இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி கழுவி ஆறிய வெண்ணீர் விட்டு அரைக்கவும் பட்டு போல் வேண்டாம் மிக்சியின் பஸ்ஸில் இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும்.
அதை எடுத்து டீ வடிக்கட்டும் ஸ்ட்ரெயினரில் தேங்காய் பால் எடுப்பது போல் பிழியவும். அந்த சக்கையை தூர போட வேண்டாம் ஒரு சின்ன கண்டெயினரில் வைத்தால் இரண்டு முன்று நாட்களுக்கு டீ போட உதவும். மிக்சியில் அரைக்கனும் என்றில்லை கேரட் துருவும் கிரேட்டரிலும் செதுக்கி பிழியலாம்.
பிழிந்த சாறை பத்து நிமிடம் அப்படியே வைக்கவும், பத்து நிமிடம் கழித்து மேலோடு இருக்கும் சாற்றை மட்டும் வேறு டம்ளரில் தெளிந்தார் போல ஊற்றவும் வடிக்கட்டியதும் அடியில் வெள்ளை நிற படிவம் படிந்த்து இருக்கும் அதை பயன் படுத்த கூடாது அது நஞ்சு.
அவ்வளவுதான் எடுத்து வைத்துள்ள சாற்றில் தேன் கலந்து கொடுக்கலாம்
Thanks to: http://samaiyalattakaasam.blogspot.in/
No comments:
Post a Comment