூலம் விளக்கம் எழுதுகிறேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...