அதிர்ச்சியானது.. கவலைக்குரியது.. அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டியது.. என்ன விஷயம் தெரியுமா?
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற கொடுமை!
* 53 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
* பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம்.
* பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம்.
* ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.
* 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் இந்த வயதுதான். 30 சதவீதம் பேர் 13-14 வயதினர்.
குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்கிற வர்கள், பீடோபீலியா (Peadophilea) என்ற வக்கிர புத்தி கொண்டவர்கள். இது ஒரு மனநோயாகவும் கருதப்படுகிறது.
சிறுவர்- சிறுமியர்கள் மூலம் இன்பமடையும் வக்கிரவாதிகள் மேலைநாடுகளில் அதிகம். `சைல்டு செக்ஸ் டூரிசம்' என்ற பெயரில் அவர்களை சில சமூக விரோத அமைப்புகள் ஆசிய நாடுகளுக்கு அழைத்து வருகின்றன. முன்பு தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பாதித்த இந்த பாதகர்கள் இப்போது இந்தியாவில் ஒடிசா, கோவா, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு ரகசி யமாக வந்து `ஆசைகளை' தீர்த்துவிட்டு போகி றார்கள்.
இது தொடர்பான சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களில் 15 சதவீதத்தினர் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்கி றார்கள். 25 சதவீதத்தினர் 16 முதல் 18 வயதிற்கு உள்பட்டவர்கள். 2005-ம் ஆண்டு இந்தியாவில் 44,476 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார் கள். அவைகளில் 11,008 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்கள் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
- குழந்தைகளை எளிதாக ஏமாற்ற முடியும்.
- குழந்தைகள் காட்டிக்கொடுக்காது.
- குழந்தைகளுக்கு விளைவுகளை புரியத்தெரியாது. எதிர்ப்பு தெரிவிக்காது.
- தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குழந்தைகளுக்கு விளக்கத் தெரியாது. விளக்கினாலும் பெற்றோர் அதை நம்பமாட்டார்கள்.
- வயதானவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சும் பாவனையில் வக்கிர செயலில் ஈடுபடும் போது, பெற்றோருக்கு சந்தேகம் வராது.
இப்படிப்பட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித் துக்கொண்டே போகிறது. கற்பனைக்கு எட்டாதவிதத்தில்கூட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வேலைக்காரர்கள், அம்மாவின்- அப்பாவின் நண்பர்களாக வந்து போகிறவர்கள்.... போன்றவர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். புதிய நபர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு.
பயணங்கள், திருவிழா, திருமணவிழாக்களில் உருவாகும் மக்கள் நெருக்கடியை பயன் படுத்தி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்கள் உண்டு. குழந்தை தொழி லாளர்கள், தெருவோரக் குழந்தைகள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவது சாதாரண விஷய மாக மாறிக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள், ஒருசில பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலா வதாக அவர்களுக்கு பால்வினை நோய்கள் உண்டாவதை குறிப்பிடலாம். குழந்தைகளின் `உறுப்பு' பகுதியில் புண்களோ, கட்டிகளோ, சீழ் வடிதலோ இருந்தாலும் குழந்தையின் தாய்க்கு அது பால்வினை நோயின் அடையாளம் என்ற சந்தேகம் வருவதில்லை. ஒருசில மருத்துவர்களும் அது பால்வினை நோயின் அறிகுறி என்பதை உணராமல், வேறு விதமான சிகிச்சைகள் கொடுத்துவிடுவதும் உண்டு.
நன்றாக தெரிந்தவர்களால் குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பு ஏற்படும்போது, அவை களின் உடலில் காயங்களோ, சிராய்ப்புகளோ இருப்பதில்லை. அதனால் பெற்றோரோ, மருத் துவர் றகளோ குழந்தை பலாத்காரத்திற்கு உட்பட்டிருக்கிறது என்று முதலில் நினைப்ப தில்லை. அப்படியே நினைத்து விசாரித்தாலும் குழந்தையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறமுடியாது.
வெளிநபர்களால் பாதிப்பு ஏற்படும்போது காயம், சிராய்ப்பு, உறுப்பு பகுதியில் ரத்தம் வடிதல் போன்றவை காணப்படும். அவசரத்திலும், பயத்துடனும் அந்த பாதகர்கள் செயல்படுவதால் குழந்தைகள் காயம் அடைந்துவிடுகின்றன.
பலாத்காரத்திற்கு உள்பட்ட குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றன. பால்வினை நோய் மற்றும் காயங்களை சிகிச்சையால் குணப்படுத்திவிடலாம். ஆனால் மனநிலை பாதிப்பால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். வயதுக்கு மீறிய பாலியல் மாற்றங்கள், மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, எதைக் கண்டாலும்- யாரைக் கண்டாலும் பயம், தனிமை மீது விருப்பம், உணவில் நாட்டமின்மை, போதை மருந்துகளுக்கு அடிமையாகுதல், வீட்டை விட்டு ஓடுதல், படிப்பில் ஆர்வமின்மை, பாலியல் தொழில் ஆர்வம் போன்றவை முக்கியமான எதிர்கால பாதிப்புகளாகும்.
மக்கள் விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே இந்த பாதகத்தை தடுக்கவோ, குறைக்கவோ முடியும். சமூகத்தின் அடிப்படையில் இருந்து இந்த பணியை தொடங்கவேண்டும். பள்ளி கள், கல்லூரிகள், மருத்துவ துறை, தன்னார்வ அமைப்புகள், அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். தங்கள் தம்பி, தங்கை களை காத்து கண்காணிக்க மூத்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகளின் உடலில் எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது நல்ல தொடுதல் என்றும்- எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது தவறான அணுகுமுறை என்றும் சொல்லித்தர வேண்டும். இதை சரியாக சொல்லித்தர அம்மாக்களாலே முடியும்.
மற்றவர்களின் பிரச்சினைக்குரிய செயல்கள் பற்றியோ, பிரச்சினைக்குரிய நபர்கள் பற்றியோ குழந்தைகள் கூறினால் அதை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். யாரையும் நம்பி குழந்தைகளை விட்டுச்செல்லக்கூடாது. பொது இடங்களில் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த பாதகத்தில் ஈடுபடு கிறவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒரு தனிநபர் பிரச்சினையோ, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்து பிரச்சினையோ இல்லை. இது சமூக பிரச்சினை. அதனால் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து இதை தடுக்கவேண்டும்.
நன்றி: டாக்டர் என்.உஸ்மான் M.D., D.V., Ph.D.,
(பாலியல் நோய் நிபுணர் மற்றும்
உலக சுகாதார நிறுவன ஆலோசகர்) சென்னை.